Snap இல், தங்களை வெளிப்படுத்தவும், அக்கணத்தில் வாழவும், உலகைப் பற்றி அறியவும், ஒன்றாகச் சேர்ந்து மகிழவும் மக்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் மனித முன்னேற்றத்திற்கு நாங்கள் பங்களிக்கிறோம். நாங்கள் எங்கள் சமூகத்தின் நல்வாழ்வைப் பற்றி ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம், தயாரிப்புகளை உருவாக்கும்போது வடிவமைப்புச் செயல்முறையின் முன்னிலையாக Snapchat பயனர்களின் தனியுரிமையையும் பாதுகாப்பையும் கருத்தில் கொள்கிறோம்.

ஒவ்வொரு நாளும் எங்கள் சேவைகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த Snapchat பயனர்களை ஊக்குவிக்கும் அதே வேளையில், பரந்த அளவிலான சுய வெளிப்பாட்டை வளர்த்தெடுப்பதன் மூலம் எங்கள் இலக்கினை ஆதரிக்கும் தெளிவான முழுமையான வழிகாட்டுதல்களை நாங்கள் கொண்டிருக்கிறோம். தீங்கு விளைவிக்கும் பொய்யான தகவல்கள், வெறுப்புப் பேச்சு, துன்புறுத்தல், தொந்தரவளித்தல், சட்டவிரோதச் செயல்பாடுகள், பாலியல் வெளிப்படை உள்ளடக்கம், காட்சிப்படுத்தப்பட்ட வன்முறை மற்றும் பலவற்றைப் பகிர்வதை எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் தடை செய்கின்றன.

மீறல் உள்ளடக்கங்களுக்கு எதிராக நாங்கள் அமல்படுத்தியவை, Snapchat பயனர்களின் கணக்குத் தகவல்களுக்கான அரசாங்கக் கோரிக்கைகள் மற்றும் பிற சட்டரீதியான அறிவிப்புகளின் முக்கிய உட்பார்வையை எங்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கை வழங்குகிறது.

பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கான எங்கள் அணுகுமுறை, அவற்றிற்கான வளங்கள் குறித்த மேலதிகத் தகவல்களுக்கு இப்பக்கத்தில் கீழே உள்ள எங்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கையிடுதல் பற்றி என்ற கீற்றைப் பாருங்கள்.

கணக்கு / உள்ளடக்க மீறல்கள்

எங்கள் கேமராவைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் நான்கு பில்லியனுக்கும் அதிகமான Snapகள் உருவாக்கப்படுகின்றன. ஜனவரி 1, 2020 முதல் - ஜூன் 30, 2020 வரை, எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்காக உலகளவில் 3,872,218 உள்ளடக்கங்களுக்கு எதிராக நாங்கள் அமல்படுத்தினோம் - இது எல்லா கதை பதிவுகளிலும் 0.012% க்கும் குறைவாக உள்ளது. பொதுவாக அத்தகைய மீறல்கள் மீது எங்கள் குழுக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கின்றன, அது Snapகளை அகற்றுவது, கணக்குகளை நீக்குவது, காணாமற்போன சுரண்டலுக்குள்ளான குழந்தைகளுக்கான தேசிய மையத்திற்குத் (NCMEC) தகவலைப் புகாரளிப்பது அல்லது சட்ட அமலாக்கத்திற்கு மேலெடுத்துச் செல்லுவது போன்றவையாக இருக்கலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் செயலியினுள் அறிக்கையைப் பெற்ற 2 மணி நேரத்திற்குள் நாங்கள் உள்ளடக்கத்திற்கு எதிராக அமல்படுத்துகிறோம்.

மொத்த உள்ளடக்க அறிக்கைகள் *

மொத்தம் செயற்படுத்திய உள்ளடக்கம்

மொத்தம் செயற்படுத்திய தனித்துவமான கணக்குகள்

13,204,971

3,872,218

1,692,859

H1'20: உள்ளடக்கம் அமல்படுத்தப்பட்டவை

*எங்கள் செயலியினுள்ளும் உதவி விசாரணைகள் மூலமும் பெறப்பட்ட மீறல் குற்றச்சாட்டுகளை உள்ளடக்க அறிக்கைகள் பிரதிபலிக்கின்றன.

**முடிப்பு நேரம் என்பது ஒரு பயனர் அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதற்கான சராசரி நேரத்தை மணிநேரங்களில் பிரதிபலிக்கிறது.

விரிவாக்கப்பட்ட மீறல்கள்

தவறான தகவல்களைப் பரப்புவதை எதிர்த்தல்

தீங்கான உள்ளடக்கத்தைப் பொறுத்த வரை, கொள்கைகளையும் அமலாக்கத்தையும் பற்றி மட்டும் சிந்தித்தால் போதாது — தளங்கள் அவர்களின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பற்றியும் சிந்திக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். தொடக்கத்திலிருந்தே Snapchat வழக்கமான சமூக ஊடகத் தளங்களிலிருந்து வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது, எவ்வித மட்டுறுத்தலும் இல்லாமல் எவரும் எதையும் பகிரும் உரிமை கொண்ட திறந்த செய்தியோடைக்குப் பதிலாக — நெருக்கமான நண்பர்களுடன் பேசுதல் எங்கள் முதன்மை பயன்பாட்டு நோக்கை ஆதரிக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது.

எங்கள் அறிமுகத்தில் நாங்கள் விளக்கியவாறு, வாக்களித்தலைக் குறைத்தல் போன்ற குடிமைச் செயல்பாடுகளை வலுவிழக்கச் செய்வதை இலக்காகக் கொண்ட தவறான தகவல்கள், நிரூபிக்கப்படாத மருத்துவக் கூற்றுகள், மற்றும் துன்ப நிகழ்வுகளை மறுக்கும் சதிக் கோட்பாடுகள் போன்ற தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களைப் பகிர்வதை எங்கள் வழிகாட்டுதல்கள் தெளிவாகத் தடை செய்கின்றன. எங்கள் வழிகாட்டுதல்கள் அனைத்து Snapchat பயனர்களுக்கும் தொடர்ச்சியாகப் பொருந்தும் — அரசியல்வாதிகள் அல்லது பிரபலங்களுக்காக எந்த சிறப்பு விதிவிலக்குகளும் இல்லை.

எங்கள் செயலி முழுவதும் Snapchat வைரல்தன்மையைத் தடுக்கிறது, இது தீங்கு விளைவிக்கும் மற்றும் பரபரப்பான உள்ளடக்கத்திற்கான ஊக்கத்தை நீக்குகிறது, மேலும் தவறான உள்ளடக்கம் பரவுவதுடன் தொடர்புடைய கவலைகளைக் குறைக்கிறது. நாங்கள் திறந்த செய்தியோடையைக் கொண்டிருக்கவில்லை, மேலும் சரிபார்க்கப்படாத உள்ளடக்கம் 'வைரல் ஆவதற்கான' வாய்ப்பை வழங்குவதில்லை. எங்கள் உள்ளடக்கத் தளமான, Discover, சரிபார்க்கப்பட்ட ஊடகப் பதிப்பாளர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்கிகளிடமிருந்து மட்டுமே உள்ளடக்கத்தைக் காட்சிப்படுத்துகிறது.

2020 ஆம் ஆண்டு நவம்பரில், எங்கள் புதிய பொழுதுபோக்குத் தளமான ஸ்பாட்லைட்டை அறிமுகப்படுத்தினோம் மேலும் உள்ளடக்கம் பெரும் பார்வையாளர்களை அடைவதற்கு முன்பாக அது எங்கள் வழிகாட்டுதல்களுடன் இணங்குகிறது என்பதை உறுதிப்படுத்துவதற்காக உள்ளடக்கத்தை முன்கூட்டியே மட்டுறுத்துகிறோம்.

மேலும் அரசியல் விளம்பரங்களுக்கு வித்தியாசமான அணுகுமுறையை வெகு காலம் முன்பே எடுத்துள்ளோம். Snapchat இல் உள்ள அனைத்து உள்ளடக்கங்களையும் போல், எங்கள் விளம்பரங்களிலும் தவறான தகவல்கள் மற்றும் ஏமாற்றும் நடைமுறைகளைத் தடை செய்கிறோம். தேர்தல் தொடர்பான விளம்பரங்கள், பிரச்சினை தீர்வு பரப்புரை விளம்பரங்கள், மற்றும் பிரச்சினை பற்றிய விளம்பரங்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் விளம்பரங்களும் ஆதரவளிக்கும் நிறுவனங்களைத் தெரிவிக்கும் வெளிப்படையான "நிதி வழங்கியோர்" செய்தியைக் கொண்டிருக்க வேண்டும். எல்லா அரசியல் விளம்பரங்களிலும் உண்மை சரிபார்ப்பதற்காக மனித மீளாய்வை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் எங்கள் மீளாய்வில் தேர்ச்சியடையும் எல்லா விளம்பரங்கள் பற்றிய தகவல்களையும் எங்கள் அரசியல் விளம்பர நூலகத்தில் வழங்குகிறோம்.

இது ஒரு கச்சிதமான அணுகுமுறை அல்ல என்றாலும், கோவிட்-19 மற்றும் 2020 அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றிய தவறான தகவல்கள் பல தளங்களிலும் பரவிய போக்கு நிலவிய குறிப்பான இந்தக் காலகட்டத்தில், சமீபத்திய ஆண்டுகளில் தவறான தகவல்களின் பெரும் அதிகரிப்பிலிருந்து Snapchat ஐப் பாதுகாக்க இது எங்களுக்கு உதவியுள்ளது.

இந்தக் காலகட்டத்தில் உலகளவில் எங்கள் தவறான தகவல்கள் வழிகாட்டுதல்களை மீறியதற்காக 5,841 உள்ளடக்கங்கள் மற்றும் கணக்குகளுக்கு எதிராக Snapchat அமல்படுத்தியுள்ளது. எதிர்கால அறிக்கைகளில், தவறான தகவல் மீறல்கள் குறித்து கூடுதல் விரிவான பிரிவுகளை வழங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

2020 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் அமெரிக்காவில் வாக்களிப்பதற்கான அணுகல் மற்றும் தேர்தல் முடிவுகளை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகள் பற்றிய அதிகரித்த கவலையைக் கருத்தில் கொண்டு, எங்கள் தளத்தில் ஏதேனும் சாத்தியமான தவறான பயன்பாட்டிற்கான வாய்ப்பு அல்லது ஆபத்தை மதிப்பிடுதல், எல்லா வடிவமைப்புகளையும் கண்காணித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்திய உள்ளார்ந்த பணிக் குழுவை நாங்கள் உருவாக்கினோம், மேலும் சரியான செய்தி மற்றும் தகவலின் மூலமாக Snapchat இருப்பதை உறுதிப்படுத்துவதற்காகப் பணியாற்றினோம். இந்த முயற்சிகளில் இவையும் அடங்கும்:

  • தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்திற்கான எங்கள் வகைப்பாட்டில், டீப் ஃபேக் போன்ற தவறாக வழிநடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்ட ஊடகங்களைச் சேர்ப்பதற்காக எங்கள் சமூக வழிகாட்டுதல்களைத் திருத்தினோம்;

  • பதிப்பாளர்கள் ஏதேனும் தவறான செய்திகளை செய்தி அறிக்கைகள் மூலம் தவறுதலாக ஊக்குவிப்பதைத் தவிர்ப்பதற்காக எங்கள் Discover செய்தி கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றினோம்;

  • எங்கள் Discover உள்ளடக்கத் தளத்தில் உள்ளடக்கம் தோன்றும் Snap நட்சத்திரங்கள் எங்கள் சமூக வழிகாட்டுதல்களுடன் இணங்குவதையும், வேண்டுமென்றே தவறான தகவலைப் பரப்பவில்லை என்றும் உறுதிப்படுத்த அவர்களிடம் கோரினோம்;

  • எந்தவொரு மீறல் உள்ளடக்கத்திற்கும் தெளிவான அமலாக்க வெளிப்பாட்டைக் கொண்டிருந்தோம் — அவை பரவலாகப் பகிரப்படும் தீங்கை உடனடியாகக் குறைப்பதற்காக உள்ளடக்கத்தை அடையாளமிடுவதற்குப் பதிலாக, நாங்கள் அவற்றை நீக்கினோம்; மேலும்

  • இடர்களை மதிப்பிடுவதற்காகவும் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்காகவும் Snapchat இல் தவறான தகவல்களைப் பகிர பயன்படுத்தப்படக் கூடிய தவறான தகவல்களின் பிற மூலங்களையும் நிறுவனங்களையும் முன்கூட்டிய பகுப்பாய்வு செய்தோம்.

கோவிட்-19 பெருந்தொற்றுக் காலம் முழுவதும், எங்கள் Discover செய்தி கூட்டாளர்கள் வழங்கும் செய்தியறிக்கை வழியாக, பொதுச் சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடனான PSAகள் மற்றும் Q&A’கள் வழியாக, மிகைப்படுத்தப்பட்ட மெய்மை லென்ஸஸ் மற்றும் வடிகட்டிகள் போன்ற ஆக்கப்பூர்வக் கருவிகள் வழியாக, வல்லுநர்களின் பொதுச் சுகாதார வழிகாட்டுதல்களை Snapchat பயனர்களுக்கு நினைவுபடுத்துதல் போன்றவற்றின் வழியே உண்மைச் செய்திகளையும் தகவல்களையும் வழங்குவதற்காக இதுபோன்ற அணுகுமுறைகளை நாங்கள் எடுத்துள்ளோம்.

அட்டவணை விசை

காரணம்

உள்ளடக்க அறிக்கைகள்*

செயல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்

செயல்படுத்தப்பட்ட தனித்துவமான கணக்குகள்

முடிப்பு நேரம்**

1

தொந்தரவளித்தலும் துன்புறுத்தலும்

857,493

175,815

145,445

0.4

2

வெறுப்புப் பேச்சு

229,375

31,041

26,857

0.6

3

ஆள்மாறாட்டம்

1,459,467

22,435

21,510

0.1

4

ஒழுங்குபடுத்தப்பட்ட பொருட்கள்

520,426

234,527

137,721

0.3

5

பாலியல் வெளிப்படை உள்ளடக்கம்

8,522,585

3,119,948

1,160,881

0.2

6

ஸ்பேம்

552,733

104,523

59,131

0.2

7

அச்சுறுத்தல் / வன்முறை / தீங்கு

1,062,892

183,929

141,314

0.5

*எங்கள் செயலியினுள்ளும் உதவி விசாரணைகள் மூலமும் பெறப்பட்ட மீறல் குற்றச்சாட்டுகளை உள்ளடக்க அறிக்கைகள் பிரதிபலிக்கின்றன.

**முடிப்பு நேரம் என்பது ஒரு பயனர் அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதற்கான சராசரி நேரத்தை மணிநேரங்களில் பிரதிபலிக்கிறது.

விரிவாக்கப்பட்ட மீறல்கள்

சிறார் பாலியற் சுரண்டலும் தவறான பயன்பாடும்

எங்கள் சமூகத்திலுள்ள எந்த உறுப்பினரையும்—குறிப்பாக இளம் வயதினரைச்—சுரண்டுவது என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் Snapchat இல் தடைசெய்யப்பட்டதாகவும் உள்ளது. எங்கள் தளத்தில் தவறான பயன்பாட்டினைத் தடுப்பது, கண்டறிவது, மற்றும் நீக்குவதே எங்களின் முன்னுரிமையாக உள்ளது, மேலும் இந்த வகைச் சட்டவிரோதச் செயல்பாடுகளை எதிர்கொள்வதற்கான எங்கள் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம்.

எங்கள் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக் குழுவினால் சிறார் பாலியல் தவறான பயன்பாட்டுப் பொருட்களின் (CSAM) அறிக்கைகள் விரைவாக மதிப்பாய்வு செய்யப்படுகின்றன, இந்தச் செயல்பாட்டிற்கான சான்று இருப்பின் அது கணக்கு நிறுத்தப்படுதல், காணாமற்போன சுரண்டலுக்குள்ளான குழந்தைகளுக்கான தேசிய மையத்திற்குப் (NCMEC) புகாரளித்தல் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது. காணாமற்போன அல்லது ஆபத்திலிருக்கும் இளம் பருவத்தினர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் உதவிக்காக எங்களைத் தொடர்பு கொள்ளும் சர்வதேச சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு எந்நேரமும் ஆதரவை வழங்குகிறோம்.

சிறார் பாலியற் சுரண்டல் தவறான பயன்பாடு குறித்த அறியப்பட்ட படங்களைப் பதிவேற்றுவதை முன்கூட்டியே கண்டறிந்து புகாரளிப்பதற்கு புகைப்பட டி.என்.ஏ (PhotoDNA) தொழினுட்பத்தைப் பயன்படுத்துகிறோம், எந்தவொரு நிகழ்வுகளையும் அதிகாரிகளுக்குப் புகாரளிக்கிறோம். சமூக வழிகாட்டுதல்கள் மீறல்களுக்கு எதிராக அமல்படுத்தப்பட்ட மொத்தக் கணக்குகளில் 2.99% ஐ சிறார் பாலியல் தவறான பயன்பாட்டுப் பொருட்கள் (CSAM) அகற்றுதலுக்காக நீக்கியுள்ளோம்.

மேலும், இவற்றில் 70% ஐ Snap முன்கூட்டியே நீக்கியது.

மொத்தக் கணக்கு நீக்கங்கள்

47,136

பயங்கரவாதம்

Snapchat இலிருந்து பயங்கரவாத அமைப்புகளும் வெறுப்பைப் பரப்பும் குழுக்களும் தடைசெய்யப்பட்டுள்ளன, மேலும் வன்முறைத் தீவிரவாதத்தையோ பயங்கரவாதத்தையோ ஆதரித்துப் பேசும் அல்லது முன்னெடுத்துச் செல்லும் உள்ளடக்கத்தை நாங்கள் சகித்துக்கொள்வதில்லை.

மொத்தக் கணக்கு நீக்கங்கள்

<10

நாடு கண்ணோட்டம்

இந்தப் பிரிவு தனித்தனி நாடுகளின் மாதிரியில் எங்கள் விதிகளை அமல்படுத்துவது பற்றியக் கண்ணோட்டத்தை அளிக்கிறது. எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் Snapchat இல் உள்ள அனைத்து உள்ளடக்கத்திற்கும்— இடங்கருதாது—உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து Snapchat பயனர்களுக்கும் பொருந்தும்.

பிற எல்லா நாடுகளுக்கான தகவல்களும் இணைக்கப்பட்ட CSV கோப்பு வழியாகப் பதிவிறக்கக் கிடைக்கின்றன.

பிராந்தியம்

உள்ளடக்க அறிக்கைகள்*

செயல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்

செயல்படுத்தப்பட்ட தனித்துவமான கணக்குகள்

வட அமெரிக்கா

5,769,636

1,804,770

785,315

ஐரோப்பா

3,419,235

960,761

386,728

உலகின் பிற பகுதிகள்

4,016,100

1,106,687

413,272

மொத்தம்

13,204,971

3,872,218

1,578,985