பொது உள்ளடக்க காட்சிப்படுத்தல் விதிமுறைகள்
இந்த பொது உள்ளடக்க காட்சிப்படுத்தல் விதிமுறைகளில், “Snap”, “நாங்கள்” மற்றும் “எங்களுடைய” என்பது Snap Inc. (நீங்கள் அமெரிக்காவில் வசிக்கிறீர்கள் அல்லது அமெரிக்காவில் அமைந்துள்ள ஒரு வணிகத்தின் சார்பாக சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால்) அல்லது Snap Group Limited (நீங்கள் வேறு இடத்தில் வாழ்ந்தால் அல்லது வேறு இடத்தில் அமைந்துள்ள வணிகத்தின் சார்பாக நீங்கள் சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால்) என்று அர்த்தம். Snap-இன்ஆடியோவிஷுவல் பிளேயர் அல்லது நாங்கள் உங்களுக்கு கிடைக்கச்செய்யும் பிற தயாரிப்பு (களை) உட்பொதிப்பதன் மூலம் (“Embed”), இந்த பொது உள்ளடக்க காட்சி விதிமுறைகளை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள், அவை எங்கள் சேவை விதிமுறைகள்,தனியுரிமைக் கொள்கை,சமூக வழிகாட்டுதல்கள், மற்றும் விளம்பர கொள்கைகள் (கூட்டாகவும், இந்த பொது உள்ளடக்க காட்சிபடுத்தல் விதிமுறைகளுடன், “விதிமுறை”) ஆகியவற்றை மேற்கோளின் மூலம் இணைக்கின்றன. Embed என்பது எங்கள் சேவைகளில் ஒன்றாகும், ஏனெனில் அந்தச் சொல் எங்கள் சேவை விதிமுறைகளில் வரையறுக்கப்பட்டு விதிமுறைகள் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. விதிமுறைகளை கவனமாகப் படிக்கவும். முன்னறிவிப்பின்றி எந்த நேரத்திலும் நாங்கள் விதிமுறைகளை புதுப்பிக்கலாம் அல்லது மாற்றலாம், எனவே தயவுசெய்து அவற்றை தவறாமல் படிக்கவும். சேவையை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், விதிமுறைகளுக்கான புதுப்பிப்புகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். இந்த பொது உள்ளடக்க காட்சிப்படுத்தல் விதிமுறைகள் சேவையை நிர்வகிக்கும் பிற விதிமுறைகளுடன் முரண்படும் அளவிற்கு இந்த பொது உள்ளடக்க காட்சிப்படுத்தல் விதிமுறைகள் பொருந்தும்.
சேவை விதிமுறைகள் நினைவூட்டல் மற்றும் நடுவர் தீர்ப்பு அறிவிப்பு அமெரிக்காவில் வசிக்கும் மற்றும் அமெரிக்காவில் வணிகம் செய்யும் எங்கள் பயனர்களுக்கு ஒரு நினைவூட்டலாக, எங்கள் சேவை விதிமுறைகள், பின்வரும் பிரிவுகளை உள்ளடக்கியது: இழப்புக் காப்புறுதி, பொறுப்புத் துறப்புகள், கடப்பாடு மற்றும் நடுவர் தீர்ப்பு வரம்பு, பிரதிநிதித்துவ நடவடிக்கை மற்றும் நடுவர் உரிமை விலக்கு ஆகியவை இந்த பொது உள்ளடக்க காட்சிப்படுத்தல் விதிமுறைகளுக்குப் பொருந்தும் மற்றும் இவற்றில் ஒருங்கிணைகிக்கப்பட்டுள்ளன. எங்கள் சேவை விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள சச்சரவுகள் சில வகைகளைத் தவிர்த்து, பிற விஷயங்களுக்கிடையில், நீங்களும் Snap-உம் ஒப்புக்கொள்வதாவது-நமக்கிடையே உள்ள சச்சரவுகள் கட்டாய பிணைப்பு நடுவர் தீர்ப்பால் தீர்க்கப்படும், மேலும் நீங்களும் Snap-உம் பிரதிநிதித்துவ நடவடிக்கை வழக்கு அல்லது பிரதிநிதித்துவ நடுவர் தீர்ப்பு வழக்கில் பங்கேற்கும் உரிமைக்கு விலக்கு அளிக்கிறீர்கள்.
(அ) பொது உள்ளடக்கத்தை விநியோகிப்பதற்காக ஒரு வலைத்தளம் அல்லது மொபைல் செயலியில் Embed -ஐப் பயன்படுத்துவதற்கு (எங்கள் சேவை விதிமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ளது) மற்றும் (ஆ) Snapchat செயலியை Embed-இன் மூலமாகக் கூற மட்டுமே.Snapchat பெயர் மற்றும் வணிகச் சின்னத்தைக் காட்சிப்படுத்துவதற்கு Snapஉங்களுக்கு தனிப்பட்ட, உலகளாவிய, பிரத்தியேகமற்ற, ராயல்டி இல்லாத, மாற்ற முடியாத, துணைக்கு உரிமத்திற்கு உட்படுத்த முடியாத, திரும்பப்பெறக்கூடிய உரிமத்தை வழங்குகிறது
இந்த பிரிவில் உங்களுக்கு வெளிப்படையாக வழங்கப்படாத அனைத்து உரிமைகளும் Snapமூலம் ஒதுக்கப்பட்டவை. இந்த விதிமுறைகளில் எதுவும் உங்களுக்கு எந்தவிதமான மறைமுகமான உரிமத்தையும் வழங்கவில்லை.
Embed-ஐப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் Snapchat செயலிக்கு வெளியே பொது உள்ளடக்கத்தைக் காட்சிப்படுத்த முடியும். எங்கள் சமூகத்தின் உறுப்பினர்கள் (நீங்கள் உட்பட) பொது உள்ளடக்கத்தை பரந்த பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த அம்சத்தை நாங்கள் வழங்கும்போது, , அதைப் பயன்படுத்தும் போது பின்வருவனவற்றை நீங்கள் பின்பற்ற வேண்டும்:
Snapchat பிராண்ட் வழிகாட்டுதல்கள் உட்பட, நாங்கள் வழங்கும் எந்தவொரு பிராண்டிங் அல்லது பண்புக்கூறு தேவைகளுக்கும் இணங்க எப்போதும் Embed மற்றும் பொது உள்ளடக்கத்தை பயன்படுதுங்கள்.
ஒரு நினைவூட்டலாக, உங்கள் Embed-இன் பயன்பாடு இன்னும் Snapchat பயன்பாடாகும், மேலும் இது எங்கள் சமூக வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும்
இந்த பொது உள்ளடக்க காட்சிப்படுத்தல் விதிமுறைகளில் நாங்கள் உங்களுக்கு வழங்கிய உரிமத்தில் மூன்றாம் நபர் அறிவுசார் சொத்துக்கான உரிமம் அல்லது பொது உள்ளடக்கத்தில் சேர்க்கப்படக்கூடிய பிற தனியுரிம உரிமைகள் இல்லை. Embed-ஐப் பயன்படுத்தி ஒரு வலைத்தளத்திலோ அல்லது மொபைல் செயலியிலோ பொது உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கும் விநியோகிப்பதற்கும் முன்பு தேவையான அனைத்து உரிமைகள், அனுமதிகள் மற்றும் உரிமங்களைப் பெற ஒப்புக்கொள்கிறீர்கள்.
எங்களால் அல்லது பொது உள்ளடக்கத்தின் வேறு எந்த உரிமையாளராலும் பொது உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள எந்தவொரு தேவைகள் அல்லது கட்டுப்பாடுகளுடன் எப்போதும் இணங்க வேண்டும்.
நாங்கள் - அல்லது அது நாங்கள் இல்லையென்றால்பொது உள்ளடக்கத்தின் உரிமையாளர்,அகற்றும்படி கேட்கும் எந்தவொரு பொது உள்ளடக்கத்தையும் தொடர்புடைய Embed-ஐயும் உடனடியாக அகற்றவும்.
பொது உள்ளடக்கத்தின் உரிமையாளரின் வெளிப்படையான அனுமதியின்றி எந்தவொரு விளம்பரம் அல்லது விளம்பர தயாரிப்புகளிலும் பொது உள்ளடக்கத்தைப் பயன்படுத்த வேண்டாம்.
Snap, அதன் பயனர்கள் அல்லது மூன்றாம் நபர் உள்ளடக்க வழங்குநர்கள் ஆகியோருடன் ஸ்பான்சர்ஷிப், ஒப்புதல் அல்லது தவறான தொடர்பைக் குறிக்க Embed அல்லது பொது உள்ளடக்கத்தைப் பயன்படுத்த வேண்டாம்.
Embed அல்லது பொது உள்ளடக்கம் அல்லது Snapchat பயன்பாடு தொடர்பான தரவை விதிமுறைகளை மீறும் வகையில் சேகரிக்க வேண்டாம்.
பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்கள், விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க எப்போதும் Embed மற்றும் பொது உள்ளடக்கத்தை பயன்படுத்துங்கள்.
ஒரு வலைத்தளத்தின் Embed அல்லது பொது உள்ளடக்கம் அல்லது விதிமுறைகளுடன் முரண்படும் சொற்களைக் கொண்ட மொபைல் செயலியைப் பயன்படுத்த வேண்டாம்.
Embed அல்லது பொது உள்ளடக்கத்தை Snapchat பயன்பாட்டைத் தவிர வேறு ஒரு சமூக தளம் அல்லது ஊடகத்திலிருந்து வந்ததைக் குறிக்கும் வகையில் அதைப் பயன்படுத்த வேண்டாம்.
Snapchat செயலியை நகலெடுக்க அல்லது அதனுடன் போட்டியிட Embed அல்லது பொது உள்ளடக்கத்தைப் பயன்படுத்த வேண்டாம்.
ஒரு வலைத்தளம் அல்லது மொபைல் செயலியில்பொது உள்ளடக்கத்தைக் காட்சிப்படுத்துவதன் மூலம், எங்கள் வேறு எந்த விதிமுறைகளிலும் சேர்க்கப்பட்டுள்ள மறுப்புகளுக்கு கூடுதலாக, பொது உள்ளடக்கம் எங்கள் பயனர்களால் உருவாக்கப்பட்டது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள், மேலும் இது அனைத்து பார்வையாளர்களுக்கும் அல்லது வயதினருக்கும் பொருந்தாது. எனவே, பொது உள்ளடக்கத்தின் அடிப்படையில் அல்லது எழும் எந்தவொரு உரிமைகோரல்களுக்கும் Snap பொறுப்பல்ல என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.