தயவுசெய்து கவனிக்கவும்: லென்ஸ்கள் திட்டத்திற்கான டிஜிட்டல் பொருட்கள் பிப்ரவரி 10, 2025 அன்று முடிவடைகிறது.  அந்த தேதிக்குப் பிறகு, லென்ஸ்கள் விதிமுறைகளுக்கான இந்த SNAP டிஜிட்டல் பொருட்களின் பிரிவு 2 -இல் விவரிக்கப்பட்டுள்ளவாறு டோக்கன்கள்-ஆதரவுள்ள டிஜிட்டல் பொருட்களைக் கொண்டுள்ள லென்ஸ்களை டெவலப்பர்கள் வெளியிட முடியாது.  பிப்ரவரி 10, 2025 வரையிலான எந்தவொரு தகுதிச் செயல்பாட்டிற்கான கட்டணம் உட்பட கூடுதல் தகவலுக்கு, Snapchat ஆதரவைப் பார்வையிடவும்.

Snap டிஜிட்டல் பொருட்கள் லென்ஸஸ் விதிமுறைகள்

செயல்படுத்தியது: 1 ஏப்ரல், 2024

நடுவர் தீர்ப்பாய அறிவிப்பு: இந்த விதிமுறைகளில் பின்னர் ஒரு நடுவர் தீர்ப்புவாசகம் உள்ளது.

அறிமுகம்

இந்த லென்ஸ்களுக்கான டிஜிட்டல் பொருட்கள் விதிமுறைகளை (“விதிமுறைகள்”) நிர்வகிப்பவையாவன (i) நீங்கள் உருவாக்கிய லென்ஸ்களுக்குள் (“டிஜிட்டல் பொருட்கள் லென்ஸ்கள்”) டிஜிட்டல் பொருட்களுக்கான டோக்கன்களைப் பயன்படுத்த பயனர்களுக்கு உதவும் செயல்பாட்டைச் செயல்படுத்துகிறது; மற்றும் (ii) இந்த விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தகுதி இருந்தால், லென்ஸ்களுக்கான டிஜிட்டல் பொருட்கள் திட்டத்தில் ("திட்டம்") வடிவமைத்தவராக உங்கள் பங்கேற்பு. இந்தத் திட்டம் தகுதியான வடிவமைப்பாளர்களின் டிஜிட்டல் பொருட்கள் லென்ஸ்களை உருவாக்கும் சேவைகள் தொடர்பாக Snap இலிருந்து பணம் பெறும் வாய்ப்பை வழங்குகிறது. டிஜிட்டல் பொருட்கள் லென்ஸஸ் மற்றும் இந்த விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தயாரிப்பும் சேவையும் Snap சேவை விதிமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ளபடி "சேவைகள்" எனப்படும். இந்த விதிமுறைகள் Snap சேவை விதிமுறைகள், சமூக வழிகாட்டுதல்கள், Lens Studio விதிமுறைகள், Lens Studio உரிம ஒப்பந்தம், Snap டோக்கன்கள் விற்பனை விதிமுறைகள் மற்றும் பயன்பாடு, Snapchat பிராண்ட் வழிகாட்டுதல்கள், Snapcode பயன்பாட்டு வழிகாட்டுதல்கள்,ிஜிட்டல் பொருட்களுக்கான லென்ஸஸ் வடிவமைப்பாளர் வழிகாட்டி மற்றும் Lens Studio சமர்ப்பிப்பு வழிகாட்டுதகள் மற்றும் சேவைகளை நிர்வகிக்கும் பிற விதிமுறைகள், கொள்கைகள் அல்லது வழிகாட்டுதல்களைக் குறிப்பிடுவதன் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றன. நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது தகவல்களை எவ்வாறு கையாளுகிறோம் என்பதை அறிய எங்கள் தனியுரிமைக் கொள்கையையும் மதிப்பாய்வு செய்க. இந்தப் விதிமுறைகளைக் கவனமாகப் படிக்கவும்.

இந்த விதிமுறைகள் உங்களுக்கும் (அல்லது உங்கள் அமைப்பு) Snap-க்கும் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளது) இடையே சட்டப்பூர்வமாக பிணைக்கும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கிறது. இந்த விதிமுறைகளின் நோக்கத்திற்காக, “Snap” என்பதன் அர்த்தமானது: 

  • Snap Inc. (நீங்கள் அமெரிக்காவில் வசிக்கிறீர்கள் அல்லது அமெரிக்காவில் தனது முதன்மை தொழில் இடத்தைக் கொண்டுள்ள ஒரு தொழிலின் சார்பாக சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள் எனில்); 

  • Snap Camera India Private Limited (நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள் அல்லது இந்தியாவில் தனது முதன்மை தொழில் இடத்தைக் கொண்டுள்ள ஒரு தொழிலின் சார்பாக சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள் எனில்); அல்லது 

  • Snap Group Limited (நீங்கள் உலகில் வேறு எங்கும் வசிக்கிறீர்கள் அல்லது உலகில் வேறு எங்கும் தனது முதன்மை தொழில் இடத்தைக் கொண்டுள்ள ஒரு தொழிலின் சார்பாக சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள் எனில்).

இந்த விதிமுறைகள் சேவையை நிர்வகிக்கும் பிற விதிமுறைகளுடன் முரண்பட்டால், இந்த விதிமுறைகளே திட்டத்தின் மீது டிஜிட்டல் பொருட்கள் லென்ஸ்கள் மற்றும் திட்டத்தில் உங்கள் பங்கேற்பிற்கேற்றவாறு முழுமையாக பொருந்தும். விதிமுறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள, ஆனால், வரையறுக்கப்படாத பெரிய எழுத்துச் சொற்கள் அனைத்தும், சேவையைக் கட்டுப்படுத்துகிற பொருந்தும் விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி தங்களுடைய சொந்தப் பொருளைக் கொண்டுள்ளன. தயவுசெய்து இந்த விதிமுறைகளின் நகலை அச்சிட்டு அவற்றை உங்கள் குறிப்புக்காக வைத்துக் கொள்ளவும்.  

1. திட்டத்திற்கான தகுதி

நீங்கள் திட்டத்தில் சேர விரும்பினால், கீழே உள்ள தகுதித் வரம்பினை நீங்கள் பூர்த்திசெய்தால், டிஜிட்டல் லென்ஸ்கள் வடிவமைப்பாளர் வழிகாட்டி, Snap டோக்கன்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டு விதிமுறைகள் ஆகியவற்றின்படி, Lens Studio விதிமுறைகள், மற்றும் சமூக வழிகாட்டுதல்களை பன்படுத்தி டிஜிட்டல் பொருட்கள் லென்ஸ்களை உருவாக்கி, கிடைக்கச் செய்ய ஒப்புக்கொள்கிறீர்கள். திட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் லென்ஸஸ் Snap இன் மிதமான வழிமுறைகள் மற்றும் நடைமுறைகள் மற்றும் எந்தவொரு லென்ஸஸ் வடிவமைப்பாளர் டிஜிட்டல் பொருட்களுக்கான வழிகாட்டுதல்கள் அல்லது கட்டுப்பாடுகளுக்கு இணக்கமாக உள்ளதா என்று மதிப்பாய்வு செய்யப்படலாம். மேலும் இணங்காத லென்ஸஸ்கள் திட்டத்திற்கு தகுதி பெறாமல் போகலாம்.

திட்டத்திற்குத் தகுதிபெற, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி (i) கணக்குத் தேவைகள் மற்றும் (ii) பணம்செலுத்துதல் கணக்குத் தகுதித் தேவைகள் ஆகிய இரண்டையும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

  • கணக்கு தேவைகள். பின்வரும் நிபந்தனைகள் அனைத்தையும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்: (i) நீங்கள் தகுதியான நாட்டில் சட்டப்பூர்வமாக வசிப்பவராக இருக்க வேண்டும், (ii) Lens Studio இல் உங்கள் சுயவிவரத்தை பொதுவில் அமைக்க வேண்டும், (iii) உங்கள் Snapchat கணக்கு உருவாக்கப்பட்டு குறைந்தது ஒரு மாதமாவது இருக்க வேண்டும் மற்றும் (iv) லென்ஸஸ் வடிவமைப்பாளர் வழிகாட்டிக்கான டிஜிட்டல் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ள குறைந்தபட்ச கணக்குத் தகுதிகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும், இது Snap அதன் விருப்பப்படி அவ்வப்போது புதுப்பிக்கப்படலாம் ("கணக்கு தேவைகள்").

  • பணம்செலுத்துதல் கணக்கு தேவைகள். திட்டத்துடன் தொடர்புடைய கட்டணங்களைப் பெறுவதற்குத் தகுதிபெற, நீங்கள் பணம்செலுத்துதல் கணக்குத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும் (கீழே உள்ள பிரிவு 4 இல் குறிப்பிடப்பட்டுள்ளது).

2. டோக்கன்கள் ரீடீம்கள் 

Snap டோக்கன்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டு விதிமுறைகளுக்கு இணங்க, பயனர்கள் டோக்கன்களை வாங்கலாம் மற்றும் Snapchat இல் டிஜிட்டல் பொருட்களுக்காக அவற்றை ரீடீம் செய்யலாம்.

உங்கள் டிஜிட்டல் பொருட்கள் லென்ஸில் ("ரீடீம்") டிஜிட்டல் பொருட்களைத் திறக்க ஒரு பயனர் டோக்கன்களை ரீடீம் செய்தால், இந்த விதிமுறைகளுடன் நீங்கள் இணங்குவதற்கேப, நீங்கள் நிகர வருவாயின் ஒரு பங்கின் அடிப்படையில் ஒரு தொகையினைப்("பணம் செலுத்துதல்") பெற தகுதியுடையவராக இருக்கலாம். பணம் செலுத்துதல் தொகை Snap ஆல் அதன் சொந்த விருப்பப்படி தீர்மானிக்கப்படும். சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக, நிகர வருவாயை நிர்ணயிக்கும் போது, ​​உங்கள் லென்ஸில் (கள்) ரீடீம் செய்யப்படும் எந்தவொரு இலவச அல்லது விளம்பர டோக்கன்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது மற்றும் எந்த வகையிலும் பணம் பெற உங்களுக்கு உரிமை அளிக்கப்படமாட்டாது. எந்த நேரத்திலும் இலவச மற்றும் விளம்பர டோக்கன்களை விநியோகிக்கும் உரிமையை Snap கொண்டுள்ளது

டோக்கன்களுக்கான கட்டணமாக, ஒரு பயனரிடமிருந்து (மூன்றாம் தரப்பு செயலி ஸ்டோரால் வசூலிக்கப்படும் பரிவர்த்தனைக் கட்டணத்தை கழித்து) நிதியைப் பெற்ற பிறகு மட்டுமே Snap உங்களுக்குப் பணம் செலுத்தும்.

3. லென்ஸஸ் கிடைக்கும்தன்மை

லென்ஸ் ஸ்டுடியோ விதிமுறைகளுக்கிணங்காமல், இந்த விதிமுறைகளுக்கு இணங்க அகற்ற வேண்டிய அவசியமில்லை எனில், Snapchat செயலியில் டிஜிட்டல் பொருட்கள் லென்ஸஸ் எதையும் அப்படியே வைத்திருக்க ஒப்புக்கொள்கிறீர்கள். அகற்றுதல் தேவைப்படும் பட்சத்தில், அதைப் பற்றி Snap க்கு தெரிவிக்க வேண்டும் மற்றும் பொருந்தக்கூடிய டிஜிட்டல் பொருட்கள் லென்ஸை நீக்க வேண்டும். Snap சேவை விதிமுறைகளுக்கு இணங்க உங்கள் Snapchat கணக்கை நீங்கள் நீக்கினால், டிஜிட்டல் பொருட்கள் லென்ஸில் உள்ள சொத்துக்களின் மீது Snap க்கு உரிமைகள் நிரந்தரமாக வழங்கப்படுகின்றன மற்றும் நீக்கத்திற்கும் பிறகும் அவை அப்படியே தக்கவைக்கப்படும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள், மேலும் பயனர்கள் தொடரும் டிஜிட்டல் பொருட்கள் லென்ஸ்கள் மற்றும் அதில் திறக்கப்பட்டுள்ள எந்த டிஜிட்டல் பொருட்களையும் பயன்படுத்த முடியும். இருப்பினும், அத்தகைய பயனர்கள் இனி அத்தகைய டிஜிட்டல் பொருட்கள் லென்ஸ்களுக்குள் டோக்கன்களை ரீடீம் செய்ய முடியாது, மேலும் Snapchat கணக்கிலிருந்து அகற்றப்பட்ட அல்லது வெளியிடப்பட்ட டிஜிட்டல் பொருட்கள் லென்ஸ்கள் தொடர்பாக Snapchat கணக்கிலிருந்து பணம் பெறுவதற்கு நீங்கள் தகுதி பெற மாட்டீர்கள்.

4. பணம் செலுத்துவதற்கான கணக்கு தேவைகள்

Snap-இலிருந்து பணம் பெறுவதற்குத் தகுதிபெற நீங்கள் பின்வரும் தேவைகள் அனைத்தையும் ("பணம் செலுத்துவதற்கான கணக்கு தேவைகள்") பூர்த்தி செய்திருக்கவேண்டும்.

  • நீங்கள் ஒரு தனிநபராக இருந்தால், நீங்கள் தகுதியான நாட்டில் சட்டப்பூர்வ குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும் மற்றும் அத்தகைய தகுதியுள்ள நாட்டில் நீங்கள் இருக்கும்போது உங்கள் டிஜிட்டல் பொருட்கள் லென்ஸை டெலிவரி செய்திருக்கிறீர்கள்.

  • நீங்கள் உங்கள் அதிகார எல்லையில் சட்டப்பூர்வ பெரும்பான்மை வயதை எட்டியிருக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் 18 வயதாக இருக்க வேண்டும், மேலும், எங்கள் நடைமுறைகளுக்கு இணங்க, தேவையான பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலர் ஒப்புதலை(களை) பெற்றிருக்க வேண்டும்.

  • உங்கள் சட்டபூர்வ முதல் மற்றும் கடைசி பெயர்கள், மின்னஞ்சல், தொலைபேசி எண், குடியிருக்கும் மாநிலம் மற்றும் நாடு மற்றும் பிறந்த தேதி ("தொடர்புத் தகவல்") ஆகியவை உள்ளிட்ட முழுமையான மற்றும் துல்லியமான தொடர்புத் தகவல்களை நீங்கள் எங்களுக்கு வழங்க வேண்டும்.

  • நீங்கள் (அல்லது உங்கள் பெற்றோர்/சட்டப்பூர்வ பாதுகாவலர்(கள்) அல்லது தொழில் நிறுவனம், எது பொருந்துமோ) Snap-இன் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் நபர் பணம் வழங்குனருடன் பணம் பெறுவதற்கான கணக்கிற்குத் தேவைப்படும் அனைத்துத் தேவைகளையும் உருவாக்கி முடித்திருக்க வேண்டும். பணம் பெறுவதற்கான உங்கள் கணக்கு உங்கள் தகுதிபெறும் நாட்டுடன் பொருந்தியிருக்க வேண்டும்.

  • இந்த விதிமுறைகளின் கீழ் பணம் வழங்குவதற்கான நிபந்தனையாக, உங்களால் வழங்கப்பட்ட தொடர்புத் தகவல்கள் மற்றும் சிறார்களின் பெற்றோர் / சட்டப்பூர்வப் பாதுகாவலரின் அடையாளத்தையும் ஒப்புதலையும் சரிபார்க்க வேண்டும் என்ற உரிமையை, எங்கள், எங்கள் துணை அமைப்புகள், மற்றும் எங்கள் மூன்றாம் தரப்பு பணம் செலுத்துதல் வழங்குநர் சார்பாக, நாங்கள் கொண்டுள்ளோம்.

  • நீங்கள் எங்களின் மற்றும் எங்களின் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் நபர் பணம் வழங்குனரின் நடைமுறைகளின் படி உங்கள் பணத்தை உங்கள் தொழில் நிறுவனத்திற்கு மாற்ற எங்களை அங்கீகரித்திருந்தால், அத்தகைய நிறுவனம் பதிவுசெய்யப்பட்டு, தலைமை அலுவலகத்தைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது உங்களது தகுதிபெறும் நாட்டிற்குள் ஒரு அலுவலகத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

  • நீங்கள் Snapக்கும் அதன் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் நபர் பணம் செலுத்தல் வழங்குநர்களும் துல்லியமான தொடர்பு மற்றும் பிற தகவல்களை தேவைக்கேற்ப வழங்குகிறீர்கள், எனவே நீங்கள் தகுதி பெறும்போது Snap அல்லது மூன்றாம் நபர் பணம் செலுத்தல் வழங்குநர்கள் உங்களைத் தொடர்பு கொள்ளலாம் உங்களுக்கு (அல்லது உங்கள் பெற்றோர்/காப்பாளர்(கள்) அல்லது தொழில் நிறுவனத்திற்கு, பொருந்துமாறு) பணம் செலுத்தலாம்.

  • உங்கள் Snapchat கணக்கு மற்றும் பணம்செலுத்துதல் கணக்கு செயலில் உள்ளன, நல்ல மதிப்பீட்டில் (எங்களாலும் எங்கள் மூன்றாம் தரப்பு பணம் வழங்குநராலும் தீர்மானிக்கப்படுகிறது), மற்றும் இந்த விதிமுறைகளுக்கு இணக்கமாக உள்ளது.

  • எங்கள், அல்லது எங்கள் மூன்றாம் நபர் பணம் செலுத்துதல் வழங்குநரின் இணக்க மதிப்பாய்வில் நீங்கள் (அல்லது உங்கள் பெற்றோர்/சட்டப்பூர்வ பாதுகாவலர்(கள்) அல்லது தொழில் நிறுவனம், பொருந்துமாறு) தேர்ச்சியடையவில்லை என்றால், நீங்கள் எந்தவொரு பணம் செலுத்துதலைப் பெறுவதற்கும் தகுதி பெற மாட்டீர்கள், நாங்கள் உங்களுக்கு வழங்க வேண்டியும் இருக்காது. இத்தகைய மதிப்பாய்வுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்பட்டு, அமெரிக்காவில் பிரத்தியேகமாக நியமிக்கப்பட்ட நபர்களின் தேசியப் பட்டியல் மற்றும் வெளிநாட்டு ஒப்பளிப்பு ஏய்ப்பவர்கள் பட்டியல் உள்ளிட்ட எந்தவொரு சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரத்தால் பராமரிக்கப்படும் எந்தவொரு தடைசெய்யப்பட்ட தரப்புகளின் பட்டியலிலும் நீங்கள் இருக்கிறீர்களா என்பதைத் தீர்மானிப்பதற்கான ஒரு ஆய்வும் அடங்கும், ஆனால் அவை மட்டுமே அல்ல. இந்த விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ள வேறு எந்த பயன்பாடுகளுக்கும் மேலாக, நீங்கள் எங்களுக்கு வழங்கிய தகவல்கள், உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், இணக்க மதிப்பாய்வுகளை நடத்தவும், பணம் வழங்கும் செயல்முறையை முடிக்கவும் மூன்றாம் தரப்பினருடன் பகிரப்படலாம்.

  • நீங்கள் (i) Snap அல்லது அதன் தாய் நிறுவனம், துணை அமைப்புகள் அல்லது இணை அமைப்புகளில் பணியாளர், அதிகாரி அல்லது இயக்குனர் (ii) நீங்கள் ஒரு அரசாங்க நிறுவனம், அரசாங்க நிறுவனத்தின் துணை நிறுவனம் அல்லது இணை நிறுவனம் அல்லது அரச குடும்பத்தின் உறுப்பினராக இருந்தால் அல்லது (iii) ஒரு தொழில் கணக்கிலிருந்து லென்ஸஸ்களை திட்டத்திற்கு சமர்ப்பித்தால், நீங்கள் பணம் பெறுவதற்குத் தகுதி பெற மாட்டீர்கள்.

5. பணம் பெறுதல் அறிவிப்பு மற்றும் செயல்முறை

ஒரு பயனர் ரீடீம் செய்தால், Snapchat செயலி மூலம் அறிவிப்பை அனுப்புவதன் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்துவோம்.

இந்த விதிமுறைகளுடன் உங்கள் இணக்கத்திற்கு உட்பட்டு, சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு, நீங்கள் (அல்லது உங்கள் பெற்றோர்/சட்டக் காப்பாளர்(கள்) அல்லது தொழில் நிறுவனம், பொருந்தக்கூடியவை) உங்கள் தகவல் குறிப்பில் பொருத்தமான விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து பணம் செலுத்தக் கோரலாம். நீங்கள் சரியான முறையில் பணம் செலுத்த கோர வேண்டுமானால், குறைந்தபட்சம் $100USD ("பணம் செலுத்தும் வரம்பு") குறைந்தபட்ச கட்டண வரம்பை அடைவதற்கு குறைந்தபட்சம் போதுமான கிரிஸ்டல்ஸ்களையாவது நாங்கள் முதலில் பதிவு செய்து உங்களுக்குக் கூறியிருக்க வேண்டும்.

கவனிக்கவும்: ஒருவேளை (A) ஒரு வருட காலத்திற்கான ரீடீம் செய்வதற்காக நாங்கள் உங்களுக்கு எந்தவொரு கிரிஸ்டல்களையும் பதிவு செய்து கொடுக்கவில்லை, என்றாலோ, அல்லது (B) இரண்டு வருடக் காலத்திற்கு உடனடியாக முந்தைய பத்திக்கு ஏற்ப நீங்கள் சரியான முறையில் பணம் கோரவில்லை என்றாலோ,
அத்தகைய காலகட்டத்தின் முடிவில் எந்தவொரு ரீடீம் செய்வதற்கும் நாங்கள் பதிவுசெய்து கூறியிருந்த கிரிஸ்டலின் அடிப்படையில் உங்களின் கணக்கில் பணத்தை நாங்கள் வழங்குவோம், வழங்கப்படக் கூடிய சந்தர்ப்பங்கள்: (I) பணம் செலுத்தல் வரம்பை நீங்கள் எட்டிவிட்டீர்கள், (II) நீங்கள் ஒரு பணம் செலுத்தும் கணக்கை உருவாக்கியுள்ளீர்கள், (III) தேவையான அனைத்துத் தொடர்புத் தகவல்களையும், உங்களுக்குப் பணம் செலுத்துவதற்குத் தேவையான வேறு தகவல்களையும் வழங்கியுள்ளீர்கள், (IV) அத்தகைய ரீடீம்களுக்கு நாங்கள் பதிவுசெய்து கூறியிருந்த கிரிஸ்டல்கள் தொடர்பாக நாங்கள் உங்களுக்கு இன்னும் பணம் செலுத்தவில்லை, (V) உங்கள் SNAPCHAT கணக்கு மற்றும் பணம் செலுத்தும் கணக்கு நல்ல நிலையில் உள்ளது என்றும், (VI) இல்லையெனில் நீங்கள் இந்தப் படைப்பாளர் விதிமுறைகள் மற்றும் எங்கள் மூன்றாம் நபர் பணம் வழங்குநரின் நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குகிறீர்கள்.
மேற்கூறிய அனைத்துத் தேவைகளையும் நீங்கள் பூர்த்தி செய்யவில்லை என்றால், அத்தகைய தகுதிவாய்ந்த ரீடீம்கள் தொடர்பான எந்தவொரு பணத்தையும் நீங்கள் இனி பெற முடியாது.

பணம் செலுத்துதல்களை Snap சார்பாக, இந்த விதிமுறைகளின் கீழ் பணம் வழங்குபவராகச் செயல்படக்கூடிய கிளை அல்லது துணை அமைப்பு நிறுவனங்கள் அல்லது பிற அங்கீகாரம் பெற்ற மூன்றாம் நபர் பணம் வழங்குநர்கள் உங்களுக்கு வழங்கலாம், Snap-இன் கட்டுப்பாட்டில் இல்லாத எந்தவொரு காரணத்துக்காகவும் உங்கள் பணம் வழங்கல் கணக்குக்குச் சேவைப் பணம் வழங்கல்களைப் பரிமாற்றம் செய்வதில் எந்தத் தாமதமோ, தோல்வியோ, சாத்தியமின்மையோ ஏற்பட்டால், அதற்கு Snap பொறுப்பேற்காது, இதில், இந்த விதிமுறைகள் அல்லது பொருந்தும் பணம் வழங்கல் கணக்கின் விதிமுறைகளுக்கு நீங்கள் இணங்காமலிருப்பதும் உள்ளடங்கும். Snap-ன் கட்டுப்பாட்டில் இல்லாத காரணத்தினாலும், உங்களை (அல்லது உங்கள் பெற்றோர்/சட்டப் பாதுகாவலர்(கள்) அல்லது தொழில் நிறுவனம், பொருந்துமாறு) தவிர வேறு யாராவது உங்கள் Snapchat கணக்கைப் பயன்படுத்தி உங்கள் ரீடீம்களுக்கு நாங்கள் பதிவுசெய்த மற்றும் கூறப்பட்ட எந்த கிரிஸ்டல்களின் அடிப்படையிலும் அல்லது கணக்குத் தகவலைப் பயன்படுத்தி பணம் செலுத்தக் கோரப்பட்டால் Snap பொறுப்பாகாது. எங்கள் மற்றும் எங்களின் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் நபர் பணம்செலுத்துதல் வழங்குநரின் நடைமுறைகளுக்கு ஏற்ப ஒரு தொழில் நிறுவனத்திற்கு பணத்தைப் பரிமாற்றம் செய்ய நீங்கள் Snap ஐ அங்கீகரித்தால், இந்த விதிமுறைகளின் கீழ் உங்களுக்குச் செலுத்த வேண்டிய எந்தவொரு அல்லது எல்லாத் தொகைகளையும், இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்தத் தொழில் நிறுவனத்திற்கு Snap பரிமாற்றம் செய்யலாம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டு ஒப்புக் கொள்கிறீர்கள். பணம் வழங்கலானது அமெரிக்க டாலர்களில் நிகழ்த்தப்படும், ஆனால், நீங்கள் உங்களுடைய உள்ளூர் நாணயத்தில் உங்கள் பணம் வழங்கல் கணக்கிலிருந்து நிதியை எடுக்கத் தேர்ந்தெடுக்கலாம், இதற்கு, திட்டத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில், மற்றும் எங்கள் மூன்றாம் நபர் பணம் வழங்குநரின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, மேலும் விவரிக்கப்பட்டுள்ளபடி, பயன்பாட்டு, பண மாற்ற மற்றும் பரிமாற்றக் கட்டணங்கள் பொருந்தும். Snapchat செயலியில் காட்டப்பட்ட எந்தவொரு பணம்செலுத்துதல் தொகைகளும் தோராயமான மதிப்புகளே மேலும் மாற்றத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு பணம்செலுத்துதலின் இறுதித் தொகைகள் உங்கள் பணம்செலுத்துதல் கணக்கில் பிரதிபலிக்கும்.

எங்கள் பிற உரிமைகள் மற்றும் தீர்வுகளுடன் கூடுதலாக, சந்தேகத்திற்குரிய தவறான செயல்பாட்டிற்காக, இந்த விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதற்காக, எச்சரிக்கை அல்லது முன்னறிவிப்பு இன்றி, சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு, இந்த விதிமுறைகளின் கீழ் உங்களுக்கான எந்தவொரு பணம் செலுத்துதல்களையும் நாங்கள் நிறுத்தி வைக்கலாம், ஈடு செய்யலாம், சரிசெய்யலாம், விலக்கி வைக்கலாம், (லென்ஸஸ் வடிவமைப்பாளர் வழிகாட்டிக்கான டிஜிட்டல் பொருட்களில் வரையறுக்கப்பட்டுள்ளவாறு), இந்த விதிமுறைகளுக்கு இணங்கத் தவறுதல், தவறுதலாக உங்களுக்குச் செலுத்தப்பட்ட அதிகப்படியான பணம், திருப்பிச் செலுத்தப்பட்ட ஏதேனும் தொகைகள், அல்லது முந்தைய மாதங்களில் உங்களுக்குச் செலுத்தப்பட்ட டோக்கன்களுக்கான சேவைகளுக்காக பயனர்களால் திரும்பப் பெறப்பட்ட தொகைகள், அல்லது வேறு எந்த ஒப்பந்தத்தின் கீழும் நீங்கள் எங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களுக்காக அத்தகைய தொகைகளை ஈடுகட்டுதல்.

எங்களுக்கு அல்லது எங்கள் துணை அமைப்புகள், தொடர்புடைய நிறுவனங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பணம் வழங்குநருக்கு நீங்கள் வழங்கும் அனைத்துத் தகவல்களும் உண்மை மற்றும் துல்லியமானவை என்பதையும், அத்தகைய தகவல்களின் துல்லியத்தை எல்லா நேரங்களிலும் பராமரிப்பீர்கள் என்பதையும் நீங்கள் முன்வைக்கிறீர்கள்.

6. வரிகள்

சேவைக்காக நீங்கள் பெறும் எந்தவொரு பணம்செலுத்துதல்களுக்கும் அதனுடன் தொடர்புள்ள எந்தவொரு அல்லது அனைத்து வரிகள், சுங்கத் தீர்வுகள் அல்லது கட்டணங்களுக்கும் உங்களுக்கு முழுப் பொறுப்பு மற்றும் கடப்பாடு உள்ளது என்பதை நீங்கள் உடன்பட்டு ஒப்புக்கொள்கிறீர்கள். உங்களுக்கு வழங்க வேண்டிய பணம்செலுத்துதல்கள், எந்தவொரு பொருந்தக்கூடிய விற்பனை, பயன்பாட்டு, கலால், மதிப்புக் கூட்டப்பட்ட, பொருட்கள் மற்றும் சேவைகள் அல்லது இவை போன்ற வரிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ், உங்களுக்கு வழங்க வேண்டிய ஏதாவது தொகையிலிருந்து வரிகள் கழிக்கப்பட அல்லது நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்றால், Snap, அல்லது அதன் துணை அமைப்பு, அல்லது அதன் அங்கீகரிக்கப்பட்ட பணம் செலுத்துகை வழங்குநர், உங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையிலிருந்து அத்தகைய வரிகளைக் கழித்து, பொருந்தக்கூடிய சட்டத்தின் படி உரிய வரிவிதிப்பு அதிகாரிகளிடம் செலுத்தலாம். அத்தகைய விலக்குகள் அல்லது நிறுத்துதல்களால் குறைக்கப்பட்டு வழங்கப்படும் பணம், இந்த விதிமுறைகளின் கீழ் உங்களுக்கு வழங்க வேண்டிய மொத்தப் பணம் மற்றும் தீர்வுத் தொகையாக சேர்ந்து அமையும். இந்த விதிமுறைகளின் படி, நீங்கள் Snap, அதன் துணை அமைப்புகள், தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட பணம் வழங்குநருக்கும், புகார் அளிக்கவும் வரி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கும், எந்தவொரு தகவலையும் நிறைவு செய்யத் தேவையான படிவங்கள், ஆவணங்கள் மற்றும் பிற சான்றிதழ்களையும் தருவீர்கள்.

7. உங்கள் பிரதிநிதித்துவங்கள் மற்றும் உத்தரவாதங்கள்

நீங்கள் பிரதிநிதித்துவம் செய்து உத்தரவாதம் அளிப்பதாவது: (a) டிஜிட்டல் பொருட்கள் லென்ஸில் ரீடீம் செய்யப்பட்ட எந்தவொரு டோக்கன்களிலிருந்தும் தரவை நீங்கள் சேகரிக்கவோ, பெறவோ அல்லது தருவிக்கவோ மாட்டீர்கள், ஆனால் ஒரு டிஜிட்டல் பொருட்கள் லென்ஸ் மற்றும் பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்க டோக்கன்களை ரீடீம் செய்யும் திறனைப் பயனருக்கு வழங்குவதற்குத் தேவையான அளவுக்குத் தவிர; (b) நீங்கள் எல்லா நேரங்களிலும் லென்ஸ்கள் வடிவமைப்பாளர் வழிகாட்டிக்கான டிஜிட்டல் பொருட்களுக்கு இணங்குவீர்கள், மற்றும் (c) நீங்கள் அமெரிக்காவைத் தவிர வேறு ஒரு நாட்டில் சட்டப்பூர்வமாக வசிப்பவராக இருந்தால், உங்கள் லென்ஸை உருவாக்குவதற்கான சேவைகளை மேற்கொள்ளும் போது நீங்கள் அமெரிக்காவிற்கு வெளியே இருந்தீர்கள் எனில். இந்த விதிமுறைகளுக்கு நீங்கள் இணங்கத் தவறினால், இந்த விதிமுறைகளின் கீழ் உள்ள உங்கள் உரிமைகள் Snap இலிருந்து உங்களுக்கு அறிவிக்கப்படாமல் தானாகவே நிறுத்தப்படும். மேற்கூறியவை, சேவைகளுக்குப் பொருந்தக்கூடிய பிற விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பிற பிரதிநிதித்துவங்கள் மற்றும் உத்தரவாதங்களைக் கட்டுப்படுத்தாது.

8. ரகசியத்தன்மை

Snap வழங்கக்கூடிய எந்தவொரு பொதுவல்லாத தகவலும் ரகசியமானது என்றும், Snap-இன் வெளிப்படையான, முன்பே எழுதப்பட்ட ஒப்புதல் இல்லாமல் அதை எந்த மூன்றாம் நபருக்கும் வெளிப்படுத்தமாட்டீர்கள் என்றும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

9. தனியுரிமை

உங்கள் தனியுரிமை எங்களுக்கு மிகவும் முக்கியமானது. எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் படிப்பதன் மூலம் நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது உங்கள் தகவல் எப்படிக் கையாளப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

10. நீக்குதல்; இடைநிறுத்துதல்

எங்களிடம் இருக்கும் மற்ற உரிமைகள் அல்லது தீர்வுகளுடன் சேர்த்து, உங்கள் டிஜிட்டல் பொருட்கள் லென்ஸஸ், திட்டம் அல்லது வேறு ஏதேனும் சேவைகள் அல்லது மேற்கூறியவற்றிற்கான உங்கள் அணுகலை இடைநிறுத்தவோ அல்லது நிக்கவோ எங்களுக்கு உரிமை உள்ளது. இந்த விதிமுறைகளுக்கு நீங்கள் இணங்காவிட்டால், திரட்டப்பட்ட, ஆனால் உங்கள் பணம்செலுத்துதல் கணக்குக்கு இன்னும் அனுப்பப்படாத செலுத்தப்படாத தொகைகள் அனைத்தும் பெற முடியாதவாறு தகுதி நீக்கம் செய்யப்படலாம். இந்த விதிமுறைகளின் ஏதேனும் பகுதியை நீங்கள் எந்த நேரத்திலும் ஏற்கவில்லை என்றால், நீங்கள் திட்டத்தில் பங்கேற்பதையும் பொருந்தக்கூடிய சேவைகளைப் பயன்படுத்துவதையும் நிறுத்த வேண்டும்.

எந்தவொரு காரணத்திற்காகவும், எந்தவொரு நேரத்திலும், உங்களுக்கு முன் அறிவிப்பு வழங்காமல் அல்லது உங்களுக்கு கடமைப்படாமல், பொருந்தக்கூடிய சட்டத்தினால் அனுமதிக்கப்படும் அதிகபட்ச அளவிற்கு, திட்டம் அல்லது சேவைகளை வழங்குவதை நிறுத்தவோ, மாற்றவோ, ரத்து செய்யவோ அல்லது இடைநிறுத்தவோ எங்களுக்கு உரிமை உள்ளது. திட்டம் அல்லது ஏதேனும் சேவைகள் எல்லா நேரங்களிலும் அல்லது எந்த நேரத்திலும் கிடைக்கும் என்பதற்கும் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு மேற்கூறியவற்றை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம் என்பதற்கும் நாங்கள் உத்தரவாதம் அளிக்க மாட்டோம். எந்தக் காரணத்திற்காகவும் திட்டம் அல்லது ஏதாவது சேவையின் தொடர்ச்சியான கிடைக்கும் தன்மையை நீங்கள் சார்ந்திருக்கக் கூடாது.

11. முகமை உறவு இல்லை

இந்த விதிமுறைகளில் உள்ள எதையும், உங்களுக்கும் Snap-க்கும் இடையில் ஓர் இணை முயற்சி, முதன்மையாளர்-முகவர் அல்லது பணி உறவைக் குறிப்பதாகப் புரிந்துகொள்ளக்கூடாது.

12. நடுவர் தீர்ப்பு வழங்கல் மற்றும் ஆளும் சட்டம்

நினைவிற்கொள்க, இந்த விதிமுறைகள் (நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் அல்லது, ஒரு தொழிலின் சார்பாக சேவைகளைப் பயன்படுத்துகிறீர்களா, அதன் முதன்மைத் தொழில் இடம் எங்குள்ளது ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுக்குப் பொருந்தக்கூடிய) Snap Inc. சேவை நிபந்தனைகள் அல்லது Snap Group Limited சேவை நிபந்தனைகளை உள்ளடக்கியதாகும். Snap Inc. சேவை நிபந்தனைகள் அல்லது Snap Group Limited சேவை நிபந்தனைகள் (பொருந்துவது எதுவோ அது) அனைத்தும் உங்களுக்குப் பொருந்தும் என்றாலும், இதனைக் குறிப்பாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம், இந்த விதிமுறைகள் Snap Inc.சேவை விதிமுறைகளின் நடுவர் தீர்ப்பு வழங்கல், பிரதிநிதித்துவ நடவடிக்கை விலக்கு, நடுவர் உரிமை விலக்கு விதி, சட்டத்தின் தேர்வு விதி, பிரத்தியேக இட விதி ஆகியவற்றால் முறைப்படுத்தப்படுகின்றன சேவை விதிமுறைகள்(நீங்கள் அமெரிக்காவில் வசித்தாலோ அமெரிக்காவில் தொழிலின் முதன்மை இடம் உள்ள தொழிலின் சார்பாக செயல்படுகிறீர்கள் என்றாலோ) அல்லது Snap Group Limited சேவை நிபந்தனைகளின் சர்ச்சை தீர்வு, நடுவர் தீர்ப்பு வழங்கல் விதி, சட்டத்தின் தேர்வுவிதி, மற்றும்பிரத்யேக இட, விதி ஆகியவற்றால் முறைப்படுத்தப்படுகின்றன (நீங்கள் அமெரிக்காவிற்கு வெளியே வசித்தாலோ அமெரிக்காவிற்கு வெளியே தொழிலின் முதன்மை இடம் உள்ள தொழிலின் சார்பாக செயல்படுகிறீர்கள் என்றாலோ).

நடுவர் தீர்ப்பு வழங்கல் அறிவிப்பு: SNAP INC. சேவை நிபந்தனைகளின் நடுவர் தீர்ப்பு வழங்கல் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள முரண்பாடுகளைத் தவிர நீங்களும் SNAP உம் உங்களுக்கு இடையே எழும் சட்டரீதியான கோரல்கள் சர்ச்சைகள் உள்ளிட கோரல்கள் சர்ச்சைகள் SNAP INC. சேவை நிபந்தனைகளின் கட்டாயமாக பிணைக்கும் நடுவர் தீர்ப்பு வழங்கல் விதியின்படி தீர்க்கப்படும் என்பதை ஏற்கிறீர்கள், சேவை விதிமுறைகள் நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவராக இருந்தால் அல்லது அமெரிக்காவில் உள்ள வணிகத்தின் முதன்மையான இடத்தில் உள்ள ஒரு வணிகத்தின் சார்பாக சேவைகளைப் பயன்படுத்தினால், பிரதிநிதித்துவ நடவடிக்கை வழக்கு அல்லது பிரதிநிதித்துவ நடுவர் தீர்ப்பில் பங்கேற்கும் உரிமையைக் கைவிடுகிறீர்கள். நீங்கள் அமெரிக்காவிற்கு வெளியே தொழிலின் முதன்மை இடம் உள்ள தொழிலின் சார்பாக சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், நீங்களும் SNAP GROUP LIMITED உம் உங்களுக்கு இடையேயான சர்ச்சைகள் SNAP GROUP LIMITED சேவை நிபந்தனைகளில் உள்ள பிணைக்கும் தீர்ப்பாய பிரிவில் உள்ள விதிகளின் படி தீர்க்கப்படும் என்பதை ஏற்கிறீர்கள்.

13. மற்றவைகள்

அவ்வப்போது, இந்த விதிமுறைகளை நாங்கள் மாற்றியமைக்கலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள "நடைமுறைப்படுத்தப்படும்" தேதியைப் பார்ப்பதன் மூலம் இந்த விதிமுறைகள் கடைசியாக எப்போது திருத்தப்பட்டது என்பதை உங்களால் தீர்மானிக்க முடியும். இந்த விதிமுறைகளின் எந்தவொரு மாற்றங்களும் மேலே உள்ள "செயல்படுத்தும்" தேதியில் செயல்பாட்டுக்கு வரும் மேலும் அந்த தேதிக்கு பிறகான சேவைகளின் உங்கள் பயன்பாட்டிற்கு அவை பொருந்தும். நீங்கள் இதுபோன்ற விதிமுறைகளின் மிகச் சமீபத்திய பதிப்பை அறிந்து வைத்திருப்பதை உறுதி செய்வதற்காக நீங்கள் இந்த விதிமுறைகளை, ஏதேனும் புதுப்பிப்புகள் உட்பட, மீளாய்வு செய்வதற்கு ஒப்புக்கொள்கிறீர்கள். புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளைப் பொதுவில் பதிவிட்ட பிறகு சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக் கொள்வதாகக் கருதப்படும். நீங்கள் இந்த மாற்றங்களை ஏற்கவில்லை எனில், நீங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இந்த விதிமுறைகளின் ஏதேனும் ஓர் விதியானது செயல்படுத்த முடியாததாகக் கண்டறியப்பட்டால், அந்த விதி துண்டிக்கப்படும் மேலும் மீதமுள்ள எந்தவொரு விதிகளின் செல்லுபடிதன்மையையும் செயல்படுத்தும்தன்மையையும் பாதிக்காது.

இந்த விதிமுறைகள் உங்களுக்கும் Snap க்கும் இடையேயான திட்டத்தைப் பொறுத்தமட்டில் முழு ஒப்பந்தத்தை உருவாக்குகின்றன, இது நீங்களும் Snap உம் ஏற்கனவே ஒப்புக்கொண்ட மற்ற ஒப்பந்தங்கள் உட்பட, உங்களுக்கும் Snap க்கும் இடையிலான முந்தைய அல்லது சமகாலப் பிரதிநிதித்துவங்கள், புரிதல்கள், ஒப்பந்தங்கள் அல்லது தகவல்தொடர்புகள் அனைத்திற்கும் மேலாக இருக்கும். (நமக்கிடையே எழுத்துப்பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்டாலன்றி). பிரிவுத் தலைப்புகள் அனைத்து தரப்பினரின் வசதிக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன, மேலும் இந்த விதிமுறைகளை விளக்குவதில் இவை புறக்கணிக்கப்பட வேண்டும்.