குக்கீக் கொள்கை
உலாவி குக்கீ என்பது வலைத்தளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் உங்களைப் பற்றிய விஷயங்களை நினைவில் வைக்க உதவும் வகையில் உங்கள் சாதனத்தில் சேமிக்கப்படும் ஒரு சிறிய தரவு. உங்கள் சாதனத்துடன் தொடர்புடைய வலை பீக்கன்கள், வலை சேமிப்பிடம் மற்றும் அடையாளங்காட்டிகள் உள்ளிட்ட பிற தொழில்நுட்பங்கள் இதே போன்ற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம். இந்தக் கொள்கையில், இந்த தொழில்நுட்பங்கள் அனைத்தையும் குறிக்க “குக்கீகள்” என்று பயன்படுத்துகிறோம்.
நீங்கள் Snapchat மற்றும் வேறு சில Snap Inc சேவைகளைப் பயன்படுத்தும் போது உங்களிடமிருந்தும் உங்களைப் பற்றியும் நாங்கள் எவ்வாறு தகவல்களைச் சேகரித்து பயன்படுத்துகிறோம் என்பதை எங்கள் தனியுரிமைக் கொள்கை விளக்குகிறது இந்தக் கொள்கையில் நாங்கள் குக்கீகளை எவ்வாறு பயன்படுத்துகிறோம் மற்றும் உங்கள் தொடர்புடைய தேர்வுகள் பற்றியும் மேலும் விளக்குகிறது.
ஆன்லைன் சேவைகளின் பெரும்பாலான வழங்குநர்களைப் போலவே, Snap Inc மூன்றாம் நபர் குக்கீகள் உள்ளிட்ட குக்கீகளைப் பயன்படுத்துகிறது, அதாவது உங்கள் Snapchat தரவு மற்றும் கணக்கு ஆகியவற்றை பாதுகாத்தல், எந்த அம்சங்கள் மிகவும் பிரபலமானவை என்பதைக் காண எங்களுக்கு உதவுதல், ஒரு பக்கத்திற்கான பார்வையாளர்களை எண்ணுவது, நாங்கள் அனுப்பும் வலை உள்ளடக்கம் மற்றும் மின்னஞ்சல்களுடன் நீங்கள் எவ்வாறு ஈடுபடுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வது, எங்கள் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்குதல், எங்கள் சேவைகளைப் பாதுகாப்பாக வைத்திருத்தல், பொருத்தமான விளம்பரங்களை வழங்குதல் மற்றும் பொதுவாக உங்களுக்கு சிறந்த, உள்ளுணர்வு ரீதியான மற்றும் திருப்திகரமான அனுபவத்தை வழங்குவது.போன்றவை. நாங்கள் பயன்படுத்தும் குக்கீகள் பொதுவாக பின்வரும் வகைகளில் ஒன்றாகும்.
எங்கள் குக்கீ தகவல் பக்கத்தில், எந்தெந்த குக்கீகளை நாங்கள் எங்கள் தளத்தில் பயன்படுத்துகிறோம், எந்த நோக்கத்திற்காக, எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறோம் என்பதை நீங்கள் பார்க்கலாம். எங்கள் சில தளங்களில், நாங்கள் அமைக்கும் குக்கீகள் மற்றும் நீங்கள் எங்கள் தளங்களுடன் தொடர்பு கொள்ளும் நேரத்தில் உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்தது.
குக்கீகளின் வகைப்பாடு
குக்கீகளை நாங்கள் எதற்காக பயன்படுத்துகிறோம்
அத்தியாவசியமானது
"தேவையான" குக்கீகள் என்றும் கூறப்படும். எங்கள் தளத்தை இயக்கவும், பாதுகாப்பு அபாயங்களைக் கண்டறிந்து தடுக்கவும் இந்தக் குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
எடுத்துக்காட்டாக, உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் இல்லாமல் மற்றவர்கள் உங்கள் கடவுச்சொல்லை மாற்றுவதைத் தடுக்க அல்லது உங்கள் குக்கீ விருப்பங்களை நினைவில் வைத்துக் கொள்வதைத் தடுக்க, உங்கள் அமர்வுத் தகவலைச் சேமிக்க இந்தக் குக்கீகளைப் பயன்படுத்தலாம்.
எங்களின் சில தளங்களிலும், சில அதிகார வரம்புகளிலும், ஒரே உலாவல் அமர்வின் போது எங்கள் தளத்தை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள சில அமர்வு குக்கீகளையும் நாங்கள் பயன்படுத்தலாம். இந்த குறிப்பிட்ட அமர்வு குக்கீகள் விரைவாக காலாவதியாகிவிடும் - அதிகபட்சம் 24 மணிநேரத்திற்குப் பிறகு - மேலும் அவற்றுடன் தொடர்புடைய எந்தத் தரவும் அந்த நேரத்தில் அநாமதேயமாகிவிடும். அவை அவசியமானவை என்பதால், நீங்கள் இணையதளத்தை அணுகும் தருணத்திலிருந்து அவை செயலில் இருக்கலாம். இருப்பினும், நீங்கள் விரும்பினால், அவற்றை முடக்கலாம் - கீழே உள்ள "உங்கள் விருப்பங்கள்" பகுதியைப் பார்க்கவும்.
Preferences
உங்கள் அமைப்புகளையும் விருப்பத்தேர்வுகளையும் நினைவில் வைத்துக் கொள்ளவும், எங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்தவும் இந்தக் குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
எடுத்துக்காட்டாக, உங்கள் மொழி விருப்பத்தேர்வுகளை நினைவில் வைக்க இந்த குக்கீகளை நாங்கள் பயன்படுத்தலாம்.
செயல்திறன் மற்றும் பகுப்பாய்வு
எங்கள் தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது பற்றிய தகவல்களைச் சேகரிக்க, தளத்தின் செயல்திறனைக் கண்காணிக்க மற்றும் எங்கள் தளத்தின் செயல்திறன், எங்கள் சேவைகள், மற்றும் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்தக் குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
எடுத்துக்காட்டாக, எந்தெந்த அம்சங்கள் எங்கள் பயனர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன மற்றும் எவைகளுக்கு சில மாற்றங்கள் தேவைப்படலாம் என்பதைப் பற்றி மேலும் அறிய இந்தக் குக்கீகளைப் பயன்படுத்தலாம்.
Marketing
விளம்பரங்களை வழங்கவும், அவற்றை நுகர்வோருக்கு மிகவும் பொருத்தமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றுவதற்கும், எங்கள் சேவைகள் மற்றும் பிற இணையதளங்கள் அல்லது மொபைல் பயன்பாடுகளில் எங்கள் விளம்பர பிரச்சாரங்களின் செயல்திறனைக் கண்காணிக்கவும் இந்த குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். உங்கள் ஆர்வங்களின் விவரத்தை உருவாக்க மற்றும் பிற தளங்களில் தொடர்புடைய விளம்பரங்களை வழங்கவும் எங்கள் மூன்றாம் நபர் விளம்பரம் செய்யும் கூட்டாளர்கள் இந்த குக்கீகளைப் பயன்படுத்தலாம்.
எங்கள் சேவைகளில் குக்கீகளைப் பயன்படுத்த பிற நிறுவனங்களை நாங்கள் அனுமதிக்கலாம். இந்த நிறுவனங்கள் காலப்போக்கில் எங்கள் சேவைகளை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பது பற்றிய தகவல்களைச் சேகரித்துப் பிற சேவைகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட இது போன்ற தகவல்களுடன் ஒருங்கிணைக்கலாம். தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும், சில உள்ளடக்கத்தின் பிரபலத்துவத்தைத் தீர்மானிக்கவும், உங்கள் இணையச் செயல்பாட்டை நன்கு புரிந்துகொள்ளவும் மற்றும் பிறவற்றிற்கும் இந்தத் தகவல்களைப் பயன்படுத்தப்படலாம்.
கூடுதலாக, எங்கள் துணை நிறுவனங்கள்உள்ளிட்ட சில நிறுவனங்கள், மோசடி அல்லது பிற அங்கீகரிக்கப்படாத அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க மற்றும் அளவிட மற்றும் எங்கள் சேவைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை விளம்பரங்களின் செயல்திறனை அளவிட்டு, எங்கள் சார்பாக அல்லது பிற நிறுவனங்களின் சார்பாக மூன்றாம்-நபர் இணையதளங்கள் மற்றும் செயலிகளில் மிகவும் பொருத்தமான விளம்பரங்களை வழங்கப் பயன்படுத்தலாம். ஆர்வம் அடிப்படையிலான விளம்பரங்கள் மற்றும் உங்களுக்குக் கிடைக்கும் தேர்வுகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, இங்குசெல்லவும்.
நாங்கள் வழங்கிய குக்கீகளைப் பயன்படுத்தும் மூன்றாம் நபர் சேவைகளில் உங்கள் செயல்பாடு குறித்த தகவல்களை நாங்கள் சேகரிக்கலாம். விளம்பரங்களின் செயல்திறனை அளவிட்டு, உங்களுக்கு மிகவும் பொருத்தமான விளம்பரங்களைக் காண்பிப்பது உட்பட எங்கள் விளம்பரச் சேவைகளை மேம்படுத்துவதற்காக நாங்கள் இந்தத் தகவல்களைப் பயன்படுத்துகிறோம். Snapchat விளம்பரத்தைப் பற்றியும், நீங்கள் பார்க்கும் விளம்பரங்களைத் தேர்ந்தெடுக்கப் பயன்படுத்தப்படும் தகவல்களை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பதைப் பற்றியும் மேலும் அறிய எங்கள் விளம்பர விருப்பத்தேர்வுகள் பக்கத்திற்குச் செல்லவும்.
எங்கள் தளங்களில் நாங்கள் உங்களுக்குக் கிடைக்கும் அமைப்புகளுடன் கூடுதலாக உங்கள் உலாவி அல்லது சாதனத்தில் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் சரிசெய்யலாம். உங்களுக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு விருப்பங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு கீழே பார்க்கவும்.
சில அல்லது அனைத்து அத்தியாவசியமற்ற உலாவி குக்கீகளை மறுப்பதற்கான விருப்பத்தை உங்கள் உலாவி உங்களுக்கு வழங்கலாம். உங்கள் உலாவியில் இருந்து குக்கீகளை உங்களால் அகற்றவும் முடியும். உலாவி குக்கீகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, உங்கள் உலாவி வழங்கிய வழிமுறைகளைப் பின்பற்றவும்.
உங்கள் சாதனத்தின் இயக்க முறைமையானது, ஆர்வ அடிப்படையிலான விளம்பரத்திற்காகப் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட சாதன அடையாளங்காட்டிகளைப் பயன்படுத்துவதிலிருந்து விலக உங்களை அனுமதிக்கலாம். உங்கள் மொபைல் சாதனத்தின் உற்பத்தியாளரால் வழங்கப்பட்ட வழிமுறைகளை நீங்கள் பார்க்கவேண்டும்; இந்தத் தகவல் பொதுவாக உங்கள் மொபைல் சாதனத்தின் “அமைப்புகள்” செயல்பாட்டின் கீழ் கிடைக்கிறது.
மேலும் நிச்சயமாக, நிறுவல் நீக்குதல் செயல்முறையை உங்கள் மொபைல் சாதனம் வழங்கினால், Snapchat செயலியை நிறுவல் நீக்குவதன் மூலம் செயலியின் மூலம் தகவல்கள் சேகரிக்கப்படுவதை நீங்கள் எப்போதும் தடுக்கமுடியும்.
எங்கள் தளங்களில் உங்கள் அமைப்புகளைச் சரிசெய்வதன் மூலம் எந்த குக்கீகளை அமைக்கலாம் என்பதையும் தனிப்பயனாக்கலாம். எங்கள் தளங்களில் உள்ள குக்கீ மெனுவைப் பார்க்கவும், அது உங்களை அனுமதிக்கிறது:
Snapchat.com குக்கீ அமைப்புகள்
Spectacles.com குக்கீ அமைப்புகள்
Yellowla.com குக்கீ அமைப்புகள்
Snapfoundation.org குக்கீ அமைப்புகள்