Snap Inc. வெளிப்படைத்தன்மை அறிக்கைகள் ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படுகின்றன. Snapchat பயனர்களின் கணக்குத் தகவல்களுக்கான அரசாங்க கோரிக்கைகளின் அளவு, தன்மை பற்றிய முக்கியமான உட்பார்வையை இந்த அறிக்கைகள் வழங்குகின்றன.

அரசாங்கங்கள் பயனர்களின் தரவை எவ்வாறு கோருகின்றன —நாங்கள் எவ்வாறு பதிலளிப்போம் என்பது பற்றிய மிகவும் குறிப்பான தெளிவான தகவல்களை எங்கள் பயனர்களுக்கு வழங்குவதுடன்—தங்கள் அரசாங்கத்தையும்—எங்களையும்—பொறுப்புடன் வைத்திருப்பதற்குப் பயனர்களுக்கான முக்கியமான வழியாக உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு திறந்த சமூகம் என்பது வெளிப்படைத்தன்மையைச் சார்ந்திருக்கிறது. சட்ட அமலாக்கத்தின் நியாயமான தேவைகளுடன் எங்கள் பயனர்களின் தனியுரிமைக்கான எங்களுடைய மாற்றமில்லாத உறுதிப்பாட்டை எவ்வாறு ஒத்திசைக்கிறோம் என்பதை முக்கியத் தரவுகள் இல்லாமல் எங்கள் பயனர்களால் பொருளுள்ள வகையில் புரிந்து கொள்ள முடியாது. பொதுமக்கள் கவலையை அதிகரிக்கும் ஓர் விடயமாக அரசாங்க கண்காணித்தல் மாறி வரும்போது, நாங்கள் உதவக்கூடிய ஒரு வழியாக அரையாண்டு வெளிப்படைத்தன்மை அறிக்கைகளின் வெளியீடு உள்ளது.

அரசாங்கக் கண்காணிப்பு பற்றி எங்களுக்கு என்ன தெரிந்திருக்கிறது என்பதில் கூட நிச்சயமாக வரம்புகள் உள்ளன. FISA என அறியப்படும் —வெளிநாட்டு புலனாய்வு கண்காணிப்பு சட்டத்தின் 702வது பிரிவு —மின்னணுத் தகவல் தொடர்புகளை மறைமுகமாக இடைமறிக்க ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தை அனுமதிக்கிறது. எங்கள் அறிதல் அல்லது ஈடுபாடு இல்லாமல் அரசாங்கம் கண்காணிப்பை மேற்கொள்ளும்போது, இந்தச் செயல்களுக்கு எங்களால் வெளிப்படையான தெரிவுநிலையை வழங்க முடியாது.

முக்கியமான தனியுரிமை, உரிய செயல்முறைப் பிரச்னைகளைச் சரிசெய்கிற அளவுக்குப் போதுமான மாற்றங்கள் இல்லாமல் 702வது பிரிவைக் காங்கிரஸ் மறுஅங்கீகரிக்கக்கூடாது என்று நாங்கள் நம்புவதற்கு அது ஒரு காரணம்.

மிகத் தெளிவாகக் கூற வேண்டுமென்றால்: நேரடியாகவோ மூன்றாம் நபர்களின் வழியாகவோ கண்காணித்தல் நோக்கங்களுக்காக நாங்களே எந்த அரசாங்கத்துக்கும் பயனர் தரவுகளை வழங்குவதில்லை.

அரசாங்கம் பயனர்களின் தரவை நாடும்போது அவர்களுக்குத் தெரிவிக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். நவம்பர் 15, 2015 தேதி முதல், Snapchat பயனர்களின் கணக்குத் தகவல்களைக் கேட்கும் சட்டப்பூர்வச் செயல்முறைகளைப் பெறும்போது அவர்களுக்கு அறிவிப்பதே எங்கள் கொள்கையாக உள்ளது. இந்தக் கொள்கைக்கு இரண்டு விதிவிலக்குகள் மட்டுமே உள்ளன: அக்கோரிக்கையை எங்கள் பயனர்களுக்குத் தெரிவிப்பதற்கு நாங்கள் சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்படும்போது (நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தடையாணை போன்றவை) அல்லது விதிவிலக்கான சூழ்நிலைகள் இருப்பதாக நாங்கள் நம்பும்போது (குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் அல்லது மரணம் அல்லது உடற்காயத்தின் உடனடி ஆபத்து போன்றவை).

சட்ட அமலாக்கத் தரவுக் கோரிக்கைகளை நாங்கள் எவ்வாறு கையாளுகிறோம் என்பது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, எங்கள் சட்ட அமலாக்க வழிகாட்டி, தனியுரிமைக் கொள்கை, சேவை நிபந்தனைகளைப் பாருங்கள்.

ஐக்கிய அமெரிக்காவின் குற்றவியல் சட்டக் கோரிக்கைகள்
ஐக்கிய அமெரிக்கச் சட்டச் செயல்முறைக்கு இணங்க பயனர் தகவலுக்கான கோரிக்கைகள்.

அறிக்கையிடல் காலகட்டம்

கோரிக்கைகள்

கணக்கு அடையாளங்காட்டிகள்

கோரிக்கைகளுக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்

ஜூலை 1, 2016 - டிசம்பர் 31, 2016

2,008

3,203

81%

அழைப்பாணை

744

1,278

76%

பேனாப் பதிவேட்டு ஆணை

10

11

70%

நீதிமன்ற ஆணை

108

169

81%

தேடல் வாரண்ட்

1,048

1,620

86%

நெருக்கடி

96

120

69%

ஒட்டுக்கேட்பு ஆணை

2

5

50%

ஐக்கிய அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக் கோரிக்கைகள்
தேசியப் பாதுகாப்புச் சட்டச் செயல்முறைக்கு இணங்க பயனர் தகவலுக்கான கோரிக்கைகள்.

தேசியப் பாதுகாப்பு

கோரிக்கைகள்

கணக்கு அடையாளங்காட்டிகள்*

ஜூலை 1, 2016 - டிசம்பர் 31, 2016

NSL மற்றும் FISA ஆணைகள்/உத்தரவுகள்

O-249

0-249

சர்வதேச அரசாங்கத் தகவல் கோரிக்கைகள்
ஐக்கிய அமெரிக்காவிற்கு வெளியே உள்ள அரசாங்க நிறுவனங்களிலிருந்து பயனர் தகவலுக்கான கோரிக்கைகள்.

அறிக்கையிடல் காலகட்டம்

அவசரக் கோரிக்கைகள்

அவசர கோரிக்கைகளுக்கான கணக்கு அடையாளங்காட்டிகள்

Identifiers for Emergency Requests Percentage of emergency requests where some data was produced

பிற தகவல் கோரிக்கைகள்

பிற கோரிக்கைகளுக்கான கணக்கு அடையாளங்காட்டிகள்

பிற தகவல் கோரிக்கைக்கான தரவு வழங்கப்பட்ட சதவீதம்

ஜூலை 1, 2016 - டிசம்பர் 31, 2016

64

95

73%

137

175

0%

ஆஸ்திரேலியா

4

6

50%

5

8

0%

பிரேசில்

0

0

பொருந்தாது

1

1

0%

கனடா

11

11

100%

2

2

0%

செக் குடியரசு

0

பொருந்தாது

பொருந்தாது

1

4

0%

டென்மார்க்

0

பொருந்தாது

பொருந்தாது

3

4

0%

டொமினிக்கக் குடியரசு

0

பொருந்தாது

பொருந்தாது

1

1

0%

எஸ்டோனியா

0

பொருந்தாது

பொருந்தாது

1

1

0%

பிரான்ஸ்

4

20

100%

19

28

0%

ஜெர்மனி

0

பொருந்தாது

பொருந்தாது

10

13

0%

கிரேக்கம்

0

பொருந்தாது

பொருந்தாது

1

1

0%

ஹங்கேரி

0

பொருந்தாது

பொருந்தாது

1

4

0%

ஐஸ்லாந்து

0

பொருந்தாது

பொருந்தாது

1

1

0%

இந்தியா

0

பொருந்தாது

பொருந்தாது

3

3

0%

அயர்லாந்து

1

1

100%

1

3

0%

இஸ்ரேல்

1

1

0%

0

பொருந்தாது

பொருந்தாது

மால்டா

0

பொருந்தாது

பொருந்தாது

1

1

0%

மெக்சிகோ

0

பொருந்தாது

பொருந்தாது

1

1

0%

நியூசிலாந்து

0

பொருந்தாது

பொருந்தாது

1

1

0%

நார்வே

0

பொருந்தாது

பொருந்தாது

1

1

0%

சிங்கப்பூர்

0

பொருந்தாது

பொருந்தாது

2

2

0%

ஸ்பெயின்

0

பொருந்தாது

பொருந்தாது

2

3

0%

சுவீடன்

0

பொருந்தாது

பொருந்தாது

11

15

0%

ஸ்விட்சர்லாந்து

1

3

0%

2

3

0%

யுனைடெட் கிங்டம்

42

53

69%

64

73

0%

அரசாங்க உள்ளடக்க அகற்றுதல் கோரிக்கைகள்
எங்கள் சேவை நிபந்தனைகள் அல்லது சமூக வழிகாட்டுதல்களின் கீழ் அனுமதிக்கப்படக்கூடிய உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான அரசாங்க நிறுவனத்தின் கோரிக்கைகளை இந்த வகை அடையாளம் காட்டுகிறது.

அறிக்கையிடல் காலகட்டம்

அகற்றுதல் கோரிக்கைகள்

உள்ளடக்கம் அகற்றப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்

ஜூலை 1, 2016 - டிசம்பர் 31, 2016

0

பொருந்தாது

பதிப்புரிமை உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான அறிவிப்புகள் (DMCA)
டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் எங்களுக்குக் கிடைத்த செல்லுபடியாகும் அகற்றுவதற்கான அறிவிப்புகளை இந்த வகை பிரதிபலிக்கிறது.

அறிக்கையிடல் காலகட்டம்

DMCA அகற்றுதல் அறிவிப்புகள்

உள்ளடக்கம் அகற்றப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்

ஜூலை 1, 2016 - டிசம்பர் 31, 2016

18

67%

அறிக்கையிடல் காலகட்டம்

DMCA எதிர் அறிவிப்புகள்

உள்ளடக்கம் மீட்டெடுக்கப்பட்ட கோரிக்கைகளின் சதவீதம்

ஜூலை 1, 2016 - டிசம்பர் 31, 2016

0

பொருந்தாது

* “கணக்கு அடையாளங்காட்டிகள்” என்பவை பயனர் தகவல்களைக் கோரும்போது சட்டச் செயல்முறையில் சட்ட அமலாக்கத்தால் குறிப்பிடப்பட்ட அடையாளங்காட்டிகளின் எண்ணிக்கையைப் பிரதிபலிக்கிறது (எ.கா பயனர்பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் போன்றவை). சில சட்டச் செயல்முறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்காட்டிகள் இருக்கலாம். சில நிகழ்வுகளில், ஒற்றைக் கணக்கைப் பல அடையாளங்காட்டிகள் அடையாளம் காட்டலாம். பல கோரிக்கைகளில் ஒற்றை அடையாளங்காட்டி குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளில், ஒவ்வொரு நிகழ்வும் சேர்க்கப்படுகிறது.