Snapchat+ சந்தா பரிசளித்தல் விதிமுறைகள்
செயல்படுத்தியது: 15 ஆகஸ்ட், 2023
இந்த Snapchat+ பரிசளித்தல் விதிமுறைகளைக் (Snapchat+ பரிசளித்தல் விதிமுறைகள்”) கவனமாகப் படிக்கவும். இந்த Snapchat+ பரிசளித்தல் விதிமுறைகள் உங்களுக்கும் Snap-க்கும் இடையே சட்டரீதியான பிணைப்பு ஒப்பந்தத்தை உருவாக்குகின்றன மற்றும் நீங்கள் Snapchat+ சந்தாவை ("Snapchat+ சந்தா") வாங்கி மற்றொரு Snapchat பயனருக்கு பரிசளிப்பதை நிர்வகிக்கும். இந்த Snapchat+ பரிசளித்தல் விதிமுறைகளில் Snapchat+ சந்தா விதிமுறைகள் மற்றும் வேறு எந்த பொருந்தக்கூடிய விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கைகளில் குறிப்பிடும் விதிமுறைகள் அடங்கியுள்ளன. இந்த Snapchat+ பரிசளித்தல் விதிமுறைகள் வேறு எந்த விதிமுறைகளுடனும் முரண்படும் அளவிற்கு இந்த Snapchat+ பரிசளித்தல் விதிமுறைகள் Snapchat+ சந்தக்களைப் பரிசளித்தல் தொடர்பாக நிர்வகிக்கும். Snap சேவை நிபந்தனைகளில் வரையறுக்கப்பட்டுள்ளபடி Snapchat+ சந்தாக்களைப் பரிசளிக்கும் திறன் Snap-இன் "சேவைகளின்" ஒரு பகுதியாகும்.
("பரிசு சந்தா") சேவைகளின் மூலம் மற்றொரு Snapchat பயனருக்கு ஒரு முன்னரே கட்டணம் செலுத்தப்பட்ட Snapchat+ சந்தாவை வாங்கி பரிசளிக்கும் திறனை நாங்கள் உங்களுக்கு வழங்கலாம். சேவைகளின் மூலம் அல்லது நாங்கள் அவ்வப்போது கிடைக்கச் செய்யும் பிற வழிகளின் மூலம் நீங்கள் பரிசு சந்தா வாங்கலாம் மற்றும் எந்த ஒரு வாங்குதலும் Snapchat+ சந்தா விதிமுறைகளில் அமைக்கப்பட்டுள்ள பணம் செலுத்துதல் விதிமுறைகளால் நிர்வகிக்கப்படும். நீங்கள் பரிசு சந்தா வாங்கிய பிறகு, நீங்கள் நியமித்துள்ள பெறுநர் ("பெறுநர்") சேவைகளின் மூலம் நீங்கள் அவருக்காக ஒரு பரிசு சந்தா வாங்கியது குறித்த ஒரு அறிவிப்பைப் பெறுவார். மற்றும் அது சேவைகளில் அவர்கள் பரிசு சந்தாவை ரிடீம் செய்யும் விருப்பத்தை வழங்கும்.
சுருக்கமாக: நீங்கள் முன்பே பணம் செலுத்தப்பட்ட Snapchat சந்தாக்கள் வாங்கி கீழுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு பிற சேவைப் பயனர்களுக்கு அவற்றைப் பரிசலிக்கலாம்.
a. ஒரு பரிசு சந்தாவைப் பெற்று ரிடீம் செய்ய, பெறுநருக்கு ஏற்கனவே ஒரு Snapchat கணக்கு இருக்கவேண்டும் மற்றும் நீங்கள் சேவை மூலம் அவர்களுடன் நண்பராக இணைந்திருக்க வேண்டும். பரிசு சந்தாக்களை, அதைப் பெறுபவர்கள் தங்கள் Snapchat கணக்கைப் பயன்படுத்தி சேவைகள் மூலமாகவோ அல்லது நாங்கள் அவ்வப்போது கிடைக்கச் செய்யும் பிற வழிகள் மூலமாகவோ மட்டுமே ரிடீம் செய்ய முடியும். பெறுநர் ஒருவர் பரிசு சந்தா மூலம் Snapchat+இன் பயன்பாடு Snap சேவை நிபந்தனைகள் மற்றும் வேறு ஏதேனும் பொருந்தக்கூடிய விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கைகளின் இணக்கத்திற்கு உட்படுத்தப்படும்
b. பரிசு சந்தாவை பெற்றவர் அதை ரிடீம் செய்தவுடன், பரிசு சந்தாவின் காலத்திற்கு பெறுநருக்கு கட்டணம் விதிக்கப்படாது. பரிசு சந்தா பின்வரும் நேரங்களில் தொடங்கும்: (i) பெறுநரிடம் ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டு செயலில் உள்ள Snapchat+ சந்தா இருந்தால், அவர்களின் தற்போதைய பில்லிங் காலம் முடிவடைந்தவுடன், அவர்களிடம் செயலில் உள்ள சந்தா சலுகை இல்லாத பட்சத்தில், அதற்குப் பதிலாக சந்தா சலுகை காலாவதியாகும் போது பரிசு சந்தா தொடங்கும்; (ii) ரிடீம் செய்யும் கட்டத்தில் பெறுநரிடம் செயலில் உள்ள Snapchat+ சந்தா இல்லை என்றால், அவர்கள் பரிசு சந்தாவை ரிடீம் செய்தவுடன்; அல்லது (iii) பெருநரிடம் ஏற்கனவே பரிசு சந்தா இருந்தால், தற்போதைய பரிசு சந்தா காலாவதியாகும் போது (இந்த Snapchat+ சந்தா பரிசு விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு).
c. பிற Snapchat+ சந்தாக்கள் போலில்லாமல், பரிசு சந்தாக்கள் பெறுநர் (i) Snapchat+ சந்தா விதிமுறைகளின் படி பணம் செலுத்தப்பட்ட Snapchat+ சந்தாவை வாங்குவதன் மூலம் புதுப்பிக்கத் தேர்வு செய்தால்; அல்லது (ii) பரிசு சந்தாவை மீட்டெடுக்கும் கட்டத்தில் பணம் செலுத்தப்பட்டு செயலில் உள்ள Snapchat+ சந்தா (அந்த நேரத்தில் அவர்களின் கணக்கில் செயலில் உள்ள எந்த சந்தா சலுகைகளை பயன்படுத்தப்பட்டிருந்தாலும்) மற்றும் அவர்களின் அனைத்து ரிடீம் செய்யப்பட்ட பரிசு சந்தாக்களும் காலாவதியாகும் முன் அவர்களின் பணம் செலுத்தப்பட்ட Snapchat+ சந்தாவை ரத்து செய்யவில்லை. ஆகிய சூழல்கள் தவிர பிற நேரங்களில் பரிசு சந்தா தானாகவே புதுப்பிக்கப்படாது. பரிசு சந்தா காலாவதியாகிய பிறகு பெறுநர் அவர்களின் Snapchat+ சந்தாவை புதுப்பிக்க தேர்வு செய்தால் அல்லது பரிசு சந்தா காலாவதியாகும் முன் அவர்களின் பணம் செலுத்தப்பட்ட Snapchat+ சந்தாவை ரத்து செய்யவில்லை எனில், பரிசு சந்தா காலம் முடிந்தவுடன் Snapchat+ சந்தா விதிமுறைகளுக்கு இணங்க அவர்களின் சந்தாவிற்கு அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.
d. பெறுநர்கள் தாங்கள் பெற்ற பரிசு சந்தாக்கள் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் ஒரு நேரத்தில் ஒரு பரிசு சந்தாவை மட்டுமே ரிடீம் செய்யலாம் பரிசு சந்தாவை ரிடீம் செய்வதற்கான திறன் அதை பரிசளித்த தேதியைத் தொடர்ந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு காலாவதியாகும், அதன் பிறகு பெறுநருக்கு அது கிடைக்காது மற்றும் பரிசு சந்தா ரிடீம் செய்வதற்கு முன்பு காலாவதியாகி விட்டால் அதற்கான கட்டணத்தை திரும்ப பெறும் உரிமை உங்களுக்குக் கிடையாது. சேவை அல்லது இடைவேளைக் கட்டணங்கள் கிடையாது.
சுருக்கமாக: நீங்களும் பரிசு சந்தா பெறுநர் இருவரும் Snapchat கணக்கு வைத்திருக்க வேண்டும் மற்றும் வாங்குவதற்கு முன்பு நீங்கள் இருவரும் நண்பர்களாக இணைந்திருக்கவேண்டும். பெறுநர் தற்போதுள்ள Snapchat சந்தாவில் பாதியளவில் இருந்தால் அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரிடீம் செய்யாத பரிசு சந்தா வைத்திருந்தால், உங்கள் பரிசு சந்தாவின் தொடக்கம் மேலே அமைக்கப்பட்டுள்ள காலத்திற்கு உட்பட்டதாக இருக்கும். பரிசு சந்தாக்கள் காலாவதியானவுடன், உங்கள் பரிசு சந்தா பெறுநர் சந்தாவை ரிடீம் செய்த சமயம் Snapchat செயலில் உள்ள பணம் செலுத்திய சந்தா வைந்திருந்தால் தவிர தானாகவே புதுப்பிக்கப்படாது. ரிடீம் செய்யப்படாத பரிசு சந்தாக்கள் பரிசளித்த தேதியில் இருந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு காலாவதியாகிவிடும்.
பரிசு சந்தாக்களை எந்தவொரு நபருக்கோ அல்லது கணக்கிற்கோ மாற்ற, ஒதுக்க, மீண்டும் பரிசளிக்க அல்லது மறு விற்பனை செய்ய முடியாது மற்றும் அதைப் பரிசாகப்பெற்ற பெறுநர் மட்டுமே ரிடீம் செய்யலாம். பொருந்தும் சட்டத்திற்கு தேவைப்பட்டால் தவிர பரிசு சந்தாக்களை பணத்திற்காக திரும்ப பெற முடியாது, மாற்றமுடியாது அல்லது ரிடீம் செய்ய முடியாது. மாற்றப்பட்ட, ஒதுக்கப்பட்ட, மீண்டும் பரிசளிக்கப்பட்ட அல்லது மறுவிற்பனை செய்யப்பட்ட எந்தவொரு பரிசு சந்தாக்களும் Snap இன் சொந்த விருப்பத்தின் பேரில் செல்லாததாக்கப்படும். மோசடியாக அல்லது சட்டவிரோதமான வழிகளில் வாங்கப்பட்ட அல்லது ஏதேனும் மோசடி அல்லது சட்டவிரோத நோக்கங்களுக்காகப் வாங்கப்பட்டதாக Snap நம்பும் எந்தவொரு பரிசு சந்தாவும் Snap ஆல் தனது சொந்த விருப்பத்தின் பேரில் செல்லாததாக்கப்படும்.
சுருக்கமாக: வாங்குதலின் போது நீங்கள் ஒதுக்கும் முதல் பெறுநர் மட்டுமே பரிசு சந்தாக்களைப் பயன்படுத்தலாம் மற்றும் அதை வேறு எவருக்கும் மறுவிற்பனை செய்யவோ மாற்றவோ முடியாது. பரிசு சந்தாவை நாங்கள் செல்லாததாக்கும் அல்லது ரத்துசெய்யும் சில சூழ்நிகலைகளும் இருக்கின்றன.