Snap ஸ்பாட்லைட் சமர்பித்தல் மற்றும் வருவாய் விதிமுறை புதுப்பிப்புகள்
Snap ஸ்பாட்லைட் சமர்பித்தல் மற்றும் வருவாய் விதிமுறைகளின் புதுப்பிப்பு
செயலுக்கு வரும் தேதி: ஜனவரி 1, 2024
Snap ஸ்பாட்லைட் சமர்ப்பிப்பு மற்றும் வருவாய் விதிமுறைகளில் நாங்கள் சில மாற்றங்களைச்செய்து கொண்டிருக்கிறோம். ("விதிமுறைகள்") அவை மேலே கொடுக்கப்பட்டுள்ள "செல்லுபடியாகும்" தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும். நடைமுறைக்கு வரும் தேதி வரை நடைமுறையில் இருக்கும் விதிமுறைகளின் முந்தைய பதிப்பு இங்கு கிடைக்கிறது. புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளை கவனமாக மதிப்பாய்வு செய்து அவற்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். உங்கள் வசதிக்காக, உங்களுக்கு மிக முக்கியமாக இருக்கக்கூடிய மாற்றங்களை முன்னிலைப்படுத்தி கீழேகுறிப்பிட்டுள்ளோம்:
தகுதிபெறும் Snap-க்கான தகுதி அளவுகோலை நாங்கள் மாற்றியமைக்கிறோம். நாங்கள் (i) பார்வை திரெஷோல்டை 10,000 தனித்துவமான வீடியோ பார்வைகளாக அதிகரித்துள்ளோம் மற்றும் (ii) குறைந்தது 10 தனித்துவமான Snapகள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய நாட்களை 5-தாக குறைத்துள்ளோம். இந்த மாற்றங்கள் பணம்பெறுவதற்கான உங்கள் தகுதியின் மீது தாக்கம் விளைவிக்கும் சாத்தியமுள்ளது, மேலும் நீங்கள் பெறுவதற்குத் தகுதிபெறும் தொகை மற்றும் அது வழங்கப்படும் கால இடைவெளி இரண்டையும் பாதிக்கலாம். மேலும் தகவலுக்கு புதுப்பிக்கப்பட்ட "ஸ்பாட்லைட் பணம் பெறுவதற்கான தகுதி" என்ற பிரிவை மதிப்பாய்வு செய்க.
இந்த மாற்றங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டால், புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளை ஏற்க Snapchat செயலியில் அல்லது வெப் அப்லோடரில் (பொருந்துமாறு) சுட்டிக்காட்டப்பாடும்போது "சரி" என்பதை கிளிக் செய்யவும். புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளில்உள்ள எந்த மாற்றத்தையாவது நீங்கள் ஏர்க்காவிட்டால், மேலே பட்டியலிடப்பட்டுள்ள "நடைமுறைக்கு வரும்" தேதிக்கு முன்னர் ஸ்பாட்லைட் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும்.
எப்போதும் போல், உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களைத் தொடர்புகொள்ளவும்.
நன்றி!
Team Snapchat