Purchase Orders and Payments
புதுப்பிக்கப்பட்டது: 8 ஜனவரி, 2021
நீங்கள் Snap-இல் புதிய வழங்குநராக இருந்தால், நாங்கள் வணிகம் செய்ய எங்கள் பேமெண்ட் ஆர்டர் மற்றும் பேமெண்ட் அமைப்பான ஆரக்கிளில் நீங்கள் பதிவு செய்திருக்க வேண்டும். உங்கள் Snap தொடர்புப் புள்ளி வழங்குநர் ஆன்போர்டிங் செயல்முறையைத் தொடங்க முடியும். இது வழங்குநர் பதிவு மின்னஞ்சலை நீங்கள் பெறுவதில் முடிவடையும். பதிவு மின்னஞ்சல் உங்களை Snap வழங்குநர் பதிவுப் போர்ட்டலுக்கு அழைத்துச் செல்லும், அங்கு நீங்கள் வழங்குநர் மற்றும் பயனர் கணக்கை உருவாக்குவீர்கள்.
நீங்கள் பதிவு மின்னஞ்சல் கோரிக்கையைப் பெற்றவுடன் இந்த படிப்படியான ஆன்போர்டிங் வழிகாட்டியைப் பார்க்கவும். இந்த ஆவணம் உங்களுக்கு பதிவுச் செயல்முறைக்கு வழிகாட்டும். உங்களுக்கு கேள்விகள் அல்லது கவலைகள் எதேனும் இருந்தால் suppliers@snap.com-ஐத் தொடர்புகொள்க.
Snap தனது உலகளாவிய வணிக நிறுவனங்கள் அனைத்திற்கும் கொள்முதல் ஆணைகளை அறிமுகம் செய்துள்ளது. உங்களிடம் கொள்முதல் ஆணைகள் இணைக்கப்படாத கொள்முதல் கோரிக்கைகள் எதேனும் இருந்தால், எந்த சரக்குகள் அல்லது சேவைகளையும் விநியோகிக்கும் முன் கொள்முதல் ஆணை தேவையா என Snap தொடர்புப் புள்ளி அல்லது Snap-இன் கொள்முதல் அணியுடன் purchasing@snap.com இணைந்து செயல்படுங்கள்.
PO உருவாக்கத்திற்கு முந்தைய தேதியைக் காட்டும் எந்த இன்வாய்ஸ்களும், பணம் செலுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகளுடன், அக மதிப்பாய்வுகளுக்காக வைக்கப்படும்.
அனைத்து விலைப்பட்டியல்களும் செயலாக்கத்திற்கு ap.invoices@snapchat.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யப்பட வேண்டும்.
செயலாக்கம் அல்லது பேமெண்ட்டில் எந்தவித தாமதமும் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய, விலைப்பட்டியலை சமர்ப்பிக்கும் முன் குறைந்தபட்ச விலைப்பட்டியல் தேவைகள் பூர்த்திசெய்யப் படுவதை நாங்கள் கேட்கிறோம்.
விலைப்பட்டியல் குறைந்தபட்ச தேவைகள்:
விலைப்பட்டியல் PDF வடிவத்தில் உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் (இணைப்பு ஒன்றுக்கு 1 விலைப்பட்டியல்)
உங்கள் நிறுவனத்தின் பெயர்
விலைப்பட்டியல் எண்
விலைப்பட்டியல் தேதி
Snap வழங்கிய PO எண் (PR எண் இல்லை)
Snap சட்ட நிறுவனம் மற்றும் Snap வழங்கிய PO-இல் குறிப்பிட்டுள்ளவாறு பில்லிங் முகவரி
செலுத்தப்படவேண்டிய மொத்த தொகை மற்றும் பேமெண்ட் கரன்சி
ஷிப்பிங் வசூலிக்கப்பட்டால், அதை தனியாக லேபிள் செய்யவும்
பேமெண்ட் வழிமுறைகள் (விருப்பத்திற்கானவை)
நீங்கள் சேவைகளை வழங்கினால், விலைப்பட்டியலில் உள்ளடங்க வேண்டியவை (1) மணிநேர ரேட்கள், (2) சேவை தேதிகள் அல்லது தேதி வரம்பு மற்றும் (3) பராமரிப்பு சேவைகள் எனில், பொருந்தும் கையொப்பமிடப்பட்ட சேவை ஆணைகளின் பிரதிகள்.
தரப்பினருக்கு இடையே நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனில், எங்கள் செயல்முறையைப் பின்பற்றி துல்லியமான விலைப்பட்டியலை Snap பெற்றதன் அடிப்படையில், Snapஇன் வழக்கமான பேமெண்ட் விதிமுறைகள் விலைப்பட்டியல் தேதியில் இருந்து மொத்தம் 60 நாட்கள் ஆகும்.
உங்கள் ஆரக்கிள் வழங்குநர் போர்ட்டல் அணுகலை பயன்படுத்தி உங்கள் விலைப்பட்டியல் மற்றும் பேமெண்ட் நிலையை சரிபார்க்கவும். பின்வரும் இணைப்பு வழங்குநர் போர்ட்டளுக்கு உங்களை வழிநடத்தும்.
தொடர்புடைய வழங்குநர் ஆன்போர்டிங் ஆவணங்களை முடித்துவிட்டதை உறுதிசெய்ய உங்கள் Snap தொடர்பு நபருக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
உங்கள் Snap தொடர்பு நபர் வழங்குநர் ஆன்போர்டிங் ஆவணப் பணியை ஏற்கனவே முடிந்திருந்து உங்களுக்கு ஆரக்கிளில் இருந்து மின்னஞ்சல் இதுவரை வந்திருக்காவிட்டால் பின்தொடர suppliers@snap.com -இல் எங்களைத் தொடர்புகொள்க
.
Please contact the relevant Accounts Payable team via:
Country
Area of support
AP Email Address
Global
Invoice & Payment Concerns
ap@snapchat.com
Global
Invoice Submission Only
ap.invoices@snapchat.com
Global
PO Questions and Concerns
purchasing@snapchat.com
Global
Supplier Registration & Profile Management
suppliers@snapchat.com