Content Guidelines for Recommendation Eligibility

Released: May 13, 2024

1. Introduction

இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் எங்கே பொருந்தும்?  

Snapchat என்பது முதன்மையாக ஒரு காட்சி சார்ந்த செய்தியிடல் செயலியாகும். மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்புகொள்ள உதவும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அல்காரிதம் சார்ந்த பரிந்துரைகளின் மூலமாக பொது உள்ளடக்கம் பரந்த பார்வையாளர்களைச் சென்றடையும் பகுதிகளும் இந்தச் செயலியில் உள்ளன. அத்தகைய உள்ளடக்கம் பரிந்துரைக்கப்பட்ட உள்ளடக்கம் என வரையறுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டிற்கு:

  • கதைகள் தாவலில், Snapchat பயனர்கள் தொழில்முறை ஊடகக் கூட்டாளர்கள் மற்றும் பிரபலமான படைப்பாளர்களின் பரிந்துரைக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் காணலாம்.

  • ஸ்பாட்லைட்டில், Snapchat பயனர்கள் எங்கள் சமூகத்தால் உருவாக்கி சமர்பிக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கலாம்.

  • வரைபடத்தில், Snapchat பயனர்கள் நிகழ்வுகளின் Snaps-கள், முக்கிய செய்திகள் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து பலவற்றைக் காணலாம்

பொதுவானதோ அல்லது தனிப்பட்டதோ Snapchat இன் அனைத்து இடங்களிலும், எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் மற்றும் சேவை நிபந்தனைகள்பின்பற்றப்பட வேண்டும்.

படைப்பாளரின் நண்பர்கள் அல்லது சந்தாதாரர்களைத் தாண்டி அல்காரிதம் சார்ந்த பரிந்துரைகளுக்குத் தகுதிபெற (எடுத்துக்காட்டாக, கதைகள், ஸ்பாட்லைட் அல்லது வரைபடம் ஆகியவற்றில்), உள்ளடக்கமானது இந்தப் பக்கத்தில் உள்ளடக்க வழிகாட்டுதல்களில் விவரிக்கப்பட்ட கூடுதல், கடுமையான தரநிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன?

தொழில்நுட்பம் மற்றும் மனித மதிப்பாய்வு ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தி கண்காணித்து இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்களை நாங்கள் அமல்படுத்துகிறோம். Snapchat பயனர்கள் ஆட்சேபனைக்குறியதாகக் நினைக்கும் உள்ளடக்கத்தை புகாரளிக்க நாங்கள் செயலியினுள் கருவிகளை வழங்குகிறோம். பயனர் புகார்களுக்கு நாங்கள் விரைவாக பதிலளிக்கிறோம், மற்றும் அனைத்து Snapchat பயனர்களுக்கும் உள்ளடக்க அனுபவத்தை மேம்படுத்துவதற்கு பின்னூட்டத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்களில் உள்ள பரிந்துரைக்கப்படுவதற்குத் தகுதிபெறுவதற்கான வழிகாட்டுதல்கள் கூட்டாளர், தனிப்பட்ட படைப்பாளர் அல்லது ஏதேனும் நிறுவன வகை என எந்தவொரு மூலத்திலிருந்து வந்த உள்ளடக்கத்திற்கும் சமமாகப் பொருந்தும்.

Snap இன் உரிமைகள் தக்கவைக்கப்படுதல்

எங்கள் விருப்பப்படி இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்களைச் செயல்படுத்தவும் அவற்றை அமல்படுத்துவதற்காக எந்தவொரு நடவடிக்கையை எடுக்கவும் நாங்கள் உரிமை கொண்டுள்ளோம். இதில் பிற விஷயங்களுடன் அகற்றுதல், பகிர்வை வரம்பிடுதல், இடைநீக்கம் செய்தல், விளம்பரத்தை வரம்பிடுதல் அல்லது உங்கள் உள்ளடக்கத்திற்கு வயதுக் கட்டுப்பாடுகளை விதித்தல் ஆகியன அடங்கும்.

எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் அல்லது சேவை நிபந்தனைகள் ஆகியவற்றை மீறும் படைப்பாளர்கள் அல்லது கூட்டாளர்கள் இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்களை மீறல் செய்ததாகக் கருதப்படுவார்கள்.

கூடுதலாக, அனைத்து உள்ளடக்கமும் அது பகிரப்படும் பகுதியின் பொருந்தும் சட்டங்களுக்கும் உங்களுடனான எங்கள் உள்ளடக்க ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கும் இணங்க வேண்டும். மேலே குறிப்பிட்டவை மீறப்பட்டதாக நாங்கள் கருதும் இடங்களில், மீறிய அந்த உள்ளடக்கத்தை அகற்ற நாங்கள் அனைத்து உரிமைகளையும் கொண்டுள்ளோம்.

தனிப்பயனாக்கம் மற்றும் உணர்திறன் உள்ளடக்கம்

Snapchat பயனர்கள் பல்வேறு வயது, கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர், மேலும் 13 வயதுக்குட்பட்டவர்கள் உட்பட அனைத்துப் பயனர்களுக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான, மதிப்புமிக்க அனுபவத்தை வழங்க விரும்புகிறோம். பல Snapchat பயனர்கள் உள்ளடக்கத்தை விரும்பி தேர்வு செய்யாமல் பார்க்கக்கூடும் என்பதை உணர்வதன்னால், பொருத்தமற்ற அல்லது தேவையற்ற அனுபவங்களிலிருந்து Snapchat பயனர்களைப் பாதுகாக்க இந்த வழிகாட்டுதல்களை நாங்கள் வடிவமைத்துள்ளோம்.

பரிந்துரைக்கப்பட்ட உள்ளடக்கத்தின் உள்ளாக, நாங்கள் பரிந்துரைகளைத் தனிப்பயனாக்க முயற்சிக்கிறோம் குறிப்பாக "உணர்திறன்மிக்க" உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்குகிறோம். எடுத்துக்காட்டாக, உணர்திறன் உள்ளடக்கத்தில் இவை அடங்கலாம்:

  • முகப்பரு சிகிச்சைகளைக் காட்டுபவை, இது சில Snapchat பயனர்களுக்கு அருவருப்பூட்டுவதாக இருக்கலாம், அதேநேரம் பிறர் அதைப் பயனுள்ளதாக அல்லது ஆர்வமூட்டுவதாகக் கருதலாம்; அல்லது

  • சூழல் அல்லது பார்வையாளரின் எண்ணத்தைப் பொறுத்து கவர்ச்சியான வகையில் நீச்சலுடையில் உள்ள நபர்களைக் காட்டுபவை.

சில உணர்திறன் உள்ளடக்கம் பரிந்துரைக்கத் தகுதிபெற்றதாக இருந்தாலும், சில snapchat பயனர்களின் வயது, இடம், முன்னுரிமைகள், அல்லது பிற அளவுகோல்களைப் பொறுத்து அதைப் பரிந்துரைப்பதை நாங்கள் தவிர்க்கலாம். இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்களில் உள்ள உணர்திறன் அளவுகோல்கள் விரிவான எடுத்துக்காட்டுகளின் பட்டியல் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். மட்டுறுத்தல் வரலாறு, பயனர் கருத்து, ஈடுபாட்டு சமிக்ஞைகள் அல்லது எங்கள் தலையங்கத்திற்கான சொந்த விருப்பங்களின் அடிப்படையில் ஏதேனும் உள்ளடக்கத்தைப் பரிந்துரைப்பதை நாங்கள் தடுக்கலாம் அல்லது மறுக்கலாம்.

2. Quality

தடை செய்யப்பட்டவை:
நாங்கள் இவற்றை தடை செய்கிறோம்:
  • உணர்திறன்மிக்க தனிப்பட்ட தகவல் பற்றிய கேள்விகளைக் கேட்கும் கருத்துக்கணிப்புகள். இதில் பயனர்களின் இனம் அல்லது இனத் தோற்றம், அரசியல் கருத்துகள், மத அல்லது தத்துவ நம்பிக்கைகள், தொழிற்சங்க உறுப்பினருரிமை, தனிப்பட்ட ஆரோக்கியம் அல்லது பாலியல் வாழ்க்கை ஆகியன மட்டுமல்லாது பிறவும் அடங்கும்.

பரிந்துரைக்கு தகுதி பெறாதவை:

நியாயமான தொழில்துறை சிறந்த நடைமுறைகளுக்குப் பொருத்தமான வகையில் அனைத்து உள்ளடக்கமும் உருவாக்கப்பட வேண்டும். பின்வருவன பரிந்துரைக்கப்படுவதற்குத் தகுதி பெறாது:

  • மங்கலான குறைந்த தெளிவுத்திறன் அல்லது அதிக பிக்சல் தெரியும் படம், பயனர் தனது திரையைச் செங்குத்திலிருந்து கிடைமட்ட வாக்கில் திருப்ப வேண்டியிருக்கும் தவறான நோக்குநிலை, ஆடியோ இல்லாத வீடியோக்கள் போன்ற தரம் குறைந்த வீடியோ.

  • ஃபோட்டோசென்சிட்டிவ் பயனர்களுக்கு எச்சரிக்கை இல்லாத ஃப்ளாஷ்கள் அல்லது ஸ்ட்ரோப்கள்.

  • படிக்க அல்லது புரிந்துகொள்ள முடியாத கூட்டாளர் டைல் உரை. பெரிய எழுத்தாக்கம், நிறுத்தற்குறிகள், சின்னங்கள் அல்லது இமோஜிஸ் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக வாசிக்க கடினமாக இருக்கும் லோகோக்கள் அல்லது தலைப்புவரிகளுக்கும் இது பொருந்தும்.

  • வெளித் தளங்களின் இணைப்புகள் பிற செய்திச் சேவைகள், சமூக ஊடகத் தளங்கள், அல்லது கிளவுட் சேமிப்பக சேவையகங்களுக்கு (URLs, QR குறியீடுகள் போன்றவை). நீங்கள் உங்கள் சொந்த கதை அல்லது தகவல் குறிப்பு பக்கத்தில் பிற சமூக ஊடகத் தளங்களுக்கு இணைப்பு வழங்கலாம், ஆனால் அது விளம்பரத்திற்குத் தகுதி பெறாது. (குறிப்பு: Discover இல், பயனர் கதைக்குள் Snapகளில் சில நம்பகமான URLகளுக்கு நாங்கள் விலக்களிக்கிறோம், ஆனால் அந்த Snaps டைல்களில் காட்சிப்படுத்த தகுதி பெறாது.)

  • பிற செய்தி சேவைகள் அல்லது சமூக ஊடக தளங்களில் கணக்குகளின் விளம்பரம். எடுத்துக்காட்டாக, வேறொரு சமூக ஊடகம் அல்லது செய்திச் செயலியின் பெயர் அல்லது வணிகச்சின்னம் உடன் இணைக்கப்பட்ட பயனர்பெயர். (குறிப்பு: ஒரு Snap உள்ளடக்கத்தில் மூலப் படைப்பாளரைக் குறிப்பிட்டு அசல், மாற்றிய வர்ணனையைச் சேர்க்கிறது எனில் அதற்கு நாங்கள் விலக்களிக்கிறோம்).

கூருணர்வுமிக்கவை:

பின்வருவன வரையறுக்கப்பட்ட இடங்களில் (Discover போன்றவை) மட்டுமே பரிந்துரைக்கப்பட தகுதி பெறுகின்றன ஸ்பாட்லைட் அல்லது வரைபடம் ஆகியவற்றில் அல்ல:

  • வெளித் தளங்களின் இணைப்புகள் (URLs, QR குறியீடுகள் போன்றவை) அது பின்வருனவாக இருக்கக் கூடாது: பிற செய்திச் சேவைகள், சமூக ஊடகத் தளங்கள், அல்லது கிளவுட் சேமிப்பக சேவையகங்கள்.

3. Public Interest Content

எதிர்பார்ப்புகள்

சூழல் முக்கியமானதாகும். எங்கள் உள்ளடக்க வழிகாட்டுதல்களின் பகுதிகளை மீறக்கூடிய விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தாலும் அல்லது சித்தரித்தாலும், செய்திக்குரிய, கல்விரீதியான நையாண்டி அல்லது பொதுப் பேச்சுத் தலைப்புடன் கூடிய சில உள்ளடக்கம் அனுமதிக்கப்படலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் நாங்கள் தலையங்க தீர்ப்பை பயன்படுத்துவோம், மேலும் நீங்களும் அதையே செய்யுமாறு கோரிக்கை விடுக்கிறோம். இதன் பொருள்:

  • பொருத்தமான உண்மை கண்டறிதல் சோதனை மூலம் துல்லியத்திற்கான தரநிலைகளைப் பராமரிக்கவும்

  • பொருத்தமான மற்றும் கிடைக்கும் இடங்களில் இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் படி வயது மற்றும்/அல்லது இடக் கட்டுப்பாடு

  • கிராபிக் அல்லது தொந்தரவளிக்கும் உள்ளடக்கத்துடன் Snapchat பயனர்களுக்கு அதிர்ச்சியூட்டுவதைத் தவிர்க்கவும். சாத்தியமான தொந்தரவளிக்கும் உள்ளடக்கம் உண்மையிலேயே செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் போது, நீங்கள் கிராபிக் உள்ளடக்க எச்சரிக்கைப் பயன்படுத்த வேண்டும்.

அரசியல் உள்ளடக்கம்

நம்பகமான, முன் அங்கீகாரம் பெற்ற கூட்டாளர்கள் அல்லது படைப்பாளர்களிடமிருந்து வரும் அரசியல் உள்ளடக்கம் மட்டுமே பரிந்துரைக்கப்பட தகுதி பெறும். இதில் அடங்குபவை:

  • பொது அலுவலகத்திற்கான வேட்பாளர்கள் அல்லது கட்சிகளைப் பற்றிய தேர்தல் தொடர்பான உள்ளடக்கம், வாக்குச்சீட்டு நடவடிக்கைகள் அல்லது வாக்கெடுப்புகள், அரசியல் நடவடிக்கைக் குழுக்கள் மற்றும் வாக்களிக்க அல்லது வாக்களிக்க பதிவுசெய்ய மக்களை வலியுறுத்தும் உள்ளடக்கம்.

  • உள்ளூர், தேசிய அல்லது உலகளாவிய அளவில் அல்லது பொது முக்கியத்துவம் வாய்ந்த விவாதப் பொருளாக இருக்கும் பிரச்சினைகள் அல்லது நிறுவனங்கள் தொடர்பான வக்காலத்து அல்லது வாத உள்ளடக்கம்.

4. Sexual Content

பரிந்துரைக்குத் தகுதி பெறாதவை: 

எங்கள் சமூக வழிகாட்டுதல்களில் தடைசெய்யப்பட்ட எந்தவொரு பாலியல் உள்ளடக்கமும் Snapchatஇன் எல்லா இடங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளன. ஒரு உள்ளடக்கம் பரந்த பார்வையாளர்களுக்குப் பரிந்துரைக்கப்பட தகுதிபெற, அது இவற்றைக் கொண்டிருக்கக்கூடாது:

  • நிர்வாணம், பாலியல் செயல்கள் மற்றும் பாலியல் சேவைகள். எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் பயனரின் தனிப்பட்ட கதையில் ஆபாசம் அல்லாத வரம்பிடப்பட்ட நிர்வாணத்தை அனுமதிக்கின்றன (எடுத்துக்காட்டாக, தாய்ப்பால் ஊட்டுதல் அல்லது மருத்துவச் செயல்முறைகள் போன்ற சூழல்களில்). ஆனால் உள்ளடக்க வழிகாட்டுதல்கள் எந்தவொரு சூழலிலும் அனைத்து விதமான நிர்வாணத்தையும் தடை செய்கின்றன, அவை புகைப்படமாக அல்லது நிஜமானதாக இல்லாவிட்டாலும் கூட (எடுத்துக்காட்டாக, ஓவியங்கள் அல்லது AI உருவாக்கிய படங்கள்). சமூக வழிகாட்டுதல்கள் வெளிப்படையாக பாலியல் செயல்பாடுகளைக் காட்டுவதைத் தடை செய்கின்றன; எங்கள் உள்ளடக்க வழிகாட்டுதல்கள் பாலியல் செயல்பாடுகளின் எந்தவொரு காட்சிப்படுத்தல்கள் அல்லது சித்தரிப்புகளையும் தடை செய்கின்றன, அதில் ஈடுபடும் அனைவரும் முழுமையாக உடை அணிந்திருந்தாலும் அது நகைச்சுவைக்காக அல்லது மறைமுகக் காட்சியாக இருந்தாலும் கூட. எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் எந்த வகையான பாலியல் தூண்டல் அழைப்புகளையும் தடை செய்கின்றன; இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் அதை அதிகப்படியாக நடைமுறைப்படுத்துகிறது (எடுத்துக்காட்டாக, Snapchat பயனர்களைத் தனியான கணக்கு, தளம் அல்லது இணையதளத்திற்கு வழிச்செலுத்தும் ஓரளவு கவர்ச்சியான Snapஐ நாங்கள் பரிந்துரைப்பதிலிருந்து நிராகரிக்கிறோம், அதன் நோக்கம் பாலியல் தூண்டல் அழைப்பு என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியாவிட்டால் கூட).

  • பாலியல் தொந்தரவளித்தல் மற்றும் ஒப்புதல் இல்லாத பாலியல் உள்ளடக்கம். இவை எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் மூலம் முழுத் தளத்திலும் தடை செய்யப்பட்டுள்ளவை ஆகும். உள்ளடக்க வழிகாட்டுதல்கள் அடுத்த படிக்குச் சென்று மற்றவர்களின் ஒப்புதல் இன்றி அவர்களை ஆபாசமாகக் காட்டும் பாலியல் பொருளாக்கம் மற்றும் கையாளப்பட்ட ஊடகங்கள் போன்ற உணர்ச்சியற்ற அல்லது இழிவான பாலியல் உள்ளடக்கத்தைத் தடை செய்கின்றன(எடுத்துக்காட்டாக, உடல் பாகங்களில் சிலவற்றைப் பாலியல்ரீதியாக காட்டுவதற்காக பிரபலங்களின் தோற்றத்தைத் திருத்துதல்). ஒருவரின் பாலினம் அல்லது பாலியல் பற்றிய ஊகங்களையும் நாங்கள் தடைசெய்கிறோம் (எடுத்துக்காடாக, "தனிமையில் ___?") கொடூரமான, பரபரப்பான வடிவத்தில் பாலியல் குற்றங்கள் அல்லது பாலியல் தகா வழக்கங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்வதையும் தடை செய்கிறோம் (எடுத்துக்காட்டாக, "தங்களின் மாணவர்களை திருமணம் செய்துகொண்ட 10 ஆசிரியர்கள்").

  • வெளிப்படையான பாலியல் மொழி.. Snapchat பயனர்கள் தனிப்பட்ட முறையில் அல்லது தங்களின் கதைகளில் வயது வந்தோர் தலைப்புகளைப் பற்றி விவாதிப்பதைத் தடுக்கவில்லை என்றாலும், இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் பாலியல் செயல்பாடுகள், பாலுறுப்பு, பாலியல் பொம்மைகள், பாலியல் தொழில் அல்லது பாலியல் தகா வழக்குகளை (எடுத்துக்காட்டாக, தகாத உறவு அல்லது விலங்குகளுடன் பாலுறவு) விவரிக்கும் வெளிப்படையான சொற்களைத் தடை செய்கின்றன. இதில் அப்பட்டமான பாலியல் சார்ந்த சூழல்களின் எமோஜிக்கள் அடங்கும். குறிப்பிட்ட பாலியல் செயல்கள் அல்லது உடல் பாகங்களைக் குறிப்பிடும் அளவுக்கு குறிப்பிட்ட மறைமுக பாலியல் நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

  • வெளிப்படையாக பாலுணர்வைத் தூண்டும் படங்கள். எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் அதிகமாக வெளிப்படுத்தாத பாலுணர்வைத் தூண்டும் படங்களைப் பகிரும் Snapchat பயனர்களைத் தடுக்கவில்லை என்றாலும், இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் அடிக்கடி பாலியல்ரீதியாகப் பார்க்கப்படும் உடல் உறுப்புகளை (எடுத்துக்காட்டு மார்பகங்கள், பின்பக்கம், தொடை இடுக்கு) போன்றவற்றை கேமரா, ஆடை, தோற்றம் அல்லது பிற கூறுகளின் மூலம் பாலியல்ரீதியாகத் தூண்டும் வகையில் காட்டும் படங்களைத் தடை செய்கின்றன. குறிப்பிட்ட தனிநபர் நிர்வாணமாக இல்லாவிட்டாலும் அல்லது அவர் உண்மையான நபராக இல்லாவிட்டாலும் (அனிமேஷன்கள் அல்லது ஓவியங்களுக்கும்) இது பொருந்தும். இதில் பாலியல் சார்ந்த உடல் உறுப்புகளின் உடலற்ற கிளோஸ்ஸப்களும் அடங்கும். உடலுறவுகொள்ளும் நிலைகளில் போஸ் கொடுப்பது, பாலியல் செயல்களைப் பிரதிபலிப்பது, பாலியல் பொம்மைகளைக் காட்சிப்படுத்துவது அல்லது பாலுணர்வைத் தூண்டும் விதத்தில் பொருட்களுடன் தொடர்புகொள்வது போன்ற உருவகப்படுத்தப்பட்ட பாலியல் செயல்பாடுகளும் இதில் அடங்கும்.

  • பாலியல் சூழ்நிலைகளில் சிறார்கள். எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் சிறார் பாலியல் சுரண்டல்களின் அனைத்து வடிவங்களையும் கண்டிப்பாகத் தடை செய்கின்றன. இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் கூடுதலாக சிறார் பாலியல் சுரண்டல் அல்லது தவறான பயன்பாட்டின் சட்ட வரையறைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யாத விளிம்பு நிலையில் உள்ள உள்ளடக்கத்தையும் தடை செய்கின்றன. அதாவது முக்கியப் பிரச்சினைகள், தனிநபர் அல்லது நிறுவனங்கள் உடனான அதன் தொடர்பின் காரணமாக செய்தி முக்கியத்துவம் பெறும் குறிப்பிட்ட சம்பவத்தைத் தவிர்த்து வயதுவந்தோர், சிறார் இடையேயான காதல் அல்லது பாலியல் உறவுகளைப் பற்றிய உண்மையான அல்லது கற்பனையான அனைத்து உள்ளடக்கத்தையும் பரிந்துரைப்பதை நிராகரிக்கிறோம். செய்தி முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களில் கூட, பாலியல் சூழ்நிலைகளில் உள்ள சிறார்களைப் பற்றிய தகவல்கள் உணர்ச்சிமிக்கதாகவோ, பாலியல் தூண்டுவதாகவோ அல்லது சுரண்டலாகவோ இருக்கக் கூடாது. இதில் சிறார்களுக்கு இடையேயான பாலியல் செயல்பாடுகளைப் பற்றிய உண்மையான அல்லது கற்பனையான உள்ளடக்கமும் அடங்கும். நாங்கள் அனுமதிப்பவை:

    • பதின் பருவ வயதினரின் பாலியல் அல்லது பாலின அடையாளங்கள், அல்லது அவர்களின் வயதிற்குப் பொருத்தமான காதல் உறவுகள், அந்த உள்ளடக்கம் பாலியல்ரீதியாகத் தூண்டுவதாக அல்லது வெளிப்படையானதாக இல்லாத வரை.

    • பாலியல் குற்றங்கள் அல்லது பாலியல் தொந்தரவளித்தல் தொடர்பான செய்தி அறிக்கைகள், அந்த செய்தி அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் வரை — அதாவது அது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினை, தனிநபர் அல்லது நிறுவனத்துடன் ஏற்கனவே தொடர்புடையதாக உள்ளது.

கூருணர்வுமிக்கவை:

பின்வருவன பரிந்துரைக்கப்படுவதற்குத் தகுதி பெற்றதாக உள்ளன, ஆனால் அவர்களின் வயது, இடம், முன்னுரிமைகள், அல்லது பிற வரையறைகளின் படி குறிப்பிட்ட Snapchat பயனர்களுக்கு அதன் தெரிவுநிலையை நாங்கள் வரம்பிட தேர்வு செய்யலாம்.

  • நிர்வாணமற்ற உடல் பிம்பத்தை வெளிக்காட்டும் படம். அதாவது அடிக்கடி பாலியல்ரீதியாகக் பார்க்கப்படும் உடல் பாகங்களைத் தற்செயலாகக் காட்டும் ஆனால் அதிகப்படியான பாலியல் கவர்ச்சியைப் பரிந்துரைப்பதை நோக்கமாகக் கொண்டிராத படங்கள் (எடுத்துக்காட்டாக, நீச்சலுடை ஃபிட்னஸ் ஆடை, சிவப்புக் கம்பள நிகழ்வுகள், ரன்வே ஃபேஷன் போன்ற செயல்பாடுகளுக்குப் பொருத்தமான சூழலில் அணியப்படும் குறைவான அல்லது இறுக்கமான உடைகள்).

  • மிதமான அளவு பாலுறவைக் குறித்துணர்த்தும் மொழி. குறிப்பிட்ட பாலுணர்வு சார்ந்த செயல்கள் அல்லது குறிப்பிட்ட உடல் உறுப்புகளைக் குறிப்பிடாமல் தெளிவற்ற பாலியல் ஆர்வத்தைக் குறிக்கும் நுட்பமான மறைமுகக் குறிப்பும் இதில் அடங்கும்.

  • கல்வி சார்ந்த, பாதுகாப்பில் கவனம் செலுத்தும், ஆபத்தான நடத்தையை ஊக்குவிக்காத மற்றும் 13 வயதிற்குட்பட்ட Snapchat பயனர்களுக்கு ஏற்ற ஆரோகியமான பாலியல் உள்ளடக்கம்.

  • செய்தி, பொது நலன் வர்ணனை அல்லது கல்வியின் சூழலில் பாலுணர்வைத் தூண்டாத பாலியல் உள்ளடக்கம் (எடுத்துக்காட்டாக, கலை வரலாறு).

  • வயது வந்தோர் பொழுதுபோக்குகளில் பணியாற்றுவதற்காக அறியப்படும் நபர்களைக் கொண்ட உள்ளடக்கம்.

5. Harassment & Bullying

பரிந்துரைக்கு தகுதி பெறாதவை:

எங்கள் சமூக வழிகாட்டுதல்களில் தடை செய்யப்பட்டுள்ள தொந்தரவளித்தல் அல்லது துன்புறுத்தல் ஆகியன தனிப்பட்ட உள்ளடக்கம் அல்லது பயனர்களின் கதை உள்ளிட்ட Snapchatஇன் எந்த இடத்திலும் தடை செய்யப்பட்டுள்ளன. ஒரு உள்ளடக்கம் பரந்த பார்வையாளர்களுக்குப் பரிந்துரைக்கப்பட தகுதிபெற, அது இவற்றைக் கொண்டிருக்கக்கூடாது:

  • மற்றவர்களைச் சங்கடத்திற்கு அல்லது அவமதிப்பிற்கு உள்ளாக்குவதாகச் சந்தேகிக்கப்படும் முயற்சிகள். எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் தொந்தரவளித்தல் மற்றும் துன்புறுத்தலின் அனைத்து வடிவங்களையும் தடை செய்கின்றன, ஆனால் சங்கடத்திற்குள்ளாக்கும் நோக்கம் தெளிவற்றதாக இருக்கும் என சந்தேகிக்கப்படும் நேர்வுகளில் கடுமையான தரநிலைகளைப் பின்பற்றுகின்றன (எடுத்துக்காட்டாக, "ரோஸ்ட்" வகையைச் சேர்ந்த Snap ஒன்றில் பங்கேற்பாளர்கள் கேமராவிற்கு முன் கேலி செய்யப்படுவதை விரும்புகிறாரா என்பது தெளிவாக இல்லாதிருக்கும் நேர்வு). இது இழிவுபடுத்தும் அல்லது சிறுமைப்படுத்தும் பேச்சுகளுக்கும் பொருந்தும். தோற்றத்தின் அடிப்படையில் மற்றவர்களை இழிவுபடுத்துவதும் இதில் அடங்கும், இழிவுபடுத்தப்படுபவர்கள் பிரபலமான நபர்களாக இருந்தாலும் கூட.

    • குறிப்பு: முக்கிய பிரபல நபர்கள் அல்லது நிறுவனங்களின் பேச்சுகள் அல்லது செயல்பாடுகளை விமர்சிப்பது அல்லது நையாண்டி செய்வது தொந்தரவளித்தல் அல்லது துன்புறுத்தலாகக் கருதப்படாது.
      அனைத்து வகை பாலியல் தொந்தரவளித்தல்களும் (மேலே “பாலியல் உள்ளடக்கம்,” என்பதைப் பார்க்க) Snapchat முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளன.

  • தனியுரிமை மீறல்கள். எந்தெந்த வகை தனிப்பட்ட தகவல்களைப் பகிரக் கூடாது என எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் விரிவாக விளக்குகின்றன. மேலும் உள்ளடக்க வழிகாட்டுதல்கள் பிரபலங்களின் குழந்தைகளின் உட்பட குழந்தைகளின் படங்களைப் பகிர்வதைத் தடுக்கின்றன, பின்வரும் சூழல்களில் தவிர:

    • அவர்கள் செய்தி முக்கியத்துவம் வாய்ந்த கதைகளின் மையப் பகுதியாக உள்ளனர்

    • பொது நிகழ்ச்சியில் தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் உள்ளனர்

    • பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலரின் ஒப்புதல் பெற்று உள்ளடக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

  • மற்றவர்களுக்குக் கடுமையான காயம் அல்லது மரணம் ஏற்பட வேண்டுதல் (எடுத்துக்காட்டாக, “எனது முன்னாள் காதலியின் புது கார் மோத வேண்டும் என விரும்புகிறேன்”).

  • மற்றொருவர் மீது இலக்கு வைத்து அவதூறு. எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் சுய அவதூறான வெளிப்பாடுகளை அனுமதிக்கின்றன ஆனால் உள்ளடக்க வழிகாட்டுதல்கள் தனிநபர் அல்லது குழுவின் மீதான ஆபாசச் சொற்கள் அல்லது அவதூறுகளை தடை செய்கின்றன, அது பிளீப் செய்யப்பட்டிருந்தாலும் அல்லது மறைக்கப்பட்டிருந்தாலும், வெறுப்புப் பேச்சு அல்லது பாலியல் வெளிப்படைத்தன்மை அளவிற்கு தீவிரமானதாக இல்லாவிட்டாலும் கூட.

  • காயம், இறப்பு அல்லது இழப்பு போன்ற உடனடி ஆபத்தில் இருப்பதாக பாதிக்கப்பட்டவரை நம்ப வைக்கும் தீங்கான அல்லது ஆபத்தான குறும்புகள்.

  • துயரமான நிகழ்வுகள் அல்லது தலைப்புகள் குறித்த உணர்வின்மை (உதாரணமாக நெருக்கமான வாழ்க்கைத் துணையின் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களைக் கிண்டல் செய்வது)

6. Disturbing or Violent Content

பரிந்துரைக்கு தகுதி பெறாதவை:

எங்கள் சமூக வழிகாட்டுதல்களில் தடைசெய்யப்பட்ட எந்தவொரு தொந்தரவளிக்கும் அல்லது வன்முறையான உள்ளடக்கமும் Snapchatஇன் எல்லா இடங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளன. ஒரு உள்ளடக்கம் பரந்த பார்வையாளர்களுக்குப் பரிந்துரைக்கப்பட தகுதிபெற, அது இவற்றைக் கொண்டிருக்கக்கூடாது:

  • கிராபிக் அல்லது பொருத்தமற்ற படம். எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் மனிதர்கள் அல்லது விலங்குகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை பற்றிய கிராபிக் அல்லது பொருத்தமற்ற படங்களைத் தடை செய்கின்றன. இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் வன்முறையின் கிராபிக் அல்லது பொருத்தமற்ற சித்தரிப்புகளை மட்டுமல்லாது கடுமையான நோய், காயம் அல்லது மரணத்தின் சித்தரிப்புகளையும் தடை செய்கின்றன. எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் மருத்துவ அல்லது ஒப்பனை நடைமுறைகளைக் குறிக்கும் உள்ளடக்கத்தைக் தடை செய்யாது (எடுத்துக்காட்டாக, முகப்பருவை வெடிக்க வைத்தல், காதுகளைச் சுத்தம்செய்தல், கொழுப்பை உறிஞ்சுதல் போன்றவை), ஆனால் அது கிராபிக் படத்தைச் சித்தரிப்பதாக இருந்தால் பரிந்துரைக்குத் தகுதி பெறாது. இந்தச் சூழலில் “கிராபிக்" என்பது சலம், இரத்தம், சிறுநீர், மலம், பித்தநீர், தொற்றுநோய், சிதைவு போன்ற உடல் திரவங்கள் அல்லது கழிவுகளை நிஜமாகக் காட்சிப்படுத்தும் படங்கள் ஆகும். சருமம் அல்லது கண்களுக்கு அருகில் கூரான பொருட்கள் அல்லது வாய்க்கு அருகில் கிருமிகள் இருப்பது போன்ற உள்நோக்கத்துடன், பார்ப்பதற்குத் தொந்தரவளிக்கும் மனித உடல் சார்ந்த படங்களைப் பரிந்துரைப்பதை நிராகரிக்கிறோம். எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் விலங்கு துன்புறுத்தப்படுவதைக் காட்டும் உள்ளடக்கத்தைத் தடை செய்தாலும், இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் விலங்குகளுக்கு ஏற்படும் கடுமையான துன்பம் (எடுத்துக்காட்டாக, திறந்த காயங்கள், உடல் மெலிதல், உடல் பாகங்கள் உடைதல் அல்லது சிதைக்கப்படுதல்) அல்லது மரணத்தைக் காட்டும் படங்களைத் தடை செய்கின்றன.

  • வன்முறையைப் புகழ்தல். எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் எந்த நபருக்கும் எதிரான வன்முறைக்கு ஆதரவு அளிப்பதை அல்லது வன்முறையை ஊக்குவிப்பதைத் தடை செய்கின்றன. இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் ஒரு படி மேலே சென்று வன்முறைக்கான சந்தேகத்திற்குரிய ஆதரவு அல்லது மறைமுக ஒப்புதலைக் கூட தடை செய்கின்றன.

  • சுய தீங்கை மகிமைப்படுத்துதல். எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் சுய காயம், தற்கொலை அல்லது உண்ணுதல் குறைபாடுகளை ஊக்குவிப்பதைத் தடை செய்கின்றன. இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் ஒரு படி மேலே சென்று அதன் விளிம்பு நிலை நேர்வுகளையும் பரிந்துரைப்பதை நிராகரிக்கின்றன (எடுத்துக்காட்டாக, “உன் கணக்கை நீக்கு மற்றும் kys" என நகைச்சுவைக்காக சொல்வது அல்லது ஏதேனும் “thinspo” அல்லது “pro-ana” உள்ளடக்கம்).

  • ஆபத்தான நடத்தையை ஊக்குவிப்பது எங்கள் சமூக வழிகாட்டுதல்களில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் காயம், நோய், மரணம், தீங்கு அல்லது சொத்து இழப்புகளுக்கு வழிவகுக்கும் "சவால்கள்" அல்லது சண்டைக் கலை போன்ற தொழில்முறை நிபுணர் அல்லாதவர்களால் நிகழ்த்தப்படும் ஆபத்தான செயல்பாடுகளைக் காட்சிப்படுத்தும் உள்ளடக்கத்தைப் பரிந்துரைக்க நிராகரிக்கின்றன.

  • தொந்தரவளிக்கும் சம்பவங்களின் கொடூரமான அல்லது பரபரப்பான செய்தி அறிக்கை. எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் தொந்தரவளிக்கும் சம்பவங்களைப் பற்றிய உள்ளடக்கத்தைத் தடை செய்வதில்லை, ஆனால் இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் செய்தி முக்கியத்துவம் கொண்டிராத வன்முறை அல்லது பாலியல் குற்றங்கள் அல்லது சிறார்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மீது கவனம் செலுத்தும் உள்ளடக்கத்தைப் பரிந்துரைப்பதை நிராகரிக்கின்றன. உள்ளடக்கம் "செய்தி முக்கியதுவம் வாய்ந்ததாக" கருதப்பட வேண்டுமெனில் அது அக்காலத்திற்குரியதாக மற்றும் முக்கிய நபர், குழு அல்லது பொது நலனில் உள்ள பிரச்சினை சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.

கூருணர்வுமிக்கவை:

பின்வருவன பரிந்துரைக்கப்படுவதற்குத் தகுதி பெற்றதாக உள்ளன, ஆனால் அவர்களின் வயது, இடம், முன்னுரிமைகள், அல்லது பிற வரையறைகளின் படி குறிப்பிட்ட Snapchat பயனர்களுக்கு அதன் தெரிவுநிலையை நாங்கள் வரம்பிட தேர்வு செய்யலாம்.

  • மரணம் அல்லது சிதைப்பு தொடர்பான ஊடக படங்கள் இல்லாத, வன்முறை பற்றிய தேசிய செய்தி, கல்வி அல்லது பொதுப் பிரசங்கம். பாலியல் அல்லது வன்முறைக் குற்றங்கள் போன்ற தொந்தரவளிக்கும் சம்பவங்கள் சரியான நேரத்தில் தெரிவிக்கப்படும்போதும் மற்றும் முக்கிய நபர், குழு அல்லது பொது நலன் சார்ந்த பிரச்சினை தொடர்புடையதாக இருக்கும்போது செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம்

  • உண்ணுதல் குறைபாடுகள் உள்ளிட்ட சுயதீங்கை எதிர்கொள்வது குறித்த விவாதம்.

  • மருத்துவச் செயல்முறைகள், மருத்துவ அமைப்புகள் அல்லது உபகரணங்கள், உடல்நலப் பிரச்சினைகளின் கிராபிக் அல்லாத சித்தரிப்புகள். கல்வி சார்ந்த அல்லது செய்திக்குரியதாக உள்ள சூழல்களில் பதப்படுத்தப்பட்ட உடல் உறுப்புகள் இதில் அடங்கும்.

  • தோல் சிதைவு இல்லாத காஸ்மெடிக் செயல்முறைகள்.

  • தோலின் மீது பச்சை குத்தும் ஊசிகள் அல்லது துளையிடுதல் போன்ற உடல் மாறுதல்கள் செய்யப்படுதல்.

  • மரணம் அல்லது காயத்தின் கிராபிக் படங்கள் இல்லாமல் இயற்கையான அமைப்புகளில் ஆபத்தில் அல்லது துன்பத்தில் இருக்கும் விலங்குகள்.

  • சிலந்தி, பூச்சிகள் அல்லது பாம்பு போன்ற பொதுவான பயத்தைத் தூண்டும் உயிரினங்கள்.
    கற்பனை ஆனால் நிஜம் போன்ற மற்றும் சாத்தியமான தொந்தரவளிக்கும் படங்கள். பொழுதுபோக்கு சூழல்களில் வன்முறையும் இதில் அடங்கும் (எடுத்துக்காட்டாக, ஒரு திரைப்படத்தில், வீடியோ கேம் அல்லது நகைச்சுவை குறும்படத்தில்). இதில் திகிலூட்டும் உள்ளடக்கமும் அடங்கும் (உதாரணமாக பிரத்யேக ஒப்பனை, ஆடைகள், பொருட்கள்). புலனுறுப்புகளைத் தூண்டப் பயன்படுத்தப்படும் படங்களும் இதில் அடங்கும் (உதாரணமாக, டிரிபோபோபியாவைத் தூண்டும் நுண்துளைப் பொருள்கள், தோலை உரிப்பதை உருவகப்படுத்த பசை அல்லது உண்ணிகளை உருவகப்படுத்த விதைகள்).

  • ஆபாசச் சொல் ஒரு தனிநபரை நோக்கியதாக, குழுவை இழிவுபடுத்துவதாக மற்றும் பாலியல் வெளிப்படையான சூழலில் இல்லாததாக இருக்கும்போது. இது பொதுவான விரக்தியைத் தெரிவிக்க பொதுவாகப் பயன்படுத்தப்படும் கெட்ட வார்த்தைகளுக்கும் பொருந்தும் (எடுத்துக்காட்டாக, "s***" மற்றும் "f***").

7. False or Deceptive Information

பரிந்துரைக்கு தகுதி பெறாதவை:

எங்கள் சமூக வழிகாட்டுதல்களில் தடைசெய்யப்பட்ட எந்தவொரு தீங்கு விளைவிக்கும் தவறான தகவலும் Snapchatஇன் எல்லா இடங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளன. தங்கள் உள்ளடக்கத்தின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க படைப்பாளர்கள் மற்றும் கூட்டாளர்கள் பொறுப்பாவார்கள். உள்ளடக்கத்தின் கருப்பொருள் தீவிரமானதாக (அரசியல், உடல்நலம், துயர நிகழ்வுகள்) அல்லது முக்கியமற்றதாக (பொழுதுப்போக்கு அரட்டை, புரளி போன்றவை) என எதுவாக இருந்தாலும் தெளிவற்ற அல்லது தவறாக வழிநடத்தும் உள்ளடக்கத்தை வெளியிடுவதிலிருந்து படைப்பாளர்கள் மற்றும் கூட்டாளர்கள் தடை செய்யப்படுகிறார்கள். ஒரு உள்ளடக்கம் பரந்த பார்வையாளர்களுக்குப் பரிந்துரைக்கப்பட தகுதிபெற, அது இவற்றைக் கொண்டிருக்கக்கூடாது:

  • அரசியல்ரீதியாக தவறான அல்லது நிரூபிக்கப்படாத தகவல். வாக்களிப்பது பற்றிய தவறான தகவல், வேட்பாளரின் நிலைகளை தவறாக சித்தரிப்பது அல்லது குடிமைச் செயல்முறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பிற உள்ளடக்கம் போன்ற தவறான அரசியல் தகவல்களை எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் தடைசெய்கின்றன. சில நேரங்களில் அரசியல்ரீதியான உரிமைகோரல் கருத்துகள் உண்மையானதா, பொய்யானதா அல்லது தவறாக வழிநடத்துவதா என்பதை எங்கள் மதிப்பாய்வுக் குழுவினால் உறுதிப்படுத்த இயலாமல் போகலாம். சந்தேகத்திற்கிடமான உள்ளடக்கம் நண்பர்கள் அல்லது பின்தொடர்பவர்களுக்கு மத்தியில் அனுமதிக்கப்படலாம், ஆனால் பரிந்துரைக்கப்படுவதற்குத் தகுதிபெறாது.

  • சுகாதாரம்-தொடர்பான பொய்யான அல்லது நிரூபிக்கப்படாத தகவல். அதுபோன்ற உள்ளடக்கம் எங்கள் சமூக வழிகாட்டுதல்களில் தடை செய்யப்பட்டுள்ளது, அதாவது அது இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

  • துயர நிகழ்வுகளை மறுத்தல். அதுபோன்ற உள்ளடக்கம் எங்கள் சமூக வழிகாட்டுதல்களில் தடை செய்யப்பட்டுள்ளது, அதாவது அது இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

  • பொய்யாக அல்லது தவறாக வழிநடத்தும் கையாளப்பட்ட ஊடகம். கையாளப்பட்ட ஊடகங்களின் தீங்கிழைக்கும் வாய்ப்புகள் குறித்து எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் கவனம் செலுத்துகின்றன (எடுத்துக்காட்டாக ஒரு அரசியல்வாதி சங்கடமூட்டும் செயல்களைச் செய்வது போன்ற டீப் ஃபேக்). எங்கள் உள்ளடக்க வழிகாட்டுதல்கள் ஒரு படி மேலே சென்று சமூகத்திற்கு வெளிப்படையான ஆபத்தைக் கொண்டிராத பொய்யான அல்லது தவறாக வழிநடத்தும் தகவல்களைப் பரிந்துரைப்பதை நிராகரிக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு பேருந்தின் அளவுள்ள பாம்பைச் சித்தரிப்பதற்காக புகைப்பட எடிட்டிங் கருவிகள் அல்லது AIஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படங்கள் அல்லது நடிகர்கள் ஒரு படத்தில் நடிப்பதாக தவறான தகவல்களைப் பரப்புவதற்காக பல்வேறு காஸ்ட்யூம்களில் நடிகர்களை எடிட் செய்யும் கிளிக்பெய்ட் டைல் படங்கள்; இந்த எடுத்துக்காட்டுகள் குடிமக்கள் அமைதியை சீர்குலைக்காதவை அல்லது பொது சுகாதரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தாதவை ஆனால் தவறாக வழிநடத்தும் தகவல்கள் ஆகும்.

  • பிற நபர்கள், பிராண்டுகள் அல்லது நிறுவனங்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடி. அதுபோன்ற உள்ளடக்கம் எங்கள் சமூக வழிகாட்டுதல்களில் தடைசெய்யப்பட்டுள்ளது, இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் ஒரு படி மேலே சென்று சந்தேகத்திற்கிடமான அல்லது தெளிவற்ற ஆள்மாறாட்டத்தை தடை செய்கின்றன. நையாண்டி, பரோடி, கருத்துரைத்தல் போன்றவை அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் அந்த உள்ளடக்க ஆசிரியரின் உண்மைத்தன்மை 13 வயதுள்ள பார்வையாளருக்கும் நியாயமான அளவுக்குத் தெளிவானதாக இருக்க வேண்டும்.

  • அனைத்து வகையான ஏமாற்றும் சந்தைப்படுத்தும் உத்திகள். அதிகப்படியான மாற்றுவழிப்படுத்தல்களைக் கொண்ட இணைப்புகள் அல்லது பாப்-அப்களை உருவாக்கும் இணைப்புகள் அல்லது அதிகமான விளம்பரங்களைக் கொண்ட அல்லது விளம்பரங்களை ஏற்றும் பாப்அப்களை நாங்கள் தடை செய்கிறோம். உங்கள் உள்ளடக்கத்தில் காட்சிப்படுத்திய பின் ஒரு இணைப்பின் இறுதிப் பக்கத்தை அல்லது லேண்டிங் பக்கத்தை நீங்கள் மாற்றக்கூடாது. உங்கள் உள்ளடக்கதில் உள்ள எந்தவொரு இணைப்புகளும் எங்கள் உள்ளடக்க வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும்.

  • ஈடுபாடு தூண்டில். இந்த உள்ளடக்கத்தின் நோக்கம் பார்வையாளரை மகிழ்விப்பது அல்லது தெரிவிப்பது அல்ல, மாறாக Snap இன் பார்வைகள் அல்லது தொடர்புகளை அதிகரிக்க அவற்றைக் கையாளும் உள்ளடக்கம் என்று அர்த்தம் ஈடுபாடு தூண்டில் பெரும்பாலும் பலன் எதுவுமில்லாத எதிர்பார்ப்பை அமைக்கும். தடை செய்யப்பட்ட ஈடுபாடு தூண்டில் எடுத்துக்காட்டுகளின் முழுமையற்ற பட்டியல் இதோ:

    • "அதற்காகக் காத்திருங்கள்" என்ற தலைப்பு, ஆனால் "அது" ஒரு போதும் நடக்காது.

    • "இதை 10 முறை லைக் செய்ய Snapchat உங்களை அனுமதிக்காது" என்பது போன்ற இல்லாத Snapchat அம்சங்களின் அடிப்படையிலான சவால்கள்.

    • "இதற்கு 20,000 லைக்குகள் கிடைத்தால் நான் எனது தலையை மொட்டை அடித்துக்கொள்வேன்" என்பது போன்ற விருப்பங்கள் அல்லது பகிர்வுகளை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகள்.

    • நீண்ட உரைத் தொகுதிகள், எதையாவது சுருக்கமாகக் காட்டுவது அல்லது "வேறுபாடுகளைக் கண்டறிதல்" விளையாட்டுகள் மூலம் Snap-ஐ மீண்டும் பார்க்க வைத்தும் அல்லது இடைநிறுத்தி மக்களை ஏமாற்றும் முயற்சிகள்.

    • பொய்யான காஸ்டிங் வதந்திகள், பல ஆண்டுகளுக்கு முன் பிரபலம் ஒருவர் கைது செய்யப்பட்டதைப் புதிய செய்தியாகக் காட்டுதல், பெரும் உருமாற்றம் உள்ளதைப்போல் காட்டுவதற்காக ஒருவரின் உடல் அல்லது முகத்தை எடிட் செய்தல் போன்ற தவறாக வழிநடத்தும் அல்லது பரபரப்பூட்டும் தலைப்பு வரிகள் அல்லது டைல்கள்.

8. Illegal or Regulated Activities

பரிந்துரைக்கு தகுதி பெறாதவை:

எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் மூலம் தடை செய்யப்பட்ட சட்டவிரோத அல்லது ஒழுங்கபடுத்தப்பட்ட நடவடிக்கைகள், தயாரிப்புகள் அல்லது சேவைகள் Snapchatஇல் எல்லா இடங்களிலும் தடை செய்யப்படுகின்றன. உள்ளடக்கம் பரந்த பார்வையாளர்களுக்குப் பரிந்துரைக்கப்பட தகுதி பெற, அவற்றில் பின்வருவன இருக்கக் கூடாது:

  • சட்டவிரோதச் செயல்பாட்டை எளிதாக்குதல் அல்லது ஊக்குவித்தல். அதுபோன்ற உள்ளடக்கம் எங்கள் சமூக வழிகாட்டுதல்களில் தடை செய்யப்பட்டுள்ளது, அதாவது அது இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

  • புகையிலை, நிக்கோடின் அல்லது கஞ்சா தயாரிப்புகள் அல்லது துணைப்பொருட்களைச் சித்தரித்தல். அவை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் இடங்களில் இந்தத் தயாரிப்புகளை வயது வந்தோர் பயன்படுத்தும் Snapsஐ எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் தடை செய்யவில்லை என்றாலும், இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் அத்தகைய உள்ளடக்கதைப் பரிந்துரைப்பதை நிராகரிக்கிறது.

  • ஆபத்தான மதுபானப் பயன்பாட்டைச் சித்தரித்தல். எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் வயது வந்தோர் மது அருந்தும் Snapsஐ தடை செய்யவில்லை என்றாலும், இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் வயது வந்தோர் அதிகளவு அல்லது ஆபத்தான ஆல்கஹால் பயன்பாட்டைக் காட்டும் உள்ளடக்கத்தைப் பரிந்துரைப்பதை நிராகரிக்கின்றன, இதில் அதிக அளவில் ஆல்கஹால் அருந்துதல் அல்லது போதையில் அல்லது மது உடன் கனரக இயந்திரங்களை இயக்குதல் அல்லது நினைவிழக்கும் அளவு அல்லது வாய் உளறும் அளவுக்கு குடித்தல் ஆகியவை அடங்கும்.

  • செய்தி, கல்வி அல்லது விளையாட்டு சூழலுக்கு வெளியே உண்மையான நவீன அச்சுறுத்தும் ஆயுதங்களைக் காட்டுதல் (துப்பாக்கி, சண்டைக் கத்திகள், வெடிபொருள்கள் போன்றவை)

    • வரலாற்று ஆயுதங்கள் (உண்டை வில், சுடுகலன், வாள்கள் போன்றவை) அனுமதிக்கப்படுகின்றன.

    • கற்பனை ஆயுதங்கள் (காஸ்பிளே பிராப்கள், வீடியோ கேம் ஆயுதங்கள் போன்றவை) அனுமதிக்கப்படுகின்றன.

  • குறிப்பிட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளை ஊக்குவித்தல். எங்கள் வணிக உள்ளடக்க கொள்கையானது Snapchat பயனர்கள் தங்களின் நண்பர்கள் அல்லது பின்தொடர்பவர்களுடன் வணிக உள்ளடக்கத்தை எவ்வாறு பகிர்வது என்பதை விளக்குகிறது, இதில் வயது அல்லது இடம் ஆகியவற்றின் அடிப்படையில் இலக்கு வைக்கப்படும் உள்ளடக்கமும் அடங்கும். ஆனால் பரிந்துரைக்கப்படுவதற்குத் தகுதி பெற, உள்ளடக்கம் இந்த ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதிகளை ஊக்குவிக்கக்கூடாது:

    • குடியிருப்பு ரியல் எஸ்டேட்

    • வேலைவாய்ப்புகள்

    • சூதாட்டம், உண்மையான பணத்தில் விளையாட்டு/பந்தயம், லாட்டரிகள், குதிரைப் பந்தயச் சூதாட்டம்

    • ஒரு தயாரிப்பு அல்லது சேவையின் சாத்தியமான மருத்துவப் பலன்கள் பற்றி நம்பவியலாத கூற்றுகள்; துணை மருந்துகள், மருந்துகள் அல்லது எடை குறைப்பு தயாரிப்புகளின் விளம்பரம்

    • கடன்கள், முதலீடுகள், கிரெடிட், கிரிப்டோகரன்சிகள், NFTS அல்லது வேறு ஏதேனும் நிதி தயாரிப்புகள் அல்லது சேவைகள்

    • மது

    • புகையிலை, கஞ்சா மற்றும் அவற்றின் வழிப்பொருட்கள் (நிக்கோடின் THC/CBD தயாரிப்புகள்) அல்லது துணைப் பொருட்கள் (உறிஞ்சுகுழாய் போன்றவை)

    • வெடிபொருட்கள், வாணவெடி, வானவேடிக்கைகள், வெடிவைத்துத் தகர்க்கும் சாதனங்கள்

    • டேட்டிங் செயலிகள், இணையதளங்கள் அல்லது சேவைகள்

கூருணர்வுமிக்கவை:

பின்வருவன பரிந்துரைக்கப்படுவதற்குத் தகுதி பெற்றதாக உள்ளன, ஆனால் அவர்களின் வயது, இடம், முன்னுரிமைகள், அல்லது பிற வரையறைகளின் படி குறிப்பிட்ட Snapchat பயனர்களுக்கு அதன் தெரிவுநிலையை நாங்கள் வரம்பிட தேர்வு செய்யலாம்.

  • வயது வந்தோர் மிதமான அளவு மது பயன்படுத்துவது

  • எடைக் குறைப்புத் திட்டங்கள் அல்லது உத்திகள்.

    • எடை குறைப்பில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக வலிமை, பழக்கப்படுத்துதல் அல்லது இயக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் போது அனைத்துப் பார்வையாளர்களுக்கும் ஃபிட்னஸ் உள்ளடக்கம் அனுமதிக்கப்படுகிறது.

  • சட்டவிரோத அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட செயல்பாடுகளுக்கான கற்பனை குறிப்புகள் (எடுத்துக்காட்டாக, நகைச்சுவைகள், குறுநாடகம், திரைப்படங்களின் காட்சிகள் அல்லது வீடியோ கேம்கள்)

9. Hateful Content, Terrorism, and Violent Extremism

பரிந்துரைக்கு தகுதி பெறாதவை:

எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் தடை செய்துள்ள ஏதேனும் வெறுப்பை உண்டாக்கும் உள்ளடக்கம், பயங்கரவாதம் மற்றும் வன்முறை மிகுந்த தீவிரவாதம் ஆகியன Snapchat முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளன. ஒரு உள்ளடக்கம் பரந்த பார்வையாளர்களுக்குப் பரிந்துரைக்கப்பட தகுதிபெற, அது இவற்றைக் கொண்டிருக்கக்கூடாது:

  • பயங்கரவாத அமைப்புகள், வன்முறை தீவிரவாதிகள் அல்லது வெறுப்புக் குழுக்களின் அல்லது அவர்களை ஊக்குவிக்கும் உள்ளடக்கம் அதுபோன்ற உள்ளடக்கம் எங்கள் சமூக வழிகாட்டுதல்களில் தடை செய்யப்பட்டுள்ளது, அதாவது அது இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

  • வெறுப்புப் பேச்சு. இனம், நிறம், சாதி, இனக்குழு, நாட்டினம், மதம், பாலியல் சார்பு, பாலின அடையாளம், இயலாமை அல்லது அனுபவ நிலை, குடிமை நிலை, சமூகப் பொருளாதார நிலை, வயது, எடை அல்லது கர்ப்ப நிலை ஆகியவற்றின் அடிப்படையில் இழிவுபடுத்தும், கண்ணியக்குறைவை ஏற்படுத்தும், அல்லது பாகுபாடு அல்லது வன்முறையை ஊக்குவிக்கும் உள்ளடக்கத்தை எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் தடை செய்கின்றன. இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் ஒரு படி மேலே சென்று மேலே பட்டியலிடப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட பிரிவுகளில் ஏதேனும் ஒருவரை சந்தேகிக்கும் வகையில் அவதூறு செய்யும் உள்ளடக்கத்தைத் தடை செய்கின்றன. அந்த உள்ளடக்கம் பாகுபாட்டு எண்ணங்களைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றால், அத்தகைய உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதில்லை என்ற தரப்பில் நாங்கள் உள்ளோம்.

கூருணர்வுமிக்கவை:

பின்வருவன பரிந்துரைக்கப்படுவதற்குத் தகுதி பெற்றதாக உள்ளன, ஆனால் அவர்களின் வயது, இடம், முன்னுரிமைகள், அல்லது பிற வரையறைகளின் படி குறிப்பிட்ட Snapchat பயனர்களுக்கு அதன் தெரிவுநிலையை நாங்கள் வரம்பிட தேர்வு செய்யலாம்:

  • வசைச் சொல்லுக்கு இலக்கான குழு உறுப்பினர்களால் அந்த வசைச்சொல் "மீள் உரிமைகோரலுக்காகப்" பயன்படுத்தப்படுதல்.

  • பதில் பேச்சு, செய்தி கல்வி, வரலாறு, புனைவு ஆகிய சூழல்களில் வெறுப்பு பேச்சு அல்லது அடையாளங்கள்

10. Commercial Content

Snapஆல் வழங்கப்படும் மரபார்ந்த விளம்பரங்கள் அல்லாத ஆனால் ஏதேனும் பிராண்ட், தயாரிப்பு, பொருள் அல்லது சேவையால் (உங்களின் சொந்த பிராண்ட் அல்லது தொழில் உட்பட) நிதியளிக்கப்பட்ட, அவற்றை விளம்பரப்படுத்தும் ஊக்குவிக்கும் Snapchatஇல் உள்ள எந்தவொரு உள்ளடக்கத்திற்கும், பணம்செலுத்துதல் அல்லது இலவசப் பரிசைப் பெற்று நீங்கள் பதிவுசெய்ய ஊக்குவிக்கப்பட்ட உள்ளடக்கம் ஆகியனவற்றிற்கு எங்கள் வணிக உள்ளடக்க கொள்கை பொருந்தும்.

பின்வரும் சூழலில் வணிக உள்ளடக்கம் பரிந்துரைக்கப்படுவதற்குத் தகுதி பெறாது:

  • எங்கள் வணிக கொள்கையில் ஏதேனும் ஒரு பகுதியை மீறுவதாக உள்ளது வணிக உள்ளடக்க கொள்கையின் .

  • அதன் வணிகத் தன்மையை அது வெளிப்படுத்தவில்லை. படைப்பாளர்கள், கூட்டாளர்கள் மற்றும் பிராண்டுகள் 1) உள்ளூர் சட்டங்கள், 2) எங்கள் விளம்பரக் கொள்கைகள் மற்றும் 3) எங்கள் வணிக உள்ளடக்க கொள்கை ஆகியவற்றிற்கு இணங்க உதவுவதற்காக "கட்டணப் பார்ட்னர்ஷிப்" வெளிப்படுத்தல் கருவி மற்றும் சுயவிவர அளவிலான வயது மற்றும் இடம் இலக்கு வைத்தல் கருவிகளை Snap வழங்குகிறது. பொருந்தும் இடங்களில் இந்தக் கருவிகளைப் பயன்படுத்துவது அவசியம்.