Snap லென்ஸ் உருவாக்குபவர்க்கான வெகுமதிகள் திட்ட விதிமுறைகள்

செயல்படுத்தியது: 1 ஜூன், 2024

நடுவர் தீர்ப்பாய அறிவிப்பு: இந்த விதிமுறைகளில் பின்னர் ஒரு நடுவர் தீர்ப்புவாசகம் உள்ளது.

அறிமுகம்

நாங்கள் இந்த லென்ஸஸ் படைப்பாளர் வெகுமதி திட்ட விதிமுறைகளை ("விதிமுறைகள்") வடிவமைத்துள்ளோம், இதன் மூலம் நீங்கள் சமர்ப்பிக்கும் லென்ஸஸ்களுக்கு, லென்ஸஸ் படைப்பாளர்கள் வெகுமதி திட்டத்தில் ("திட்டம்") பங்குபெறுவதற்கு பொருந்தும் விதிகளை உங்களால் அறிந்து கொள்ள முடியும், இந்த விதிகளின்படி தகுதி பெற்றுள்ளீர்களா என அறிய முடியும். Snapchat இல் Lens Studio விற்குள் சிறப்பாக செயல்படும் லென்ஸ்களை சமர்ப்பிப்பதற்கான சேவைகள் தொடர்பாக Snap இல் இருந்து வெகுமதிகளைப் பெற இந்த விதிமுறைகளில் (இந்த விதிமுறைகள் முழுவதும் நாங்கள் "சேவை வழங்குநர்கள்" அல்லது "படைப்பாளர்கள்" என குறிப்போம்) தகுதிகளை நிறைவு செய்யும் பயனர்களை திட்டம் அனுமதிக்கின்றது.  திட்டம் மற்றும் இந்த விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தயாரிப்பும் சேவையும் Snap சேவை விதிமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ளபடி "சேவைகள்" எனப்படும். இந்த விதிமுறைகள் Snap சேவை விதிமுறைகள், சமூக வழிகாட்டுதல்கள், Lens Studio விதிமுறைகள், Lens Studio உரிம ஒப்பந்தம், Snapchat பிராண்ட் வழிகாட்டுதல்கள், Snapcode பயன்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் Lens Studio சமர்ப்பிப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் சேவைகளை நிர்வகிக்கும் பிற விதிமுறைகள், கொள்கைகள் அல்லது வழிகாட்டுதல்களைக் குறிப்பிடுவதன் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றன. நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது தகவல்களை எவ்வாறு கையாளுகிறோம் என்பதை அறிய எங்கள் தனியுரிமைக் கொள்கையையும் மதிப்பாய்வு செய்க. இந்தப் விதிமுறைகளைக் கவனமாகப் படிக்கவும்.

இந்த விதிமுறைகள் உங்களுக்கும் (அல்லது உங்கள் அமைப்பு) Snap-க்கும் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளது) இடையே சட்டப்பூர்வமாக பிணைக்கும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கிறது. இந்த விதிமுறைகளின் நோக்கத்திற்காக, “Snap” என்பதன் அர்த்தமானது: 

  • Snap Inc. (நீங்கள் அமெரிக்காவில் வசிக்கிறீர்கள் அல்லது அமெரிக்காவில் தனது முதன்மை தொழில் இடத்தைக் கொண்டுள்ள ஒரு தொழிலின் சார்பாக சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள் எனில்); 

  • Snap Camera India Private Limited (நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள் அல்லது இந்தியாவில் தனது முதன்மை தொழில் இடத்தைக் கொண்டுள்ள ஒரு தொழிலின் சார்பாக சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள் எனில்); அல்லது 

  • Snap Group Limited (நீங்கள் உலகில் வேறு எங்கும் வசிக்கிறீர்கள் அல்லது உலகில் வேறு எங்கும் தனது முதன்மை தொழில் இடத்தைக் கொண்டுள்ள ஒரு தொழிலின் சார்பாக சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள் எனில்). 

இந்த விதிமுறைகள் சேவையை நிர்வகிக்கும் பிற விதிமுறைகளுடன் முரண்பட்டால், இந்த விதிமுறைகளே திட்டத்தின் மீது முழுமையாக பொருந்தும். விதிமுறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள, ஆனால், வரையறுக்கப்படாத பெரிய எழுத்துச் சொற்கள் அனைத்தும், சேவையைக் கட்டுப்படுத்துகிற பொருந்தும் விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி தங்களுடைய சொந்தப் பொருளைக் கொண்டுள்ளன. தயவுசெய்து இந்த விதிமுறைகளின் நகலை அச்சிட்டு அவற்றை உங்கள் குறிப்புக்காக வைத்துக் கொள்ளவும்

கீழே உள்ளவாறு விரிவாக விவரிக்கப்பட்டுள்ளபடி, பொருந்தும் தகுதி வரம்பை நீங்கள் பூர்த்தி செய்திருந்தால் உங்கள் சேவைக்கான பணம் நீங்கள் சமர்ப்பிக்கும் லென்ஸெஸ்களுக்காக உங்கள் பண வரவு கணக்கில் செலுத்தப்படும். லென்ஸஸ் நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கும் படைப்பாளர்களின் ஒரு சிறிய சதவீத நபர்களுக்கு மட்டுமே பணம் கிடைக்கப்பெறும்.

1. திட்டத்திற்கான தகுதி

திட்டத்தில் நீங்கள் சமர்ப்பித்த லென்ஸஸ் அனைத்தும் Lens Studio விதிமுறைகள் மற்றும் Lens Studio உரிம ஒப்பந்தம் ஆகியவற்றிற்கு இணங்க சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். திட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் லென்ஸஸ் Snap இன் மிதமான வழிமுறைகள் மற்றும் நடைமுறைகள் இணக்கமாக உள்ளதா என்று மதிப்பாய்வு செய்யப்படலாம், மேலும் இணங்காத லென்ஸஸ்கள் திட்டத்திற்கு தகுதி பெறாமல் போகலாம். தகுதியுள்ள லென்ஸஸ் Snap இன் தனியுரிம உள்ளடக்க விநியோக வழிமுறை மற்றும் நடைமுறைகளின் மூலம் விநியோகிக்கப்படும்.

திட்டத்திற்கு லென்ஸ்ஸை சமர்ப்பிக்கும் உருவாக்கியவர்களில் ஒரு சிறு சதவிகிதத்தினர்தான் பணம் பெறுதலைப் பெறுவார்கள். பணம் பெறும் திறன், குறைவான எண்ணிக்கையிலான நாடுகளில் மட்டுமே கிடைக்கும், அவை திட்டத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பட்டியலிடப்பட்டுள்ளன ("தகுதியுள்ள நாடுகள்").
எந்த நேரத்திலும், தகுதியுள்ள நாடுகளின் பட்டியலில் Snap நாடுகளைச் சேர்க்கலாம் அல்லது அகற்றலாம். கட்டணம் ஏதேனும் இருந்தால் Snap மூலம் நிதியளிக்கப்படும், (உங்களுக்கான எங்கள் பணம்செலுத்துதல் கீழே உள்ளவாறு மாற்றியமைக்கப்படலாம், "சேவை கட்டணம்" அல்லது "கட்டணம்").

பணம் பெறுவதற்கு தகுதி பெற, நீங்கள் (i) தகுதிவாய்ந்த லென்ஸ்களை சமர்ப்பிக்கவேண்டும், மற்றும் (ii) கீழ் மேலும் விவரிக்கப்பட்டுள்ளவாறு அனைத்து பேமெண்ட் கணக்குத் தகுதித் தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டும்.

தகுதிபெறும் லென்ஸஸ். தகுதி காலத்தின் போது நீங்கள் திட்டத்தில் சமர்ப்பித்த லென்ஸ் "தகுதி பெறும் லென்ஸ்" ஆக கருதப்பட: (i) Lens Studio இல் "பொது" எனக் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்; மற்றும் (ii) எங்கள் தனியுரிம சூத்திரத்திற்கு இணங்க கணக்கிடப்பட்ட அனைத்து மண்டலங்களிலும் அதிக செயல்திறன் கொண்ட லென்ஸாக இருக்க வேண்டும், மற்றும் இது அவ்வப்போது எங்களால் சரிபார்க்கப்படலாம் மற்றும் இது பல்வேறு காரணிகளின் அடிப்படையிலும் இருக்கும், இது கணக்கு செயல்திறன் மற்றும் பயனர் ஈடுபாட்டினையும் உள்ளடக்கும் (இணைந்து "தகுதி வரம்பு" எனப்படும்).  “தகுதி காலம்” என்பது லென்ஸஸ் சமர்ப்பித்ததைத் தொடரும் 90 காலண்டர் நாட்கள் ஆகும். 'எனது லென்ஸஸ்' என்பதில் உள்ள திட்டத்தில் அத்தகைய லென்ஸைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், தகுதிக் காலத்தின் போது எந்த நேரத்திலும் திட்டத்தில் லென்ஸைப் பதிவு செய்யலாம். “பிராந்தியங்கள்” மற்றும் தகுதி பெறும் லென்ஸஸ் பற்றிய கூடுதல் தகவல்கள் வடிவமைத்தவர் வழிகாட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன. எந்த நேரத்திலும், Snap பிராந்தியங்கள் பட்டியலில் இருந்து நாடுகளை சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்.

பணம் செலுத்துதல் கணக்கிற்கான தகுதி. நீங்கள் பணம் பெறுவதற்குத் தகுதியுடைவராக இருக்க, பணம் பெறுவதற்கான கணக்குத் தகுதித் தேவைகள் (கீழே வரையறுக்கப்பட்டுள்ள) அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

பொருந்தும் தகுதி காலத்தில், நீங்கள் தகுதிபெறும் லென்ஸ்களை சமர்ப்பித்து பணம் பெறுவதற்கான கணக்குத் தகுதித் தேவைகளை (கீழே வரையறுக்கப்பட்டுள்ள) பூர்த்தி செய்யப்பட்டு மற்றும் இந்த ஸ்பாட்லைட் விதிமுறைகளுக்கு இணங்க, உங்கள் தகுதிபெறும் லென்ஸ்கள் ("தகுதிபெறும் செயல்பாடு") தொடர்பாக உங்கள் சேவைகளுக்குப் பணம் பெறுவதற்குத் தகுதிபெறுவீர்கள்.

பணம் உங்கள் தனியுரிம பணம் பெறுவதற்கான சூத்திரத்தின் அடிப்படையில் ஒதுக்கப்படும், அது அவ்வப்போது எங்களால் சரிசெய்யப்படலாம். அது உங்கள் தகுதிபெறும் லென்ஸ்கள் திட்டத்தின் மற்ற லென்ஸ்களுடன் ஒப்பிட்டு பார்த்தும், உங்கள் புவி இருப்பிடம், அல்லது உங்கள் தகுதி பெற்ற லென்ஸை சமர்ப்பிக்கும் போது பல காரணிகளின் அடிப்படையில் இருக்கும்.

தகுதி வரம்பினை அடைகிறீர்களா என்பதும், நீங்கள் பெற தகுதியுள்ள தொகையும் எங்கள் மிதப்படுத்துதல் மற்றும்/அல்லது உள்ளடக்கப் பரிந்துரை வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளால் பாதிக்கப்படலாம், இவை பல காரணிகளைக் கருத்தில் கொண்டு உள்ளடக்கங்களை முன்னிலைப்படுத்துகின்றன, லென்ஸஸுக்குக் காரணமான தனிப்பட்ட தனித்துவமான பார்வைகள், இடுகைகள், பகிர்வுகள் மற்றும் பிடித்தவைகளின் மொத்த எண்ணிக்கை, உங்கள் லென்ஸஸைப் பார்க்கும், இடுகையிடும் அல்லது பகிரும் தினசரி பயனர்களின் எண்ணிக்கை, உங்கள் லென்ஸஸில் ஈடுபடும் பயனர்கள் செலவழிக்கும் மொத்த நேரம், உங்கள் புவியியல் இருப்பிடம் மற்றும் கணக்கு நிலை உட்பட, அல்லது உங்கள் லென்ஸஸ் தொடர்புடைய பிரபலமானவை மற்றும் தலைப்புகளுடன் தொடர்புடையதா என்பதை நாங்கள் அவ்வப்போது வெளியிடக்கூடிய Snapchat பயன்பாட்டில் அல்லது Snapchatல் பிரபலமடைபவை பக்கத்தில் உள்ள பிரபலமானவை பக்கத்தின் வழியாகவும், உங்கள் உள்ளடக்கம் மற்றும் கணக்கு இந்த விதிமுறைகளுக்கு (குறிப்பு மூலம் இணைக்கப்பட்ட அனைத்து வழிகாட்டுதல்களும் உட்பட).

"கிரிஸ்டல்களைப்" பயன்படுத்துவதன் மூலம் எங்கள் உள் அமைப்புகளில் தகுதிவாய்ந்த நடவடிக்கை கணக்கிடப்படும், இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உங்கள் தகுதிவாய்ந்த நடவடிக்கையைக் கண்காணிக்கவும் பதிவு செய்யவும் அளவிடும் ஒரு அலகு ஆகும்.

தகுதிவாய்ந்த நடவடிக்கைக்காக நாங்கள் பதிவு செய்யும் கிரிஸ்டல்களின் எண்ணிக்கை எங்கள் உள் அளவைகள் மற்றும் சூத்திரங்களைப் பொறுத்து மாறுபடலாம், அவை எங்கள் விருப்பப்படி அவ்வப்போது மாற்றப்படலாம்.
எனது தகவல் குறிப்புக்கு (“தகவல் குறிப்பு”) செல்வதன் மூலம் உங்கள் தகுதிவாய்ந்த நடவடிக்கைக்காக நாங்கள் பதிவு செய்திருக்கும் கிரிஸ்டல்களின் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையை நீங்கள் பார்க்கலாம். உங்கள் தகவல் குறிப்பின் மூலம் பார்க்கக்கூடிய இதுபோன்ற எண்ணிக்கைகள் எங்கள் உள் கணக்கீட்டு நோக்கங்களுக்காக கணக்கிடப்பட்ட ஆரம்ப மதிப்பீடுகள் என்பதை தயவுசெய்து கவனியுங்கள். கிரிஸ்டல்ஸ் என்பது தகுதிவாய்ந்த நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் மற்றும் உங்கள் உள்ளடக்கத்தின் செல்வாக்கை அளவிடவும் எங்களால் பயன்படுத்தப்படும் ஒரு உள் அளவீட்டு கருவியாகும். தெளிவுப்படுத்த, கிரிஸ்டல்ஸ் எந்த உரிமைகளையும் வழங்கவோ அல்லது எந்த கடமைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தவோ உரியதல்ல, சொத்தை உருவாக்கவோ, மாற்றவோ அல்லது ஒதுக்கவோ முடியாது, வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ, கைமாற்றவோ அல்லது பரிமாற்றத்திற்கோ உட்படுத்தக் கூடாது.

பணம் செலுத்துதல் தொகை, அந்த படைப்பாளரின் தகுதிவாய்ந்த செயல்பாட்டிற்காக குறிப்பிட்ட காலத்தில், எங்கள் தனியுரிமக் பணம் செலுத்துதல் சூத்திரத்தின் இணக்க அடிப்படையில் மட்டுமே நாங்கள் பதிவு செய்த கிரிஸ்டல்களின் இறுதி எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும், இது அவ்வப்போது எங்களால் சரிசெய்யப்படலாம்.

நடவடிக்கை தகுதிவாய்ந்த நடவடிக்கையா என்பதைத் தீர்மானிப்பதில், "செல்லாத நடவடிக்கை" என்றழைக்கப்படுவதை நாங்கள் தவிர்க்கலாம், அதாவது உங்கள் லென்ஸ்கள் அல்லது கணக்கின் பார்வைகள், அல்லது பிற செயல்திறன், பார்வையாளர்கள் அல்லது ஈடுபாடு அளவுகோலை செயற்கையாக அதிகாரிக்கும் நடவடிக்கைகள். Snap -ஆல் அதன் சொந்த விருப்பப்படி தவறான நடவடிக்கை தீர்மானிக்கப்படும், மேலும், அவை பின்வருவனவற்றை மட்டுமல்லாமல் மற்றவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கும்:
(i) உங்கள் சாதனம் அல்லது உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மொபைல் சாதனங்கள், அல்லது புதிய அல்லது சந்தேகத்திற்கிடமான கணக்குகளை கொண்ட மொபைல் சாதனங்கள், அல்லது மொபைல் சாதனங்களில் இருந்து வரும் கிளிக்குகள் அல்லது பதிவுகள் அல்லது பதிவுகளை உள்ளிட்ட எந்தவொரு நபர் அல்லது பாட், நிகழ்வு அல்லது சாதனம் மூலம் உருவாக்கப்பட்ட ஸ்பேம், தவறான ஈடுபாடு அல்லது தவறான காட்சி பார்வைகள் அல்லது பிடித்தவை போன்றவை; (ii) மூன்றாம் தரப்பினருக்கு பணம் அல்லது பிற தூண்டுதல்கள், தவறான பிரதிநிதித்துவம் அல்லது பரஸ்பர Snaps பார்வைகள் பரிவர்த்தனை ஆகியவற்றால் உருவாக்கப்பட்டப் தவறான ஈடுபாடு, காட்சி பார்வைகள், பிடித்தவை; (iii) சேவையை நிர்வகிக்கும் விதிமுறைகளை மீறும் வகையில் செயல்பட்டு உருவாக்கப்படும் தவறான ஈடுபாடு, காட்சி பார்வைகள், பிடித்தவை, மற்றும் (iv) மேலே (i), (ii), (iii) மற்றும் (iv) இல் விவரிக்கப்பட்டுள்ள எந்தவொரு செயலுடனும் இணைந்த ஈடுபாடு, கிளிக்குகள் அல்லது காட்சி பார்வைகள், பிடித்தவை. நீங்கள் செல்லாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளீர்கள் என்று நாங்கள் தீர்மானித்தால், திட்டத்தில் உங்கள் லென்ஸ்களின் விநியோகத்தை நாங்கள் கட்டுப்படுத்தலாம் அல்லது இடைநிறுத்தலாம் மற்றும் நீங்கள் பணம் பெறுவதற்கு தகுதியற்றவராக கருத்தப்படலாம்.

2. பணம்செலுத்துதல் கணக்கிற்கான தகுதி

Snap-இலிருந்து பணம் பெறுவதற்குத் தகுதிபெற நீங்கள் பின்வரும் தேவைகள் அனைத்தையும் கூட ("பணம்பெறுவதற்கான கணக்குத் தகுதித் தேவைகள்") பூர்த்தி செய்திருக்கவேண்டும்:

நீங்கள் ஒரு தனிநபராக இருந்தால், நீங்கள் தகுதிபெறும் நாட்டின் சட்டபூர்வ குடிமகனாக இருக்கவேண்டும் மற்றும் அத்தைகைய தகுதிபெறும் நாட்டில் நீங்கள் இருந்தபோது தகுதிபெறும் Snapகளைச் சமர்ப்பித்திருக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் அதிகார எல்லையில் சட்டப்பூர்வ பெரும்பான்மை வயதை எட்டியிருக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் 18 வயதாக இருக்க வேண்டும், மேலும், எங்கள் நடைமுறைகளுக்கு இணங்க, தேவையான பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலர் ஒப்புதலை(களை) பெற்றிருக்க வேண்டும்.

உங்கள் சட்டபூர்வ முதல் மற்றும் கடைசி பெயர்கள், மின்னஞ்சல், தொலைபேசி எண், குடியிருக்கும் மாநிலம் மற்றும் நாடு மற்றும் பிறந்த தேதி ("தொடர்புத் தகவல்") ஆகியவை உள்ளிட்ட முழுமையான மற்றும் துல்லியமான தொடர்புத் தகவல்களை நீங்கள் எங்களுக்கு வழங்க வேண்டும்.

நீங்கள் (அல்லது உங்கள் பெற்றோர்/சட்டப்பூர்வ பாதுகாவலர்(கள்) அல்லது தொழில் நிறுவனம், எது பொருந்துமோ) Snap-இன் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் நபர் பணம் வழங்குனருடன் பணம் பெறுவதற்கான கணக்கிற்குத் தேவைப்படும் அனைத்துத் தேவைகளையும் உருவாக்கி முடித்திருக்க வேண்டும். பணம் பெறுவதற்கான உங்கள் கணக்கு உங்கள் தகுதிபெறும் நாட்டுடன் பொருந்தியிருக்க வேண்டும்.

இந்த விதிமுறைகளின் கீழ் பணம் வழங்குவதற்கான நிபந்தனையாக, உங்களால் வழங்கப்பட்ட தொடர்புத் தகவல்கள் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளது) மற்றும் சிறார்களின் பெற்றோர் / சட்டப்பூர்வப் பாதுகாவலரின் அடையாளத்தையும் ஒப்புதலையும் சரிபார்க்க வேண்டும் என்ற உரிமையை, எங்கள், எங்கள் துணை அமைப்புகள், மற்றும் எங்கள் மூன்றாம் தரப்பு பணம் செலுத்துதல் வழங்குநர் சார்பாக, நாங்கள் கொண்டுள்ளோம்.

நீங்கள் எங்களின் மற்றும் எங்களின் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் நபர் பணம் வழங்குனரின் நடைமுறைகளின் படி உங்கள் பணத்தை உங்கள் தொழில் நிறுவனத்திற்கு மாற்ற எங்களை அங்கீகரித்திருந்தால், அத்தகைய நிறுவனம் பதிவுசெய்யப்பட்டு, தலைமை அலுவலகத்தைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது உங்களது தகுதிபெறும் நாட்டிற்குள் ஒரு அலுவலகத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

நீங்கள் Snapக்கும் அதன் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் நபர் பணம் செலுத்தல் வழங்குநர்களும் துல்லியமான தொடர்பு மற்றும் பிற தகவல்களை தேவைக்கேற்ப வழங்குகிறீர்கள், எனவே நீங்கள் தகுதி பெறும்போது Snap அல்லது மூன்றாம் நபர் பணம் செலுத்தல் வழங்குநர்கள் உங்களைத் தொடர்பு கொள்ளலாம் உங்களுக்கு (அல்லது உங்கள் பெற்றோர்/காப்பாளர்(கள்) அல்லது தொழில் நிறுவனத்திற்கு, பொருந்துமாறு) பணம் செலுத்தலாம்.

உங்கள் Snapchat கணக்கு மற்றும் பணம்செலுத்துதல் கணக்கு செயலில் உள்ளன, நல்ல மதிப்பீட்டில் (எங்களாலும் எங்கள் மூன்றாம் தரப்பு பணம் வழங்குநராலும் தீர்மானிக்கப்படுகிறது), மற்றும் இந்த விதிமுறைகளுக்கு இணக்கமாக உள்ளது.

எங்கள், அல்லது எங்கள் மூன்றாம் நபர் பணம் செலுத்துதல் வழங்குநரின் இணக்க மதிப்பாய்வில் நீங்கள் (அல்லது உங்கள் பெற்றோர்/சட்டப்பூர்வ பாதுகாவலர்(கள்) அல்லது தொழில் நிறுவனம், பொருந்துமாறு) தேர்ச்சியடையவில்லை என்றால், நீங்கள் எந்தவொரு பணம் செலுத்துதலைப் பெறுவதற்கும் தகுதி பெற மாட்டீர்கள், நாங்கள் உங்களுக்கு வழங்க வேண்டியும் இருக்காது. இத்தகைய மதிப்பாய்வுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்பட்டு, அமெரிக்க பிரத்தியேகமாக நியமிக்கப்பட்ட தேசியப் பட்டியல் மற்றும் வெளிநாட்டு ஒப்பளிப்பு ஏய்ப்பவர்கள் பட்டியல் உள்ளிட்ட எந்தவொரு சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரத்தால் பராமரிக்கப்படும் எந்தவொரு தடைசெய்யப்பட்ட தரப்புகளின் பட்டியலிலும் நீங்கள் இருக்கிறீர்களா என்பதைத் தீர்மானிப்பதற்கான ஒரு ஆய்வும் அடங்கும், ஆனால் அவை மட்டுமே அல்ல. இந்த விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ள வேறு எந்த பயன்பாடுகளுக்கும் மேலாக, நீங்கள் எங்களுக்கு வழங்கிய தகவல்கள், உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், இணக்க மதிப்பாய்வுகளை நடத்தவும், பணம் வழங்கும் செயல்முறையை முடிக்கவும் மூன்றாம் தரப்பினருடன் பகிரப்படலாம்.

நீங்கள் (i) Snap அல்லது அதன் தாய் நிறுவனம், துணை அமைப்புகள் அல்லது இணை அமைப்புகளில் பணியாளர், அதிகாரி அல்லது இயக்குனர் (ii) நீங்கள் ஒரு அரசாங்க நிறுவனம், அரசாங்க நிறுவனத்தின் துணை நிறுவனம் அல்லது இணை நிறுவனம் அல்லது அரச குடும்பத்தின் உறுப்பினராக இருந்தால் அல்லது (iii) ஒரு தொழில் கணக்கிலிருந்து லென்ஸஸ்களை திட்டத்திற்கு சமர்ப்பித்தால், நீங்கள் பணம் பெறுவதற்குத் தகுதி பெற மாட்டீர்கள்.

குறிப்பாக லென்ஸஸ்களை உருவாக்க அல்லது வழங்க இந்த விதிமுறைகளுக்கு வெளியே Snap-ஆல் அல்லது அதன் சார்பாக நீங்கள் ஈடுபட்டிருந்தால், அந்த ஈடுபாடு காலத்தில் நீங்கள் உருவாக்கிய லென்ஸஸ்களுக்கு பணம் பெறுவதற்கு நீங்கள் தகுதிபெறாமல் போகலாம்.

 பணம் செலுத்தப்படும் முன் ஒரு லென்ஸசை நீங்கள் நீக்கினால், எந்த திரட்டப்பட்ட ஈடுபாட்டிற்கும் பணம் பெறுவதற்கு நீங்கள் அதற்கு மேலும் தகுதி பெறமாட்டீர்கள்.

3. பணம் பெறுதல் அறிவிப்பு மற்றும் செயல்முறை

நீங்கள் தகுதிபெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளீர்கள் என்பதை நாங்கள் தீர்மானித்தால், Snapchat செயலி மூலம் உங்களுக்கு அறிவிப்பு அனுப்புவதன் மூலம் உங்கள் தகுதிகளைப் பற்றி நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம்.

இந்த விதிமுறைகளுடன் உங்கள் இணக்கத்திற்கு உட்பட்டு, சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு, நீங்கள் (அல்லது உங்கள் பெற்றோர்/சட்டக் காப்பாளர்(கள்) அல்லது தொழில் நிறுவனம், பொருந்தக்கூடியவை) உங்கள் தகவல் குறிப்பில் பொருத்தமான விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து பணம் செலுத்தக் கோரலாம். நீங்கள் சரியான முறையில் பணம் செலுத்த கோர வேண்டுமானால், குறைந்தபட்சம் 100 டாலர் ("பணம் செலுத்தும் வரம்பு") குறைந்தபட்ச கட்டண வரம்பை அடைவதற்கு குறைந்தபட்சம் போதுமான கிரிஸ்டல்ஸ்களையாவது நாங்கள் முதலில் பதிவு செய்து உங்களுக்குக் கூறியிருக்க வேண்டும்.

கவனிக்கவும்: ஒருவேளை (A) ஒரு வருடக் காலத்திற்கு உங்களிடமிருந்து எந்தவொரு தகுதிவாய்ந்த SNAP-க்கும் நாங்கள் எந்தக் கிரிஸ்டல்களையும் பதிவு செய்து கூறவில்லை என்றாலோ, அல்லது (B) இரண்டு வருடக் காலத்திற்கு உடனடியாக முந்தைய பத்திக்கு ஏற்ப நீங்கள் சரியான முறையில் பணம் கோரவில்லை என்றாலோ,
பின்னர் - பொருந்தக்கூடிய காலக்கட்டத்தின் முடிவில் - பின்வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அத்தகைய காலத்தின் முடிவில் நாங்கள் பதிவுசெய்து உங்கள் தகுதிவாய்ந்த நடவடிக்கைக்கு எனக் கூறியிருந்த கிரிஸ்டல்களின் அடிப்படையில் உங்கள் பணம் செலுத்தும் கணக்கிற்கு நாங்கள் பணம் செலுத்துவோம்:
(I) பணம் செலுத்தல் வரம்பை நீங்கள் எட்டிவிட்டீர்கள், (II) நீங்கள் ஒரு பணம் செலுத்தும் கணக்கை உருவாக்கியுள்ளீர்கள், (III) தேவையான அனைத்துத் தொடர்புத் தகவல்களையும், உங்களுக்குப் பணம் செலுத்துவதற்குத் தேவையான வேறு தகவல்களையும் வழங்கியுள்ளீர்கள், (IV) அத்தகைய தகுதிவாய்ந்த நடவடிக்கைக்கு நாங்கள் பதிவுசெய்து கூறியிருந்த கிரிஸ்டல்கள் தொடர்பாக நாங்கள் உங்களுக்கு இன்னும் பணம் செலுத்தவில்லை, (V) உங்கள் SNAPCHAT கணக்கு மற்றும் பணம் செலுத்தும் கணக்கு நல்ல நிலையில் உள்ளது என்றும், (VI) இல்லையெனில் நீங்கள் இந்தப் படைப்பாளர் விதிமுறைகள் மற்றும் எங்கள் மூன்றாம் நபர் பணம் வழங்குநரின் நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குகிறீர்கள்.
இருப்பினும், பொருந்தக்கூடிய காலக்கட்டத்தின் முடிவில், மேற்கூறிய அனைத்துத் தேவைகளையும் நீங்கள் பூர்த்தி செய்யவில்லை என்றால், அத்தகைய தகுதிவாய்ந்த SNAP(கள்) தொடர்பான எந்தவொரு பணத்தையும் நீங்கள் இனிப் பெற முடியாது.

பணம்செலுத்துதல்களை Snap சார்பாக, இந்த விதிமுறைகளின்கீழ் பணம் வழங்குபவராகச் செயல்படக்கூடிய கிளை அல்லது துணை அமைப்பு நிறுவனங்கள் அல்லது பிற அங்கீகாரம் பெற்ற மூன்றாம் நபர் பணம் வழங்குநர்கள் உங்களுக்கு வழங்கலாம், Snap-இன் கட்டுப்பாட்டில் இல்லாத எந்தவொரு காரணத்துக்காகவும் உங்கள் பணம் வழங்கல் கணக்குக்குச் சேவைப் பணம் வழங்கல்களைப் பரிமாற்றம் செய்வதில் எந்தத் தாமதமோ, தோல்வியோ, சாத்தியமின்மையோ ஏற்பட்டால், அதற்கு Snap பொறுப்பேற்காது, இதில், இந்த விதிமுறைகள் அல்லது பொருந்தும் பணம் வழங்கல் கணக்கின் விதிமுறைகளுக்கு நீங்கள் இணங்காமலிருப்பதும் உள்ளடங்கும். Snap-ன் கட்டுப்பாட்டில் இல்லாத காரணத்தினாலும், உங்களைத்(அல்லது உங்கள் பெற்றோர்/சட்டப் பாதுகாவலர்(கள்) அல்லது தொழில் நிறுவனம், பொருந்துமாறு) தவிர வேறு யாராவது உங்கள் Snapchat கணக்கைப் பயன்படுத்தி உங்கள் தகுதிவாய்ந்த செயல்பாடுகளுக்கு நாங்கள் பதிவுசெய்த மற்றும் கூறப்பட்ட எந்த கிரிஸ்டல்களின் அடிப்படையிலும் அல்லது கணக்குத் தகவலைப் பயன்படுத்தி பணம் செலுத்தக் கோரப்பட்டால் Snap பொறுப்பாகாது. எங்கள் மற்றும் எங்களின் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் நபர் பணம்செலுத்துதல் வழங்குநரின் நடைமுறைகளுக்கு ஏற்ப ஒரு தொழில் நிறுவனத்திற்கு பணத்தைப் பரிமாற்றம் செய்ய நீங்கள் Snap ஐ அங்கீகரித்தால், இந்த விதிமுறைகளின் கீழ் உங்களுக்குச் செலுத்த வேண்டிய எந்தவொரு அல்லது எல்லாத் தொகைகளையும், இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்தத் தொழில் நிறுவனத்திற்கு Snap பரிமாற்றம் செய்யலாம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டு ஒப்புக் கொள்கிறீர்கள். பணம் வழங்கலானது அமெரிக்க டாலர்களில் நிகழ்த்தப்படும், ஆனால், நீங்கள் உங்களுடைய உள்ளூர் நாணயத்தில் உங்கள் பணம் வழங்கல் கணக்கிலிருந்து நிதியை எடுக்கத் தேர்ந்தெடுக்கலாம், இதற்கு, திட்டத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில், மற்றும் எங்கள் மூன்றாம் நபர் பணம் வழங்குநரின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, மேலும் விவரிக்கப்பட்டுள்ளபடி, பயன்பாட்டு, பண மாற்ற மற்றும் பரிமாற்றக் கட்டணங்கள் பொருந்தும். Snapchat செயலியில் காட்டப்பட்ட எந்தவொரு பணம்செலுத்துதல் தொகைகளும் தோராயமான மதிப்புகளே மேலும் மாற்றத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு பணம்செலுத்துதலின் இறுதித் தொகைகள் உங்கள் பணம்செலுத்துதல் கணக்கில் பிரதிபலிக்கும்.

எங்கள் பிற உரிமைகள் மற்றும் தீர்வுகளுக்கு மேலதிகமாக, சந்தேகத்திற்குரிய தவறான செயல்பாட்டிற்காக, இந்தப் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதற்காக, தவறுதலாக உங்களுக்குக் கூடுதல் பணம் செலுத்தப்பட்டால், எச்சரிக்கை அல்லது முன்னறிவிப்பு இன்றி, சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு, இந்தப் விதிமுறைகளின் கீழ் உங்களுக்கான எந்தவொரு பணம் செலுத்துதல்களையும் நாங்கள் நிறுத்தி வைக்கலாம், ஈடு செய்யலாம், சரிசெய்யலாம், விலக்கி வைக்கலாம் அல்லது வேறு எந்த ஒப்பந்தத்தின் கீழும் நீங்கள் எங்களுக்குச் செலுத்த வேண்டிய எந்தவொரு கட்டணத்திற்குப் பதிலாகவும் அந்தத் தொகையை ஈடு செய்யலாம்.

எங்களுக்கு அல்லது எங்கள் துணை அமைப்புகள், தொடர்புடைய நிறுவனங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பணம் வழங்குநருக்கு நீங்கள் வழங்கும் அனைத்துத் தகவல்களும் உண்மை மற்றும் துல்லியமானவை என்பதையும், அத்தகைய தகவல்களின் துல்லியத்தை எல்லா நேரங்களிலும் பராமரிப்பீர்கள் என்பதையும் நீங்கள் முன்வைக்கிறீர்கள்.

4. வரிகள்

சேவைக்காக நீங்கள் பெறும் எந்தவொரு பணம்செலுத்துதல்களுக்கும் அதனுடன் தொடர்புள்ள எந்தவொரு அல்லது அனைத்து வரிகள், சுங்கத் தீர்வுகள் அல்லது கட்டணங்களுக்கும் உங்களுக்கு முழுப் பொறுப்பு மற்றும் கடப்பாடு உள்ளது என்பதை நீங்கள் உடன்பட்டு ஒப்புக்கொள்கிறீர்கள். உங்களுக்கு வழங்க வேண்டிய பணம்செலுத்துதல்கள், எந்தவொரு பொருந்தக்கூடிய விற்பனை, பயன்பாட்டு, கலால், மதிப்புக் கூட்டப்பட்ட, பொருட்கள் மற்றும் சேவைகள் அல்லது இவை போன்ற வரிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ், உங்களுக்கு வழங்க வேண்டிய ஏதாவது தொகையிலிருந்து வரிகள் கழிக்கப்பட அல்லது நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்றால், Snap, அல்லது அதன் துணை அமைப்பு, அல்லது அதன் அங்கீகரிக்கப்பட்ட பணம் செலுத்துகை வழங்குநர், உங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையிலிருந்து அத்தகைய வரிகளைக் கழித்து, பொருந்தக்கூடிய சட்டத்தின் படி உரிய வரிவிதிப்பு அதிகாரிகளிடம் செலுத்தலாம். அத்தகைய விலக்குகள் அல்லது நிறுத்துதல்களால் குறைக்கப்பட்டு வழங்கப்படும் பணம், இந்த விதிமுறைகளின் கீழ் உங்களுக்கு வழங்க வேண்டிய மொத்தப் பணம் மற்றும் தீர்வுத் தொகையாக சேர்ந்து அமையும். இந்த விதிமுறைகளின் படி, நீங்கள் Snap, அதன் துணை அமைப்புகள், தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட பணம் வழங்குநருக்கும், புகார் அளிக்கவும் வரி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கும், எந்தவொரு தகவலையும் நிறைவு செய்யத் தேவையான படிவங்கள், ஆவணங்கள் மற்றும் பிற சான்றிதழ்களையும் தருவீர்கள்

5. உங்கள் பிரதிநிதித்துவங்கள் மற்றும் உத்தரவாதங்கள்

நீங்கள் இவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள் மற்றும் உத்தரவாதமளிக்கிறீர்கள்: (i) நீங்கள் (ஒரு தனி நபராக இருந்தால்) உங்களுடைய சட்டப்பூர்வமான வசிப்பிடத்தில் சட்டப்பூர்வமான வயதுவந்த வயதை எட்டிவிட்டீர்கள், மற்றும் எல்லா விதங்களிலும் உங்களுடைய சொந்தச் சார்பாக மற்றும் நீங்கள் எந்தவொரு நிறுவனத்திற்காகவும் இயங்கினால், அதன் சார்பாக இந்த விதிமுறைகளுக்குள் நுழையும் முழு உரிமை, ஆற்றல் மற்றும் அதிகாரத்தைக் கொண்டுள்ளீர்கள், அல்லது இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கு, நீங்கள் வசிக்கும் நாட்டில் தேவைப்படுகிறபடி பெற்றோர்/சட்டப்பூர்வமான வழிகாட்டியின் ஒப்புதலைப் பெற்றுள்ளீர்கள்; (ii) தேவையான அனைத்து மூன்றாம் நபர் உரிமைகளையும், உங்கள் லென்ஸஸில் எந்தவொரு தனிநபரும் தோன்றுவதற்குப் புகழ் பெறச் செய்தல் உரிமைகள், தனியுரிமை மற்றும் பெயர், ஒரேமாதிரி தோன்றுதல் மற்றும் குரல் தொடர்பான வேறு பிற உரிமைகள்) நீங்கள் பெற்றுவிட்டீர்கள், உங்கள் லென்ஸஸில் பதினெட்டு (18) அல்லது வேறு பிற பொருந்தும் வயதுவந்தோர் வயதுக்குக் கீழே உள்ள தனிநபர்கள் யாரேனும் தோன்றினால், அவர்கள் அவ்வாறு தோன்றுவதற்குத் தேவையான அனைத்துப் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வமான வழிகாட்டியுடைய(வழிகாட்டிகளுடைய) ஒப்புதலையும் நீங்கள் பெற்றுவிட்டீர்கள்; (iii) எங்கள் சேவை நிபந்தனைகள், சமூக வழிகாட்டுதல்கள், Lens Studio விதிமுறைகள், Lens Studio உரிம ஒப்பந்தம், Snapchat பிராண்ட் வழிகாட்டுதல்கள், Snapcode பயன்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் Lens Studio சமர்ப்பிப்பு வழிகாட்டுதல்கள் உட்பட இந்த விதிமுறைகள் அனைத்தையும் நீங்கள் படித்து, புரிந்துகொண்டு, இணங்க ஒப்புக்கொண்டுள்ளீர்கள்; (iv) திட்டத்தில் நீங்கள் சமர்ப்பிக்கும் லென்ஸஸ் முழுவதுமாக உங்களால் உருவாக்கப்பட்டவை, எந்த மூன்றாம் நபர் உரிமையையும் மீறுவதில்லை, உடைப்பதில்லை அல்லது தவறாகப் பயன்படுத்துவதில்லை, இதில் பின்வருவனவும் மற்றும் பிறவும் அடங்கும், காப்புரிமை (சிறப்பாக்குதல், ஒத்திசையச் செய்தல் மற்றும் பொதுவில் நிகழ்த்துதலுக்கான இசைக் காப்புரிமை உரிமைகள் உள்பட), வணிகக் குறியீடு, புகழ் பெறச் செய்தல், தனியுரிமை, அல்லது வேறு பிற பொருந்தும் உரிமை மற்றும் பொருந்தும் சட்டத்துக்கு இணங்குகின்றன;(v) உங்கள் லென்ஸஸ் தொடர்பாக மூன்றாம் நபர்களுக்கு எந்தவொரு தேவையான பணம்செலுத்துதல்களையும் நீங்கள் செய்வீர்கள், மேலும், உங்கள் உள்ளடக்கத்தை வழங்குதலின் விளைவாக எந்த மூன்றாம் நபருக்கும் Snap எந்தக் கடப்பாடையும் பெறும்படி செய்யமாட்டீர்கள்; மேலும் மற்றும் (vi) நீங்கள் அமெரிக்காவை தவிர வேறு ஒரு நாட்டின் சட்டப்பூர்வ குடியிருப்பாளராக இருந்தால், நீங்கள் லென்ஸஸ் உருவாக்கி திட்டத்திற்கு சமர்ப்பிப்பதற்கான சேவைகளை அமெரிக்காவில் இல்லாமல் வேறொரு நாட்டிலிருந்து மேற்கொள்வீர்கள் எனில் மட்டும்.

6. இரகசியத்தன்மை

Snap வழங்கக்கூடிய எந்தவொரு பொதுவல்லாத தகவலும் ரகசியமானது என்றும், Snap-இன் வெளிப்படையான, முன்பே எழுதப்பட்ட ஒப்புதல் இல்லாமல் அதை எந்த மூன்றாம் நபருக்கும் வெளிப்படுத்தமாட்டீர்கள் என்றும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

7. தனியுரிமை

உங்கள் தனியுரிமை எங்களுக்கு மிகவும் முக்கியமானது. எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் படிப்பதன் மூலம் நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது உங்கள் தகவல் எப்படிக் கையாளப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

8. முடித்தல்; இடைநீக்கம்

எங்களிடம் இருக்கும் பிற உரிமைகள் அல்லது தீர்வுகளுடன் கூடுதலாக, திட்டம், சேவைகள் அல்லது மேற்கூறியவற்றில் உங்கள் அணுகல் ஆகியவற்றின் ஒரு பகுதியாக உங்கள் லென்ஸஸ்கள் விநியோகத்தை இடைநிறுத்த அல்லது நிறுத்துவதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது. இந்த விதிமுறைகளுக்கு நீங்கள் இணங்காவிட்டால், திரட்டப்பட்ட, ஆனால் உங்கள் பணம்செலுத்துதல் கணக்குக்கு இன்னும் அனுப்பப்படாத செலுத்தப்படாத தொகைகள் அனைத்தும் பெற முடியாத வகையில் தகுதி நீக்கம் செய்யப்படலாம். ஏதேனும் ஒரு தருணத்தில் இந்த விதிமுறைகளின் ஏதேனும் ஒரு பகுதியை நீங்கள் ஏற்கவில்லை என்றால், திட்டம் அல்லது சேவையினை பயன்படுத்துவதை நீங்கள் நிறுத்தி விட வேண்டும்.

பொருந்தும் சட்டங்களால் அதிகபட்சமாக அனுமதிக்கப்படும் அளவுக்கு எங்கள் சொந்த விருப்பப்படி, முன்னறிவிப்பு இல்லாமல் அல்லது உங்களுக்குக் கடமைப்படாமல், எந்தவொரு காரணத்திற்காகவும், திட்டம் அல்லது ஏதாவது சேவைகளை எந்த நேரத்திலும் நிறுத்த, மாற்றியமைக்க, வழங்காமல் இருக்க, அல்லது வழங்குவதை அல்லது ஆதரிப்பதை நிறுத்த எங்களுக்கு உரிமை உள்ளது. திட்டம் அல்லது ஏதேனும் சேவைகள் எல்லா நேரங்களிலும் அல்லது எந்த நேரத்திலும் கிடைக்கும் என்பதற்கும் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு மேற்கூறியவற்றை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம் என்பதற்கும் நாங்கள் உத்தரவாதம் அளிக்க மாட்டோம், எந்தக் காரணத்திற்காகவும் திட்டம் அல்லது ஏதாவது சேவையின் தொடர்ச்சியான கிடைக்கும் தன்மையை நீங்கள் சார்ந்திருக்கக் கூடாது.

9. முகமை உறவு கிடையாது

இந்த விதிமுறைகளில் உள்ள எதையும், உங்களுக்கும் Snap-க்கும் இடையில் ஓர் இணை முயற்சி, முதன்மையாளர்-முகவர் அல்லது பணி உறவைக் குறிப்பதாகப் புரிந்துகொள்ளக்கூடாது.

10. அறிவிப்பு

மேலே குறிப்பிட்டுள்ளபடி, நீங்கள் பணம் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளீர்கள் என்று Snap தீர்மானித்தால், Snap அல்லது எங்கள் மூன்றாம் தரப்பு பணம் வழங்குநர் Snapchat செயலி, மின்னஞ்சல் உள்ளிட்ட உங்கள் பயனர் தகவல் பக்கத்தில் நீங்கள் தகவல் தொடர்பு தகவல்கள் வழியாக தெரிவிப்பார்கள். பணம்செலுத்துதல்களைப் பெறத் தகுதி பெறாத உங்கள் லென்ஸஸ் தொடர்பாக மற்றும் பிற காரணங்களுக்காகவும் Snap உங்களைத் தொடர்புகொள்ளலாம். உங்கள் Snapchat அறிவிப்புகளை அடிக்கடி பாருங்கள், உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைப் புதுப்பித்ததாக வையுங்கள், மேலும் உங்கள் மின்னஞ்சலைச் சரிபாருங்கள்.

11. நடுவர் தீர்ப்பு வழங்கல் மற்றும் ஆளும் சட்டம்

நினைவிற்கொள்க, இந்த விதிமுறைகள் (நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் அல்லது, ஒரு தொழிலின் சார்பாக சேவைகளைப் பயன்படுத்துகிறீர்களா, அதன் முதன்மைத் தொழில் இடம் எங்குள்ளது ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுக்குப் பொருந்தக்கூடிய) Snap Inc. சேவை நிபந்தனைகள் அல்லது Snap Group Limited சேவை நிபந்தனைகளை ள்ளடக்கியதாகும். Snap Inc. சேவை நிபந்தனைகள் அல்லது Snap Group Limited சேவை நிபந்தனைகள் (பொருந்துவது எதுவோ அது) அனைத்தும் உங்களுக்குப் பொருந்தும் என்றாலும், இதனைக் குறிப்பாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம், இந்த விதிமுறைகள் Snap Inc.சேவை விதிமுறைகளின் நடுவர் தீர்ப்பு வழங்கல், பிரதிநிதித்துவ நடவடிக்கை விலக்கு, நடுவர் உரிமை விலக்கு விதி, சட்டத்தின் தேர்வு விதி, பிரத்தியேக இட விதி ஆகியவற்றால் முறைப்படுத்தப்படுகின்றன சேவை விதிமுறைகள்(நீங்கள் அமெரிக்காவில் வசித்தாலோ அமெரிக்காவில் தொழிலின் முதன்மை இடம் உள்ள தொழிலின் சார்பாக செயல்படுகிறீர்கள் என்றாலோ) அல்லது Snap Group Limited சேவை நிபந்தனைகளின் சர்ச்சை தீர்வு, நடுவர் தீர்ப்பு வழங்கல் விதி சட்டத்தின் தேர்வுவிதி, பிரத்தியேக இட, விதி ஆகியவற்றால் முறைப்படுத்தப்படுகின்றன (நீங்கள் அமெரிக்காவிற்கு வெளியே வசித்தாலோ அமெரிக்காவிற்கு வெளியே தொழிலின் முதன்மை இடம் உள்ள தொழிலின் சார்பாக செயல்படுகிறீர்கள் என்றாலோ).

நடுவர் அறிவிப்பு: SNAP INC. இல் குறிப்பிடப்பட்டுள்ள சில வகையான சர்ச்சைகளைத் தவிர்த்து. நீங்களும் SNAP உம் உங்களுக்கு இடையே எழும் சட்டரீதியான கோரல்கள் சர்ச்சைகள் உள்ளிட கோரல்கள் சர்ச்சைகள் SNAP INC. சேவை நிபந்தனைகளின் கட்டாயமாக பிணைக்கும் நடுவர் தீர்ப்பு வழங்கல் விதியின்படி தீர்க்கப்படும் என்பதை ஏற்கிறீர்கள், சேவை விதிமுறைகள் நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவராக இருந்தால் அல்லது அமெரிக்காவில் உள்ள வணிகத்தின் முதன்மையான இடத்தில் உள்ள ஒரு வணிகத்தின் சார்பாக சேவைகளைப் பயன்படுத்தினால், பிரதிநிதித்துவ நடவடிக்கை வழக்கு அல்லது பிரதிநிதித்துவ நடுவர் தீர்ப்பில் பங்கேற்கும் உரிமையைக் கைவிடுகிறீர்கள். நீங்கள் அமெரிக்காவிற்கு வெளியே தொழிலின் முதன்மை இடம் உள்ள தொழிலின் சார்பாக சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், நீங்களும் SNAP GROUP LIMITED உம் உங்களுக்கு இடையேயான சர்ச்சைகள் SNAP GROUP LIMITED சேவை நிபந்தனைகளில் உள்ள பிணைக்கும் தீர்ப்பாய பிரிவில் உள்ள விதிகளின் படி தீர்க்கப்படும் என்பதை ஏற்கிறீர்கள்.

12. மற்றவை

அவ்வப்போது, இந்த விதிமுறைகளை நாங்கள் மாற்றியமைக்கலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள "நடைமுறைப்படுத்தப்படும்" தேதியைப் பார்ப்பதன் மூலம் இந்த விதிமுறைகள் கடைசியாக எப்போது திருத்தப்பட்டது என்பதை உங்களால் தீர்மானிக்க முடியும். இந்த விதிமுறைகளின் எந்தவொரு மாற்றங்களும் மேலே உள்ள "செயல்படுத்தும்" தேதியில் செயல்பாட்டுக்கு வரும் மேலும் அந்த நேரத்திற்குப் பிறகான சேவைகளின் உங்கள் பயன்பாட்டிற்கு அவை பொருந்தும். நீங்கள் இதுபோன்ற விதிமுறைகளின் மிகச் சமீபத்திய பதிப்பை அறிந்து வைத்திருப்பதை உறுதி செய்வதற்காக நீங்கள் இந்த விதிமுறைகளை, ஏதேனும் புதுப்பிப்புகள் உட்பட, மீளாய்வு செய்வதற்கு ஒப்புக்கொள்கிறீர்கள். புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளைப் பொதுவில் பதிவிட்ட பிறகு சேவையைப் பயன்படுத்துவதன் மூலம், புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக் கொள்வதாகக் கருதப்படும். நீங்கள் இந்த மாற்றங்களை ஏற்கவில்லை எனில், நீங்கள் சேவையைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இந்த விதிமுறைகளின் ஏதேனும் ஓர் விதியானது செயல்படுத்த முடியாததாகக் கண்டறியப்பட்டால், அந்த விதி துண்டிக்கப்படும் மேலும் மீதமுள்ள எந்தவொரு விதிகளின் செல்லுபடிதன்மையையும் செயல்படுத்தும்தன்மையையும் பாதிக்காது.