PLEASE NOTE: ON FEBRUARY 1, 2025, THESE CREATOR STORIES TERMS, IF PREVIOUSLY ACCEPTED BY YOU, WILL BE AMENDED AND SUPERSEDED BY THE MONETIZATION TERMS. IF YOU DO NOT WISH TO AGREE TO THE MONETIZATION TERMS, YOU MUST STOP USING THE APPLICABLE SERVICES AND YOU WILL NO LONGER BE ELIGIBLE TO PARTICIPATE IN THE PROGRAM AS OF FEBRUARY 1, 2025.
படைப்பாளர் கதைகள் விதிமுறைகள்
செயல்படுத்தியது: 18 மார்ச், 2022
நடுவர் தீர்ப்பு அறிவிப்பு: இந்த படைப்பாளர் கதைகள் விதிமுறைகள் நடுவர் தீர்ப்பு, வர்க்கச் சார்பு-நடவடிக்கை விலக்கு, மற்றும் நடுவர் உரிமை விலக்கு விதிகள், சட்ட தேர்வு விதி, மற்றும் SNAP INC-இன் பிரத்தியேக இடத்தின் விதி, ஆகியவற்றின் மூலம் குறிப்பிடப்படுகிறது. சேவை விதிமுறைகள் அல்லது முரண்பாட்டுத் தீர்வு, நடுவர் தீர்ப்பு விதி, சட்ட தேர்வு விதி, மற்றும் Snap Group Limited சேவை விதிமுறைகளின் பிரத்தியேக இடத்தின் விதி (எது உங்களுக்குப் பொருந்துமோ) உள்ளிட்டவற்றின் மேற்கோள் மூலம் இந்த படைப்பாளர் விதிமுறைகள் சேர்க்கப்படும். நீங்கள் அமெரிக்காவில் வாழ்கிறீர்கள் என்றால் அல்லது அமெரிக்காவில் தனது பிரதான தொழிலிடத்தைக் கொண்டுள்ள தொழில் நிறுவனத்தின் சார்பாக நீங்கள் சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், பின்வருவன உங்களுக்கு பொருந்தும்: இந்த ஒப்பந்தம் SNAP INC. உடனானது. மேலும், SNAP INC. -இன் நடுவர் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட முரண்பாடுகளின் வகைகளைத் தவிர சேவை விதிமுறைகள், உங்களுக்கும் SNAP INC. நிறுவனத்திற்கும் இடையேயானவை. நமக்கு இடையேயான சர்ச்சைகள் SNAP INC. -ன் தீர்ப்பாயபிரிவில் உள்ள கட்டாயமாக பிணைக்கும் விதிகளின் படி தீர்க்கப்படும் என்பதை ஏற்கிறீர்கள், சேவை விதிமுறைகள், மேலும் நீங்களும் SNAP INC. நிறுவனமும் கூட்டு நடவடிக்கை வழக்கிலோ கூட்டு நடுவர் தீர்ப்பாய வழங்கலிலோ பங்கேற்கும் உரிமையைக் கைவிடுகிறீர்கள். நடுவர் தீர்ப்பாய உட்பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளபடி நடுவர் தீர்ப்பைத் தவிர்ப்பதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது. நீங்கள் அமெரிக்காவிற்கு வெளியே தொழிலின் முதன்மை இடத்தைக் கொண்டுள்ள தொழில் நிறுவனத்தின் சார்பாக சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், பின்வருவன உங்களுக்குப் பொருந்தும்: இந்த ஒப்பந்தம் SNAP GROUP LIMITED மற்றும் உங்களுக்கு இடையிலானது, நமக்கு இடையேயான சர்ச்சைகள் SNAP GROUP LIMITED சேவை விதிமுறைகளில் உள்ள கட்டுப்படுத்தும் நடுவர் தீர்ப்பு விதியின் படி தீர்க்கப்படும் என்பதை SNAP GROUP LIMITED ஒப்புக்கொள்கிறது.
இந்த Snap படைப்பாளர் கதைகள் விதிமுறைகள் (“படைப்பாளர் கதைகள் விதிமுறைகள்”) Snap படைப்பாளர் கதைகள் திட்டத்தில் (“திட்டம்”) உங்கள் பங்கேற்பை நிர்வகிக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் கொண்டிருக்கின்றன. "சேவை வழங்குநர்கள்" அல்லது "படைப்பாளர்கள்" என்று இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகள் முழுவதும் நாங்கள் குறிப்பிடும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்கள், Snapchat-இல் அவர்கள் சேவைகள் தொடர்பாகக் குறிப்பிட்ட செயல்களைச் செய்வதற்கும் உள்ளடக்கத்தை வழங்குவதற்கும் Snap-இலிருந்து பணம் பெறும் வாய்ப்பைப் பெற இந்தத் திட்டம் அனுமதிக்கிறது. திட்டமும், திட்டத்தின் ஒரு பகுதியாக வழங்கப்படும் ஒவ்வொரு தயாரிப்பு, சேவை மற்றும் அம்சமும், Snap Inc. சேவை விதிமுறைகளில் அல்லது Snap Group Limited சேவை விதிமுறைகளில் (எது உங்களுக்குப் பொருந்துமோ) வரையறுக்கப்பட்டுள்ளதின் படி ஒரு "சேவை" ஆகும், அத்துடன் எங்களின் சமூக வழிகாட்டுதல்கள் Crystals Payouts வழிகாட்டுதல்கள், மற்றும் சேவைகளை முறைப்படுத்தும் மற்ற ஏதாவது விதிமுறைகள், கொள்கைகள், அல்லது வழிகாட்டுதல்கள், இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளில் குறிப்பீட்டின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளைக் கவனமாகப் படிக்கவும். நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது தகவல்களை எவ்வாறு கையாளுகிறோம் என்பதை அறிய எங்கள் தனியுரிமைக் கொள்கையையும் மதிப்பாய்வு செய்க. சேவைகளை முறைப்படுத்தும் ஏதாவது மற்ற விதிமுறைகளுடன் படைப்பாளர் கதைகள் விதிமுறைகள் முரண்படும் அளவு வரை, திட்டத்தின் ஒரு பகுதியாக வழங்கப்படும் சேவைகளின் உங்கள் பயன்பாட்டுடன் தொடர்புடையதாக மட்டுமே இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகள் கட்டுப்படுத்தும். இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளில் பயன்படுத்தப்படும் ஆனால் வரையறுக்கப்படாத அனைத்து பெரிய எழுத்து சொற்களும் சேவைகளை நிர்வகிக்கும் பொருந்தக்கூடிய விதிமுறைகளில் அந்தந்த அர்த்தங்களைக் கொண்டிருக்கின்றன. இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளின் நகலை அச்சிட்டு அவற்றை உங்கள் குறிப்புக்காக வைத்துக் கொள்ளவும்.
திட்டத்தின் ஒரு பகுதியாக, படைப்புத்திறன் மிக்க நடவடிக்கைகள் மற்றும் பயனர் ஈடுபாட்டை உருவாக்கும் உள்ளடக்கத்தை ஊக்குவிக்க, ஊக்கத்தொகை மற்றும் வெகுமதி அளிக்க, ஒரு படைப்பாளராக, உங்களின் "தகுதிபெறும் நடவடிக்கையுடன்" (கீழே வரையறுக்கப்பட்டுள்ள) தொடர்புடையதாக உள்ள உங்களின் சேவைகளுக்காக நாங்கள் உங்களுக்கு பணம் வழங்கக்கூடும் (மாற்றியமைக்கப்பட்டதாகக் கீழே உள்ள, “சேவை பணம் வழங்கல்" அல்லது வெறும் "பணம் வழங்கல்" என்பதின்படி நாங்கள் உங்களுக்கு பணம் வழங்குவோம்). பணம் வழங்குவதற்காக, Snap -ஆல் அல்லது சேவைகளுடன் தொடர்புடையதாகப் பகிரப்பட்ட ஏதாவது விளம்பரங்களிலிருந்து நாங்கள் பெற்ற வருமானத்தின் ஒரு பகுதியிலிருந்து நிதி அளிக்கப்படும். தகுதிபெறும் நடவடிக்கை என்பது பின்வரும் வரைகூறுகளைப் பயன்படுத்தி எங்களால் தீர்மானிக்கப்படும்:
நீங்கள் இடுகையிடும் மற்றும் நாங்கள் விளம்பரங்களை விநியோகிக்கும் பொதுக் கதைகள், திட்டத்தில் பங்கேற்க நீங்கள் அழைக்கப்பட்டால் (அது எங்கள் சொந்த விருப்பத்திற்கு உட்பட்டது);
நாங்கள் அவ்வப்போது வழங்கக்கூடிய ஏதாவது சிறப்புத் திட்டங்களில் ("சிறப்புத் திட்டங்கள் ") உங்களின் பங்கேற்பு, மேலும், இது அத்தகைய சிறப்புத் திட்டங்களுக்காக எங்களுக்கு தேவைப்படக்கூடிய ஏதாவது கூடுதல் விதிமுறைகள் உங்களின் ஒப்புதலுக்கு உட்பட்டதாகும் (இந்த படைப்பாளர் கதைகள் விதிமுறைகளில் இது சேர்க்கப்படக்கூடும்); மற்றும்
தகுதிபெறும் நடவடிக்கை என எங்களால் அவ்வப்போது குறிப்பிடப்படும் அல்லது அங்கீகரிக்கப்படும் ஏதாவது மற்ற நடவடிக்கைகள்.
செயல்பாடு என்பது தகுதிச் செயலாக உள்ளதா என்பதைத் தீர்மானிப்பதில், "தவறான செயல்பாடு" என்று அழைப்பதை நாங்கள் விலக்கலாம். உதாரணமாக, பார்வைகளின் எண்ணிக்கையை (அல்லது உங்கள் உள்ளடக்கத்தின் பிற பார்வையாளர் அளவீடுகள்) செயற்கையாக அதிகரிக்கும் செயல்பாடு. Snap -ஆல் அதன் சொந்த விருப்பப்படி தவறான நடவடிக்கை தீர்மானிக்கப்படும், மேலும், அவை பின்வருவனவற்றை மட்டுமல்லாமல் மற்றவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கும்: (i) ஏதாவது க்ளிக்குகள், பதிவுகள் மூலம் உட்பட, ஏதாவது நபர், க்ளிக் ஃபார்ம், அல்லது அது போன்ற சேவை, பாட், தானியக்கப் ப்ரோக்ராம் அல்லது அது போன்ற சாதனம் மூலம் உருவாக்கப்பட்ட ஸ்பேம், தவறான கேள்விகள், தவறான மறுமொழிகள், தவறான லைக்குகள், தவறான பிடித்தவைகள், தவறான பின்தொடரல்கள், தவறான சந்தாக்கள், அல்லது தவறான பதிவுகள் அல்லது உங்களின் மொபைல் சாதனம், உங்களின் கட்டுப்பாட்டில் உள்ள மொபைல் சாதனங்கள், அல்லது புதிய அல்லது சந்தேகத்திற்குரிய கணக்குகளுடன் உள்ள மொபைல் சாதனம் உள்ளிட்டவற்றிலிருந்தும் தொடங்கும் மற்ற ஏதாவது நடவடிக்கை; (ii) மூன்றாம் தரப்பினரிடம் பணம் செலுத்தி அல்லது மற்ற தூண்டுதல்கள் மூலம், பொய்யான குறிப்பீடு அல்லது பார்வைகளை விற்பனை செய்வதன் மூலம் உருவாக்கப்பட்ட பதிவுகள், மறுமொழிகள், லைக்குகள், பின்தொடரல்கள், பிடித்தவைகள், சந்தாக்கள், க்ளிக்குகள், அல்லது கேள்விகள்; (iii) இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளை மீறும் நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்பட்ட அல்லது பதிவுகள், லைக்குகள், பின்தொடரல்கள், க்ளிக்குகள், கேள்விகள், பிடித்தவைகள், சப்ஸ்கிரிப்ஷன்கள், மறுமொழிகள், மற்றும் (iv) மேலே (i), (ii), அல்லது (iii) -இல் விவரிக்கப்பட்டுள்ள ஏதாவது நடவடிக்கையுடன் இணைந்த க்ளிக்குகள், லைக்குகள், பின்தொடரல்கள், சப்ஸ்க்ரிப்ஷன்கள், மறுமொழிகள், பிடித்தவைகள், கேள்விகள் அல்லது பதிவுகள்.
"கிரிஸ்டல்களைப்" பயன்படுத்துவதன் மூலம் எங்கள் உள் அமைப்புகளில் தகுதிவாய்ந்த நடவடிக்கை கணக்கிடப்படும், இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒவ்வொரு படைப்பாளர்களின் தகுதிவாய்ந்த நடவடிக்கையைக் கண்காணிக்கவும் பதிவு செய்யவும் அளவிடும் ஒரு அலகு ஆகும். தகுதிவாய்ந்த நடவடிக்கைக்காக நாங்கள் பதிவு செய்யும் கிரிஸ்டல்களின் எண்ணிக்கை எங்கள் உள் அளவைகள் மற்றும் சூத்திரங்களைப் பொறுத்து மாறுபடலாம், அவை எங்கள் விருப்பப்படி அவ்வப்போது மாற்றப்படலாம். Snapchat செயலியில் உங்களின் பயனர் தகவல் குறிப்புக்குச் செல்வதன் மூலம் உங்கள் தகுதிவாய்ந்த நடவடிக்கைக்காக நாங்கள் பதிவு செய்திருக்கும் கிரிஸ்டல்களின் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையை நீங்கள் பார்க்கலாம். உங்களின் பயனர் தகவல் குறிப்பின் மூலம் பார்க்கக்கூடிய இதுபோன்ற எண்ணிக்கைகள் எங்கள் உள் கணக்கீட்டு நோக்கங்களுக்காகக் கணக்கிடப்பட்ட ஆரம்ப மதிப்பீடுகள் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். தெளிவுபடுத்தலுக்காக, கிரிஸ்டல்கள் என்பது படைப்பாளரின் தகுதிவாய்ந்த நடவடிக்கை மற்றும் படைப்பாளரின் உள்ளடக்கத்தின் செல்வாக்கை அளவிட எங்களால் பயன்படுத்தப்படும் ஒரு உள் அளவீட்டு கருவி மட்டுமாகும். கிரிஸ்டல்கள் எந்தக் உரிமைகளையும் வழங்கவோ அல்லது எந்த கடமைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தவோ உரியதல்ல, சொத்தாக அமையாது, அவற்றை மாற்றவோ அல்லது ஒதுக்கவோ முடியாது, வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ, கைமாற்றவோ அல்லது பரிமாற்றத்திற்கோ உட்படுத்தக் கூடாது.
தகுதியுள்ள படைப்பாளர்களுக்கான கட்டணத் தொகையானது, எங்களின் தனியுரிமைக் கட்டணச் சூத்திரத்தின்படி, குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அந்த படைப்பாளரின் தகுதிச் செயல்பாட்டிற்காகப் பதிவுசெய்த கிரிஸ்டல்களின் இறுதி எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும், இது எங்களால் அவ்வப்போது சரிசெய்யப்படலாம். உங்கள் பொதுக் கதை இடுகைகளின் அதிர்வெண், உங்கள் பொதுக் கதைகளில் விநியோகிக்கப்பட்ட விளம்பரங்களின் எண்ணிக்கை மற்றும் உங்கள் பொதுக் கதைகளுடன் பயனர் ஈடுபாடு ஆகியவை உள்ளடங்கும் பல காரணிகளின் அடிப்படையில். செலுத்தப்படவேண்டிய தொகைகள், ஏதாவது இருந்தால், எங்களின் கணக்கீடுகளின் அடிப்படையில் எங்களால் தீர்மானிக்கப்படும். இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகள் மற்றும் எங்கள் மூன்றாம் தரப்பு பணம் வழங்குநரின் நடைமுறைகளுக்கு நீங்கள் இணங்கியுள்ளீர்கள் என்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நீங்கள் பெறும் பணம் உங்களின் பணம் செலுத்துதல் கணக்கிற்கு ("பணம் செலுத்துதல் கணக்கு") Snap-ன் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு பணம் வழங்குநரிடமிருந்து வழங்கப்படும். பணம்செலுத்துகைகளைப் பெறும் திறன், குறைவான எண்ணிக்கையிலான நாடுகளில் மட்டுமே கிடைக்கும், அவை Crystals Payouts வழிகாட்டுதல்களில் பட்டியலிடப்பட்டுள்ள ("தகுதியுள்ள நாடுகள்"). எந்த நேரத்திலும், தகுதியுள்ள நாடுகளின் பட்டியலில் Snap நாடுகளைச் சேர்க்கலாம் அல்லது அகற்றலாம்.
பொருந்தும் சட்டங்களால் அதிகபட்சமாக அனுமதிக்கப்படும் அளவுக்கு எங்கள் சொந்த விருப்பப்படி, முன்னறிவிப்பு இல்லாமல் அல்லது உங்களுக்குக் கடமைப்படாமல், எந்தவொரு காரணத்திற்காகவும், திட்டம் அல்லது ஏதாவது சேவைகளை எந்த நேரத்திலும் நிறுத்த, மாற்றியமைக்க, வழங்காமல் இருக்க, அல்லது வழங்குவதை அல்லது ஆதரிப்பதை நிறுத்த எங்களுக்கு உரிமை உள்ளது. மேற்கூறியவை எப்போதும் அல்லது ஏதாவது குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்கும் என்று அல்லது மேற்கூறியவற்றில் எதையாவது ஏதாவது குறிப்பிட்ட கால அளவுக்கு எங்களால் தொடர்ந்து வழங்கமுடியும் என்று எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது. எந்தக் காரணத்திற்காகவும் திட்டம் அல்லது ஏதாவது சேவையின் தொடர்ச்சியான கிடைக்கும் தன்மையை நீங்கள் சார்ந்திருக்கக் கூடாது.
இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு, பின்வரும் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் படைப்பாளிகள் மட்டுமே திட்டத்துடன் தொடர்புடைய Snap-இல் இருந்து பணம் பெறத் தகுதியுடையவர்கள்:
நீங்கள் ஒரு தனிநபராக இருந்தால், நீங்கள் ஒரு தகுதி வாய்ந்த நாட்டில் சட்டப்பூர்வமாக வசிப்பவராக இருக்க வேண்டும். கூடுதலாக, தொடர்புடைய தகுதியான நடவடிக்கை நேரிடும் நேரத்தில் ஒரு தகுதியான நாட்டில் நீங்கள் இருக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் அதிகார எல்லையில் சட்டப்பூர்வ பெரும்பான்மை வயதை எட்டியிருக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் 16 வயது இருக்க வேண்டும், மேலும், எங்கள் நடைமுறைகளுக்கு இணங்க, தேவையான பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலர் ஒப்புதலை(களை) பெற்றிருக்க வேண்டும். பொருந்தும் சட்டத்தின் கீழ்த் தேவையான பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலர் ஒப்புதல்(கள்) தேவை என்றால், உங்களின் பெற்றோர்(கள்)/சட்டப்பூர்வப் பாதுகாவலர்(கள்) மேற்பார்வையின் கீழ் மட்டுமே உங்களால் திட்டத்தில் பங்கேற்க முடியும், மேலும், இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளுக்குக் கட்டுப்படவும் அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும், மற்றும் அத்தகைய ஒப்புதல்(கள்) அனைத்தையும் நீங்கள் பெற்றுவிட்டதாகப் பிரதிநிதித்துவப்படுத்தி, உத்தரவாதம் அளிக்கிறீர்கள் (உங்களின் சட்ட எல்லையில் தேவைப்பட்டால் இரண்டு பெற்றோரின் ஒப்புதல் உட்பட). சிறார்களின் பெற்றோர் / சட்டப்பூர்வப் பாதுகாவலர் ஒப்புதலைச் சரிபார்க்க வேண்டும் என்ற உரிமையை, எங்கள் துணை அமைப்புகள் மற்றும் எங்கள் மூன்றாம் தரப்பு பணம் வழங்குநர் சார்பாக, இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளின் கீழ்ப் பணம் வழங்குவதற்கான நிபந்தனையாக நாங்கள் வைத்திருக்கிறோம்.
நீங்கள் ஒரு நிறுவனமாக அல்லது எங்களுடையதும் எங்களின் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் நபர் பணம் செலுத்துதல் வழங்குநர் நடைமுறைகளுக்கும் ஏற்ப உங்கள் பணம் செலுத்துதலை உங்கள் தொழில் நிறுவனக் கணக்கிற்கு மாற்ற அங்கீகரத்தவராக இருந்தால், நீங்களோ அதுபோன்ற நிறுவனமோ (பொருந்துவதற்கு ஏற்ப) நிறுவப்பட்டதாக, தலைமையகமுடையதாக, அல்லது தகுதி நாட்டிற்குள் ஓர் அலுவலகம் உடையவர்களாக இருக்க வேண்டும்.
Snap மற்றும் அதன் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு பணம் வழங்குநருக்கு, உங்களின் சட்டப்பூர்வமான முதல் மற்றும் கடைசி பெயர், மின்னஞ்சல், தொலைபேசி எண், மாநிலம் மற்றும் வசிக்கும் நாடும், பிறந்த தேதி ("தொடர்பு தகவல்கள்") உள்ளிட்ட முழுமையான மற்றும் துல்லியமான தொடர்பு தகவல்களை நீங்கள் வழங்கியுள்ளீர்கள், பணம் பெற நீங்கள் தகுதி பெற்றால், அல்லது ஏதாவது சட்டத் தேவையுடன் தொடர்புடையதாக, மற்றும் அவ்வப்போது தேவைப்படக்கூடிய மற்ற ஏதாவது தகவல்கள் பெற Snap அல்லது அதன் மூன்றாம் தரப்பு பணம் வழங்குநர் இந்தத் தொடர்பு தகவல்கள் மூலம் உங்களைத் தொடர்புகொண்டு உங்களுக்கு (அல்லது உங்கள் பெற்றோர் / சட்டப்பூர்வப் பாதுகாவலருக்கு(களுக்கு) அல்லது தொழில் நிறுவனத்திற்கு, பொருந்தினால்) பணம் வழங்கலாம்.
ஒரு சரியான பணம் செலுத்தல் கணக்கை நிறுவுவதற்கு அவசியமான தேவைகள் அனைத்தையும் நீங்கள் நிறைவு செய்துவிட்டீர்கள், உங்களின் Snapchat கணக்கு மற்றும் பணம் செலுத்தல் கணக்கு செயல்பாட்டில் உள்ளது, நல்ல நிலையில் உள்ளது (நாங்கள் மற்றும் எங்கள் மூன்றாம் தரப்பு பணம் வழங்குநரால் தீர்மானிக்கப்பட்டபடி) மற்றும் இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளுடன் இணங்குகிறது.
நீங்கள், அமெரிக்காவைத் தவிர வேறொரு நாட்டில் சட்டப்பூர்வமாக வசிப்பவராக இருந்தால், நீங்கள் (அல்லது அத்தகைய நிர்வாகி, இணைந்து செயல்படுபவர் அல்லது பங்களிப்பாளர்) ஏதாவது சேவைகளைச் செயல்படுத்தி, உங்களின் தகுதியான நடவடிக்கையுடன் (மேலும், கீழே விவாதிக்கப்பட்டபடி) தொடர்புடையதாக விளம்பரங்களின் பகிர்வை எளிதாக்கும்போது, நீங்கள் (அல்லது அத்தகைய நிர்வாகி, இணைந்து செயல்படுபவர் அல்லது பங்களிப்பாளர்) அமெரிக்காவுக்கு வெளியே, ஒரு தகுதியான நாட்டில் உண்மையில் இருக்க வேண்டும்.
எங்கள், அல்லது எங்கள் மூன்றாம் நபர் பணம் செலுத்துதல் வழங்குநரின் இணக்க மதிப்பாய்வில் நீங்கள் (அல்லது உங்கள் பெற்றோர்/சட்டப்பூர்வ பாதுகாவலர்(கள்) அல்லது தொழில் நிறுவனம், பொருந்துமாறு) தேர்ச்சியடையவில்லை என்றால், நீங்கள் எந்தவொரு பணம் செலுத்துதலைப் பெறுவதற்கும் தகுதி பெற மாட்டீர்கள், நாங்கள் உங்களுக்கு வழங்க வேண்டியும் இருக்காது. இந்த மதிப்பாய்வில் அமெரிக்க சிறப்பாக நியமிக்கப்பட்ட தேசியவாதிகள் பட்டியல் மற்றும் வெளிநாட்டுத் தடைகள் மீறியவர்களின் பட்டியல் உட்பட எந்தவொரு தொடர்புடைய அரசாங்க அதிகாரத்தினாலும் பராமரிக்கப்படும் தடைசெய்யப்பட்டக் கட்சிப் பட்டியலில் நீங்கள் தோன்றுகிறீர்களா என்பது போன்றவைகளும் இன்ன பிறவும் சரிபார்க்கப்பட்டுத் தீர்மானிக்கப்படும். இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ள வேறு எந்தப் பயன்பாடுகளுக்கும் மேலாக, உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், எங்களின் இணக்க மதிப்பாய்வுகளை நடத்தவும், பணம் வழங்கும் செயல்முறையை முடிக்கவும், நீங்கள் எங்களுக்கு வழங்கிய தகவல்கள் மூன்றாம் தரப்பினருடன் பகிரப்படலாம். நீங்கள் (அல்லது உங்களின் பெற்றோர்/சட்டப்பூர்வ பாதுகாவலர்(கள்) அல்லது தொழில் நிறுவனம், பொருந்துவதற்கேற்ப) மேற்கூறிய தேவைகளை எந்த நேரத்திலும் பூர்த்தி செய்யத் தவறினால், பணம் பெறுவதற்கு நீங்கள் தகுதி பெறமாட்டீர்கள். நீங்கள் (i) Snap அல்லது அதன் முன்னோடி நிறுவனம், துணை அமைப்பு நிறுவனங்கள் அல்லது இணைந்த நிறுவனங்களின் ஊழியர், அதிகாரி அல்லது இயக்குநராக இருந்தால் அல்லது (ii) ஒரு அரசு நிறுவனம், ஒரு துணை நிறுவனம் அல்லது ஒரு அரசு நிறுவனத்தின் துணை அமைப்பு அல்லது அரச குடும்பத்தின் உறுப்பினராக இருந்தால் உங்களுக்கு பணம்செலுத்துதல்கள் பெறும் தகுதி இல்லை.
இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளுடன் நீங்கள் இணங்கினால், சட்டத்தால் அனுமதிக்கப்படும் அளவிற்கு, நீங்கள் (அல்லது உங்கள் பெற்றோர்/சட்டப் பாதுகாவலர்(கள்) அல்லது வணிக நிறுவனம், பொருந்தும் வகையில்) உங்கள் பயனர் சுயவிவரத்தில் பொருத்தமான விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் கட்டணத்தைக் கோரலாம். நீங்கள் சரியான முறையில் பணம் செலுத்தக் கோர வேண்டுமானால், 100 டாலர் ("பணம் செலுத்தும் வரம்பு") குறைந்தபட்சக் கட்டண வரம்பை அடைவதற்குக் குறைந்தபட்சம் போதுமான கிரிஸ்டல்களையாவது நாங்கள் முதலில் பதிவு செய்து உங்களுக்குக் கூறியிருக்க வேண்டும்.
கவனிக்கவும்: ஒருவேளை (A) ஒரு வருடக் காலத்திற்கு உங்களிடமிருந்து எந்தவொரு தகுதிவாய்ந்த SNAP-க்கும் நாங்கள் எந்தக் கிரிஸ்டல்களையும் பதிவு செய்து கூறவில்லை என்றாலோ, அல்லது (B) இரண்டு வருடக் காலத்திற்கு உடனடியாக முந்தைய பத்திக்கு ஏற்ப நீங்கள் சரியான முறையில் பணம் கோரவில்லை என்றாலோ, பின்னர் - பொருந்தக்கூடிய காலக்கட்டத்தின் முடிவில் - பின்வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அத்தகைய காலத்தின் முடிவில் நாங்கள் பதிவுசெய்து உங்கள் தகுதிவாய்ந்த நடவடிக்கைக்கு எனக் கூறியிருந்த கிரிஸ்டல்களின் அடிப்படையில் உங்கள் பணம் செலுத்தும் கணக்கிற்கு நாங்கள் பணம் செலுத்துவோம்: (I) பணம் செலுத்தல் வரம்பை நீங்கள் எட்டிவிட்டீர்கள், (II) நீங்கள் ஒரு பணம் செலுத்தும் கணக்கை உருவாக்கியுள்ளீர்கள், (III) தேவையான அனைத்துத் தொடர்புத் தகவல்களையும், உங்களுக்குப் பணம் செலுத்துவதற்குத் தேவையான வேறு தகவல்களையும் வழங்கியுள்ளீர்கள், (IV) அத்தகைய தகுதிவாய்ந்த நடவடிக்கைக்கு நாங்கள் பதிவுசெய்து கூறியிருந்த கிரிஸ்டல்கள் தொடர்பாக நாங்கள் உங்களுக்கு இன்னும் பணம் செலுத்தவில்லை, (V) உங்கள் SNAPCHAT கணக்கு மற்றும் பணம் செலுத்தும் கணக்கு நல்ல நிலையில் உள்ளது என்றும், (VI) இல்லையெனில் நீங்கள் இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகள் மற்றும் எங்கள் மூன்றாம் நபர் பணம் வழங்குநரின் நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குகிறீர்கள். இருப்பினும், பொருந்தக்கூடிய காலக்கட்டத்தின் முடிவில், மேற்கூறிய அனைத்துத் தேவைகளையும் நீங்கள் பூர்த்தி செய்யவில்லை என்றால், அத்தகைய தகுதிவாய்ந்த SNAP(கள்) தொடர்பான எந்தவொரு பணத்தையும் நீங்கள் இனிப் பெற முடியாது.
பணம்செலுத்துதல்களை Snap சார்பாக, இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளின் கீழ்ப் பணம் வழங்குபவராகச் செயல்படக்கூடிய கிளை அல்லது துணை அமைப்பு நிறுவனங்கள் அல்லது பிற அங்கீகாரம் பெற்ற மூன்றாம் நபர் பணம் வழங்குநர்கள் உங்களுக்கு வழங்கலாம். Snap-இன் கட்டுப்பாட்டில் இல்லாத எந்தவொரு காரணத்துக்காகவும் உங்கள் பணம் செலுத்துதல் கணக்குக்குச் சேவைப் பணம் வழங்கல்களைப் பரிமாற்றம் செய்வதில் எந்தத் தாமதமோ, தோல்வியோ, சாத்தியமின்மையோ ஏற்பட்டால், அதற்கு Snap பொறுப்பேற்காது, இதில், இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகள் அல்லது எங்களின் மூன்றாம் தரப்பு பணம் வழங்குநர் விதிமுறைகளுக்கு நீங்கள் இணங்காமலிருப்பதும் உள்ளடங்கும். உங்களின் தகுதியான நடவடிக்கைக்கு நாங்கள் பதிவு செய்து கூறியுள்ள ஏதாவது கிரிஸ்டல்களின் அடிப்படையில் உங்களை (அல்லது உங்களின் பெற்றோர்/சட்டப்பூர்வ பாதுகாவலர்(கள்), பொருந்துமாறு) தவிர வேறு யாராவது உங்களின் Snapchat கணக்கைப் பயன்படுத்திப் பணம் செலுத்தலைக் கோரினால் அல்லது உங்களின் பணம் செலுத்தல் கணக்கின் தகவல்களைப் பயன்படுத்தி, உங்களுக்குச் செலுத்தப்பட்ட பணத்தை உரிமை மாற்றம் செய்தால், அதற்கு Snap பொறுப்பாகாது. பணம் வழங்கலானது அமெரிக்க டாலர்களில் நிகழ்த்தப்படும், ஆனால், நீங்கள் உங்களுடைய உள்ளூர் நாணயத்தில் உங்கள் பணம் வழங்கல் கணக்கிலிருந்து நிதியை எடுக்கத் தேர்ந்தெடுக்கலாம், இதற்கு, Crystals Payouts வழிகாட்டுதல்களில், மற்றும் எங்கள் மூன்றாம் நபர் பணம் வழங்குநரின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, மேலும் விவரிக்கப்பட்டுள்ளபடி, பயன்பாட்டு, நாணய மாற்ற மற்றும் பரிமாற்றக் கட்டணங்கள் பொருந்தும். Snapchat செயலியில் காட்டப்பட்ட எந்தவொரு பணம்செலுத்துதல் தொகைகளும் தோராயமான மதிப்புகளே மேலும் மாற்றத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு பணம்செலுத்துதலின் இறுதித் தொகைகள் உங்கள் பணம்செலுத்துதல் கணக்கில் பிரதிபலிக்கும்.
எங்கள் பிற உரிமைகள் மற்றும் தீர்வுகளுக்கு மேலதிகமாக, சந்தேகத்திற்குரிய தவறான செயல்பாட்டிற்காக, இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதற்காக, தவறுதலாக உங்களுக்குக் கூடுதல் பணம் செலுத்தப்பட்டால், எச்சரிக்கை அல்லது முன்னறிவிப்பு இன்றி, சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு, இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளின் கீழ் உங்களுக்கான எந்தவொரு பணம் செலுத்துதல்களையும் நாங்கள் நிறுத்தி வைக்கலாம், ஈடு செய்யலாம், சரிசெய்யலாம், விலக்கி வைக்கலாம் அல்லது வேறு எந்த ஒப்பந்தத்தின் கீழும் நீங்கள் எங்களுக்குச் செலுத்த வேண்டிய எந்தவொரு கட்டணத்திற்குப் பதிலாகவும் அந்தத் தொகையை ஈடு செய்யலாம். எங்களுக்கு அல்லது எங்களின் கிளை நிறுவனங்கள், துணை அமைப்புகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பணம் செலுத்தல் வழங்குநருக்கு நீங்கள் வழங்கிய தகவல்கள் அனைத்தும், உண்மையானது மற்றும் துல்லியமானது என்றும், எப்போதும் அத்தகைய தகவலின் துல்லியத்தைப் பராமரிப்பீர்கள் என்றும் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தி உத்தரவாதம் அளிக்கிறீர்கள்.
இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளுடன் தொடர்புடையதாக நீங்கள் பெறும் எந்தவொரு பணம்செலுத்துதல்களுக்கும் அதனுடன் தொடர்புள்ள எந்தவொரு அல்லது அனைத்து வரிகள், சுங்கத் தீர்வுகள் அல்லது கட்டணங்களுக்கும் உங்களுக்கு முழுப் பொறுப்பு மற்றும் கடப்பாடு உள்ளது என்பதை நீங்கள் உடன்பட்டு ஒப்புக்கொள்கிறீர்கள். உங்களுக்கு வழங்க வேண்டிய பணம்செலுத்துதல்கள், எந்தவொரு பொருந்தக்கூடிய விற்பனை, பயன்பாட்டு, கலால், மதிப்புக் கூட்டப்பட்ட, பொருட்கள் மற்றும் சேவைகள் அல்லது இவை போன்ற வரிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஏதாவது பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ், உங்களுக்கு எந்தவொரு பணம்செலுத்துதல்களின் போதும் வரிகளைக் கழிக்க வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும் என்றால், Snap, அதன் தொடர்புடைய நிறுவனங்கள் அல்லது அதன் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்புப் பணம் வழங்குநர், அத்தகைய வரிகளை உங்களுக்கு செலுத்த வேண்டியத் தொகையிலிருந்து கழித்துத் தேவைப்படும் பொருந்தக்கூடிய சட்டத்தின்படி உரிய வரிவிதிப்பு அதிகாரிகளிடம் செலுத்தலாம். அத்தகைய பிடித்தங்கள் அல்லது நிறுத்துதல்களால் குறைக்கப்பட்டு வழங்கப்படும் பணம், இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளின் கீழ் உங்களுக்கு வழங்க வேண்டிய மொத்தப் பணம் மற்றும் தீர்வுத் தொகையாகச் சேர்ந்து அமையும். இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளின் படி, நீங்கள் Snap, அதன் துணை அமைப்புகள், தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட பணம் வழங்குநருக்கும், புகார் அளிக்கவும் வரி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கும், எந்தவொரு தகவலையும் நிறைவு செய்யத் தேவையான படிவங்கள், ஆவணங்கள் மற்றும் பிற சான்றிதழ்களையும் தருவீர்கள்.
Snap Inc. சேவை விதிமுறைகள் அல்லது Snap Group Limited சேவை விதிமுறைகளில் (எது உங்களுக்குப் பொருந்துமோ) கூறியுள்ளதைப் போல, சேவைகள் விளம்பரங்களைக் கொண்டிருக்கக்கூடும். திட்டத்தில் உங்களின் பங்கேற்புடன் தொடர்புடையதாக, எங்களின் சுய விருப்பத்தின்படி திட்டத்தின் ஒரு பகுதியாக நீங்கள் சமர்ப்பிக்கும் உள்ளடக்கத்துடன் தொடர்புடையதாக உங்களிடமிருந்து எந்தவொரு தொகையையும் பெறாமல், விளம்பரத்தைப் பகிர, எங்களை, எங்களின் துணை அமைப்புகளை, மற்றும் எங்களின் மூன்றாம் தரப்பு கூட்டாளர்களை நீங்கள் ஈடுபடுத்துவதாக ஒப்புக்கொள்கிறீர்கள். இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளுக்கு ஒப்புக்கொண்டு, இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக நீங்கள் சமர்ப்பிக்கும் எந்தவொரு உள்ளடக்கத்திற்குமான அணுகலை தொடர்ந்து Snap இற்கு வழங்குவதன் மூலம், அத்தகைய விளம்பரங்களின் பகிர்வை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். எங்களின் விருப்பப்படி, இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நீங்கள் சமர்ப்பித்த ஏதாவது உள்ளடக்கத்துடன் தொடர்புடையதாகப் பகிரப்பட்ட விளம்பரங்களின் வகை, வடிவம் மற்றும் நிகழ்வெண்ணிக்கை உட்பட, சேவைகளில் பகிரப்படும் விளம்பரங்கள் ஏதாவது இருந்தால் அவற்றின் அனைத்து அம்சங்களையும் நாங்கள் தீர்மானிப்போம். எந்தவொரு காரணத்துக்காகவும், உங்களின் உள்ளடக்கத்தில், அவற்றுக்குள் அல்லது அவற்றின் பக்கத்தில் விளம்பரங்களைக் காட்டவேண்டாம் என்று எங்கள் விருப்பத்தின்படி தீர்மானிக்கும் உரிமையும் எங்களுக்கு உள்ளது.
மற்ற ஏதாவது உரிமைகள் அல்லது தீர்வுகளுடன் சேர்த்து, சேவைகளின் மூலம் உங்களின் உள்ளடக்கத்தின் பகிர்வை, ஏதாவது அல்லது அனைத்து சேவைகளை, அல்லது மேற்கூறியவற்றின் உங்கள் அணுகலை நீக்க அல்லது இடைநிறுத்த எங்களுக்கு உரிமை உள்ளது. இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளுக்கு நீங்கள் இணங்காத நிகழ்வில், இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளின் கீழ் எந்தப் பணம் வழங்கலையும் நிறுத்தி வைப்பதற்கான (மேலும் நீங்கள் பெறுவதற்குத் தகுதி பெறமாட்டீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்) உரிமையை நாங்கள் வைத்திருக்கிறோம். இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளின் எந்தப் பகுதியையும் நீங்கள் எந்த நேரத்திலும் ஏற்கவில்லை என்றால், பொருந்தக்கூடிய சேவைகளைப் பயன்படுத்துவதையும் திட்டத்தில் பங்கேற்பதையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.
உங்களின் Snapchat பயனர் கணக்கின் கீழ்த் துணை கணக்குகளை உருவாக்கி நிர்வகிக்க உங்களை நாங்கள் அனுமதிக்கக்கூடும், அல்லது உங்களின் Snapchat பயனர் கணக்கில் உள்ளடக்கத்தை இடுகையிடுவதற்கான அணுகலைச் சேவையின் மற்ற பயனர்களுக்கு வழங்க உங்களை அனுமதிக்கக்கூடும். உங்கள் கணக்குகளின் அணுகல் அளவுகளை அமைப்பதும் திரும்பப்பெறுவதும் உங்களின் பொறுப்பாகும், மேலும், அதன் விளைவாக, நிர்வாகிகள், கூட்டுப்பணியாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்களின் ஏதாவது நடவடிக்கை உட்பட, உங்கள் கணக்கில் தோன்றும் அனைத்து உள்ளடக்கம் மற்றும் நடவடிக்கைக்கும் நீங்கள் தான் பொறுப்பாவீர்கள். அவ்வப்போது, இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளை நாங்கள் திருத்தலாம். இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகள் கடைசியாக எப்போது திருத்தப்பட்டன என்பதை மேலே உள்ள "நடைமுறைப்படுத்திய" தேதியைப் பார்ப்பதன் மூலம் நீங்கள் தீர்மானிக்கலாம். இதுபோன்ற விதிமுறைகளின் மிகச் சமீபத்திய பதிப்பை நீங்கள் நன்கு அறிந்திருப்பதை உறுதிசெய்ய, ஏதேனும் புதுப்பிப்புகள் உட்பட, இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளை தவறாமல் மதிப்பாய்வு செய்வதை ஒப்புக்கொள்கிறீர்கள். "நடைமுறைப்படுத்திய" தேதியைத் தொடர்ந்து சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், புதுப்பிக்கப்பட்ட படைப்பாளர் கதைகள் விதிமுறைகளை நீங்கள் ஒப்புக்கொண்டதாகக் கருதப்படும். இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகள் எந்த மூன்றாம் தரப்பு பயனாளி உரிமைகளையும் உருவாக்கவோ வழங்கவோ இல்லை. உங்களுக்கும் Snap அல்லது Snap இன் துணை நிறுவனங்களுக்கும் இடையிலான கூட்டு முயற்சி, முதன்மை முகவர் அல்லது வேலைவாய்ப்பு உறவைக் குறிக்கும் வகையில் இந்தப் படைப்பாளர் கதைகளின் விதிமுறைகள் எதுவும் கருதப்படாது. இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளில் ஒரு விதியை நாங்கள் அமல்படுத்தவில்லை என்றால், அது தள்ளுபடியாகக் கருதப்படாது. நாங்கள், உங்களுக்கு வெளிப்படையாக வழங்கப்படாத பிற எல்லா உரிமைகளையும் கொண்டுள்ளோம். இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளில் ஏதேனும் விதிகள் செயல்படுத்த முடியாததாகக் கண்டறியப்பட்டால், அந்த விதி துண்டிக்கப்படும், மேலும் மீதமுள்ள எந்த விதிகளின் செல்லுபடியையும் அமலாக்கத்தையும் பாதிக்காது.
இந்தப் படைப்பாளர் கதைகள் விதிமுறைகள் பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களைத் தொடர்பு கொள்ளவும்.