Snapchat இல் இசை வழிகாட்டுதல்கள்
இசை உங்கள் உணர்ச்சிகளைக் காட்டலாம், உங்கள் வெளிப்பாட்டை அதிகரிக்கலாம், நீங்கள் உண்மையில் எப்படி உணர்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தலாம் மற்றும் அக்கணத்திற்கான மனநிலையை அமைக்கலாம். அதனால் தான் நாங்கள் ஒரு இசை நூலகத்தை வழங்கத் தொடங்கியுள்ளோம் (இதை நாங்கள் "ஒலிகள்") Snapchat கேமராவைப் பயன்படுத்தி இதை நீங்கள் புகைப்படம் மற்றும் வீடியோ செய்திகளில் சேர்க்கலாம் (இதை நாங்கள் "Snaps" என்று அழைக்கிறோம்). நீங்கள் ஒலிகளை வைத்து என்ன செய்கிறீர்கள் என்பதைப் பார்க்க நாங்கள் ஆவலாக உள்ளோம், ஆனால் உங்கள் பயன்பாடானது பின்வரும் வழிகாட்டுதல்களுடன் இணங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இது Snap சேவை விதிமுறைகளின் பிற்சேர்க்கையாகும்.
அங்கீகரிக்கப்படாத இசை கேட்கும் சேவை அல்லது பிரீமியம் இசை வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை உருவாக்கும் வகையில் ஒலிகளைப் பயன்படுத்தி நீங்கள் Snaps -ஐ உருவாக்க, அனுப்ப அல்லது பதிவிடக் கூடாது.
அரசியல் மற்றும் மதம் உட்பட, சுய வெளிப்பாட்டை நாங்கள் ஆதரிக்கும் அதே வேளையில், அரசியல் மற்றும் மதம் சார்ந்த கூற்றுகளில் தங்கள் படைப்புகள் எப்போது, எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதைத் தீர்மானிக்கக் கலைஞர்களுக்கு உரிமை உண்டு என்றும் நாங்கள் நம்புகிறோம். எனவே, நீங்கள் அரசியல் அல்லது மதம் சார்ந்த உரையில் ஒலிகளைப் பயன்படுத்தக்கூடாது.
பின்வருபவை போன்ற, Snap சேவை விதிமுறைகளை மீறும் Snaps -ஐ உருவாக்க, அனுப்ப அல்லது பதிவிட நீங்கள் ஒலிகளைப் பயன்படுத்தக்கூடாது:
சட்டவிரோதமான Snaps;
அச்சுறுத்தக்கூடிய, ஆபாசமான, வெறுப்பூட்டும் பேச்சுடைய, வன்முறையைத் தூண்டக்கூடிய அல்லது நிர்வாணமாக இருக்கும் (தாய் பால் கொடுப்பது அல்லது பாலியல் அல்லாத சூழல்களில் நிர்வாணத்தின் பிற சித்தரிப்புகள் தவிர) அல்லது கிராஃபிக் அல்லது தேவையற்ற வன்முறையைக் கொண்ட Snaps; அல்லது
விளம்பரம், தனியுரிமை, பதிப்புரிமை, வணிக முத்திரை அல்லது பிற அறிவுசார் சொத்துரிமைகள் உட்பட ஆனால் அவை மட்டும் அல்லாமல், வேறொருவரின் உரிமைகளை மீறும் Snaps.
நீங்கள் மெல்லிசையின் அடிப்படைத்தன்மை அல்லது ஒலிகளின் வரிகளை மாற்றவோ ஒலிகளின் தழுவல்களை உருவாக்கவோ கூடாது. நீங்கள் (எங்கள் தனிப்பட்ட விருப்பப்படி தீர்மானிக்கப்படும்) ஆட்சேபிக்கத்தக்க அல்லது புண்படுத்தும் வகையில் அல்லது எங்களை, எங்கள் உரிமதாரர்களை, சேவைகளை அல்லது பிற பயனர்களை ஏதேனும் பொறுப்பு அல்லது கேடிற்கு உள்ளாக்கும் வகையில் ஒலிகளைப் பயன்படுத்தக்கூடாது.
ஒலிகள் உங்கள் தனிப்பட்ட, வணிகமல்லாப் பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, எந்தவொரு பிராண்ட், தயாரிப்புகள், சரக்குகள், அல்லது சேவைகளால் ஸ்பான்சர் செய்யப்படும், அவற்றை விளம்பரப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் Snapகளை (அல்லது Snapகள் தொடரை) உருவாக்க, அனுப்ப அல்லது பதிவிட ஒலிகளைப் பயன்படுத்தக்கூடாது.
ஒலிகளைப் பயன்படுத்தும் Snaps -ஐ இந்தச் சேவை மூலமாக மட்டுமே அனுப்ப அல்லது பதிவிட வேண்டும். ஒலிகளைப் பயன்படுத்தும் Snaps -ஐ மூன்றாம் தரப்பு சேவைகளில் அனுப்ப, பகிர அல்லது பதிவிடக் கூடாது. ஒலிகளைக் கொண்ட Snaps -இன் அங்கீகரிக்கப்படாத விநியோகமானது, பதிப்புரிமை மீறல் சட்டங்கள் மற்றும் பொருந்தக்கூடிய மூன்றாம் தரப்பு சேவையின் உரிமைகள், கொள்கைகள் மற்றும் அதிகாரம் உட்பட, பொருந்தும் எந்தவொரு சட்டத்திற்கும் உட்பட்டதாகும்.
இந்த வழிகாட்டுதல்களுக்கு இணங்காத வகையில் நீங்கள் ஒலிகளைப் பயன்படுத்தினால், அத்தகைய பயன்பாடானது உங்களிடம் தெரிவிக்கப்படாமலேயே சேவையிலிருந்து நீக்கப்படலாம், மேலும் பதிப்புரிமை மீறல் சட்டங்கள் உட்படப் பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் நீங்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படலாம். ஒலிகளில் கிடைக்கும் இசை மூன்றாம் நபர்களின் உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது. பொருந்தக்கூடிய உரிமைதாரர்(கள்) இடமிருந்து தனி உரிமம் இல்லாமல் உரை அல்லது தரவு எடுக்கும் நோக்கங்களுக்காக இந்த இசை எதையும் பயன்படுத்த உங்களுக்கு அனுமதி கிடையாது. அத்தகைய அனைத்து உரிமைகளும் பொருந்தக்கூடிய உரிமைதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
உங்கள் உள்ளடக்கத்தில் ஒலிகளைத் தவிர வேறு ஏதாவது இசை இருந்தால், அத்தகைய இசைக்குத் தேவையான உரிமங்கள் மற்றும் உரிமைகளைப் பெறுவது உங்கள் பொறுப்பாகும். உங்களது இசையின் பயன்பாடு அங்கீகரிக்கப்படவில்லை என்றால் அத்தகைய எந்தவொரு உள்ளடக்கமும் ஒலி முடக்கப்படலாம், அகற்றப்படலாம் அல்லது நீக்கப்படலாம். இந்த இசை வழிகாட்டுதல்களை மீறுதல் உங்கள் Snap கணக்கின் செயலிழப்பிற்கு வழிவகுக்கலாம். அனைத்துப் பிராந்தியங்களிலும் ஒலிகள் கிடைக்காமல் போகலாம்.