இந்த Snap பணமாக்கல் விதிமுறைகள் படைப்பாளர் கதைகள் விதிமுறைகளை(நீங்கள் அவற்றை ஏற்றுக்கொண்டிருந்தால்) பதிலீடு செய்து மாற்றீடு செய்யும், இவை பிப்ரவரி 1, 2025 அன்று நடைமுறைக்கு வரும்.

Snap பணமாக்கல் விதிமுறைகள்

செயல்திறனான தேதி: பிப்ரவரி 1, 2025

நடுவர் தீர்ப்பாய அறிவிப்பு: நீங்கள் அமெரிக்காவில் வசிக்கிறீர்கள் அல்லது உங்கள் தொழிலின் தலைமை அலுவலகம் அமெரிக்காவில் உள்ளது எனில், நீங்கள் SNAP INC. நிறுவனத்தால் அமைக்கப்பட்ட நடுவர் தீர்ப்பாய விதிகளால் கட்டுப்படுத்தப்படுகிறீர்கள். சேவை நிபந்தனைகள்: நடுவர் தீர்ப்பாயப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள சில முரண்பாடுகளைத் தவிர்த்து, நீங்கள் மற்றும் SNAP INC. நிறுவனம், நமக்கு இடையேயான முரண்பாடுகளைக் கட்டாயமாகப் பிணைக்கும் நடுவர் தீர்ப்பாயம் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என ஒப்புக் கொள்கிறீர்கள், இது SNAP INC. சேவை நிபந்தனைகளில் வரையறுக்கப்பட்டுள்ளது , நீங்கள் மற்றும் SNAP INC. பிரதிநிதித்துவ நடவடிக்கை வழக்கு அல்லது பிரதிநிதித்துவ நடுவர் தீர்ப்பில் பங்கேற்கும் உரிமையைக் கைவிடுகிறீர்கள். நீங்கள் நடுவர் தீர்ப்பில் இருந்து விலகும் உரிமையும் கொண்டுள்ளீர்கள், இது நடுவர் தீர்ப்பு விதிகளில் விளக்கப்பட்டுள்ளது.   

நீங்கள் ஒரு தொழில் சார்பாகச் செயல்படுகிறீர்கள் மற்றும் உங்கள் தொழிலின் தலைமை அலுவலகம் அமெரிக்காவிற்கு வெளியில் உள்ளது எனில், உங்கள் தொழில் நடுவர் தீர்ப்பு விதிகளுக்குக் கட்டுப்பட்டதாகும் இது SNAP GROUP LIMITED சேவை நிபந்தனைகளில் இடம்பெற்றுள்ளது.

அறிமுகம்

நல்வரவு!  Snapஇன் பணமாக்கல் திட்டம் (“திட்டம்”) குறித்து அறிந்துகொள்ள நீங்கள் ஆர்வம் கொண்டிருப்பதைக் கொண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தத் திட்டத்தில் அனுமதிக்கப்படும் தகுதிபெறும் பயனர்கள் பணமாக்கல் விதிமுறைகள் மூலம் வரையறுக்கப்படும் சில குறிப்பிட்ட சேவைகளை வழங்குவதற்கு ஈடாகப் பணப் பலன்களைப் பெற இத்திட்டம் உதவுகிறது, நாங்கள் இவற்றைத் “தகுதிபெறும் நடவடிக்கை” என வரையறுத்து, கீழே விவரித்துள்ளோம். இத்திட்டத்தில் உங்கள் பங்கேற்புக்குப் பொருந்தும் மற்றும் அதை நிர்வகிக்கும் விதிமுறைகளை நீங்கள் அறிந்து கொள்ள இந்தப் பணமாக்கல் விதிமுறைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்தப் பணமாக்கல் விதிமுறைகள் உங்களுக்கும் கீழே பட்டியலிடப்படும் Snap நிறுவனத்துக்கும் ("Snap") இடையே சட்டரீதியாகப் பிணைக்கப்பட்ட ஒப்பந்தத்தை உருவாக்குகிறது, எனவே தயவுசெய்து அவற்றைக் கவனமாகப் படியுங்கள். இந்தப் பணமாக்கல் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு அவற்றிற்கு இணங்கும் பயனர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பங்கேற்கத் தகுதி பெறுவார்கள்.

இந்தப் பணமாக்கல் விதிமுறைகளின் நோக்கத்திற்காக, “Snap” என்பது இவற்றைக் குறிக்கும்: 

  • நீங்கள் அமெரிக்காவில் வசிக்கிறீர்கள் அல்லது உங்கள் தொழிலின் தலைமை அலுவலகம் அமெரிக்காவில் அமைந்துள்ளது எனில், Snap Inc.;

  • நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள் அல்லது உங்கள் தொழிலின் தலைமை அலுவலகம் இந்தியாவில் அமைந்துள்ளது எனில், Snap India Camera Private Limited;

  • நீங்கள் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வசிக்கிறீர்கள் அல்லது உங்கள் தொழிலின் தலைமை அலுவலகம் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ளது (இந்தியாவைத் தவிர்த்து) எனில், Snap Group Limited சிங்கப்பூர் கிளை; அல்லது

  • இவற்றைத் தவிர்த்து உலகின் பிற பகுதிகளில் வசிக்கிறீர்கள் அல்லது உங்கள் தொழிலின் தலைமை அலுவலகம் பிற பகுதிகளில் அமைந்துள்ளது எனில், Snap Group Limited.

இந்தப் பணமாக்கல் விதிமுறைகளில் Snap சேவை நிபந்தனைகள்சமூக வழிகாட்டுதல்கள், பரிந்துரைத்தல் தகுதிக்கான உள்ளடக்க வழிகாட்டுதல்கள், Snapchatஇல் இசை வழிகாட்டுதல்கள், படைப்பாளர் பணமாக்கல் கொள்கை, வணிக உள்ளடக்கக் கொள்கை, விளம்பரப்படுத்தல் விதிமுறைகள் மற்றும் பிற பொருந்தும் விதிமுறைகள், வழிகாட்டுதல்கள், கொள்கைகள் ஆகியவை பார்வை ஆவணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தப் பணமாக்கல் விதிமுறைகள் வேறு எந்த விதிமுறைகளுடன் முரண்படும் இடங்களில், இத்திட்டத்தில் உங்கள் பங்கேற்பு தொடர்பான விவகாரங்கள் இந்தப் பணமாக்கல் விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்படும். Snap சேவை நிபந்தனைகளில் வரையறுக்கப்பட்ட படி இத்திட்டம் Snap "சேவைகளின்" ஒரு பகுதியாகும். இந்தப் பணமாக்கல் விதிமுறைகளில் பெரிய எழுத்தில் பயன்படுத்தப்பட்ட, ஆனால் இங்கு வரையறுக்கப்படாத அனைத்துத் தொடர்களும் Snap சேவை நிபந்தனைகள் அல்லது அந்தச் சேவைகளை நிர்வகிக்கும் பொருந்தும் விதிமுறைகளில் அவற்றிற்குக் கொடுக்கப்பட்ட பொருளைக் கொண்டிருக்கும். இந்தப் பணமாக்கல் விதிமுறைகளை மீறும் எந்தவொரு கணக்கு அல்லது உள்ளடக்கமும் பணமாக்கலுக்குத் தகுதிபெறாது.

இந்தப் பணமாக்கல் விதிமுறைகளின் சுருக்கங்களை நாங்கள் வழங்கும் இடங்களில், உங்கள் வசதிக்காக மட்டுமே அவற்றை வழங்கியுள்ளோம். உங்கள் சட்டரீதியான உரிமைகள், கடமைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள இந்தப் பணமாக்கல் விதிமுறைகளை நீங்கள் முழுமையாகப் படிக்க வேண்டும்.

1. குறைந்தபட்சத் தகுதி

இத்திட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்கலாம். அழைப்புக்குத் தகுதிபெற, நீங்கள் பின்வரும் குறைந்தபட்சத் தகுதி வரையறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் (“குறைந்தபட்சத் தகுதி”):

  1. (தனிநபர் எனில்) தகுதிபெற்ற பிராந்தியத்தில் வசிக்க வேண்டும் அல்லது (நிறுவனம் எனில்) உங்கள் தொழிலின் தலைமை அலுவலகம் தகுதிபெற்ற பிராந்தியத்தில் இருக்க வேண்டும். Crystals Payouts வழிகாட்டுதல்களில் பட்டியலிடப்பட்ட பிராந்தியங்களில் மட்டுமே பண வழங்கல்கள் கிடைக்கின்றன (“தகுதிபெற்ற பிராந்தியங்கள்”). தகுதிபெற்ற பிராந்தியங்களின் பட்டியலை எங்கள் விருப்பப்படி மாற்றியமைக்கலாம்.

  2. நீங்கள் தனிநபர் எனில், குறைந்தபட்சம் உங்கள் அதிகார எல்லைப் பகுதியில் சட்டரீதியான, வயது வந்தவராக இருக்க வேண்டும் (அல்லது பொருந்தினால், பெற்றோர் ஒப்புதல் உடன் குறைந்தபட்சம் 16 வயதுடையவராக இருக்க வேண்டும்). பொருந்தும் சட்டத்தின் கீழ் பெற்றோர் அல்லது சட்டரீதியான பாதுகாவலரின் ஒப்புதல்(கள்) தேவை எனில், நீங்கள் உங்கள் பெற்றோர்/சட்டரீதியான பாதுகாவலர்(கள்) மேற்பார்வையில் மட்டுமே இத்திட்டத்தில் பங்கேற்கலாம், அவர்களும் இந்தப் பணமாக்கல் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட ஒப்புக் கொள்ள வேண்டும். அத்தகைய ஒப்புதல்(கள்) அனைத்தையும் பெற்றுள்ளீர்கள் (உங்கள் அதிகார எல்லையில் தேவைப்பட்டால், பெற்றோர் இருவரின் ஒப்புதல் உட்பட) என்று நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தி உத்திரவாதமளிக்கிறீர்கள். 

  3. நீங்கள் ஒரு நிறுவனத்தின் சார்பாகச் செயல்படுகிறீர்கள் எனில், குறைந்தபட்சம் 18 வயதுடையவராக இருக்க வேண்டும் (அல்லது உங்கள் மாநிலம், மாகாணம் அல்லது நாட்டில் சட்டரீதியான உரிமை வயது) மற்றும் அந்த நிறுவனத்தின் சார்பாகச் சட்டரீதியாக ஒப்புதலளிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும். இந்தப் பணமாக்கல் விதிமுறைகளில் உள்ள "நீங்கள்" மற்றும் "உங்கள்" என்னும் குறிப்புகள் அனைத்தும் இறுதிப் பயனராக உங்களையும் அந்த நிறுவனத்தையும் என இருவரையும் குறிப்பதாக இருக்கும்.

  4. துல்லியமான, சமீபத்திய தொடர்புத் தகவல்கள் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளது) மற்றும் உங்களுக்குப் பணம் செலுத்தல் வழங்கத் தேவைப்படும் பிற தகவல்களை Snap மற்றும் அதன் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு பணம் செலுத்தல் சேவை வழங்குநருக்கு ("பணம் செலுத்தல் சேவை வழங்குநர்) நீங்கள் வழங்க வேண்டும். இங்கு பயன்படுத்தப்படும் “தொடர்புத் தகவல்கள்” என்பது உங்கள் சட்டப்பூர்வ முதல் பெயர் மற்றும் கடைசிப் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், வசிக்கும் மாநிலமும் நாடும் மற்றும் அவ்வப்போது தேவைப்படக்கூடிய பிற தகவல்களைக் குறிக்கும், இவற்றைப் பயன்படுத்தி Snap அல்லது அதன் பணம் செலுத்தல் சேவை வழங்குநர் உங்களைத் தொடர்புகொள்ளலாம் மற்றும் இந்த விதிமுறைகளின் கீழ் அல்லது ஏதேனும் சட்டத்தேவைகளின் கீழ் நீங்கள் பணம் செலுத்துதலுக்கு தகுதிபெற்றால் உங்களுக்கு (பொருந்தினால், உங்கள் பெற்றோர்/சட்டப்பூர்வப் பாதுகாவலர் அல்லது வணிக நிறுவனத்திற்கு) பணத்தை செலுத்தலாம்.

  5. எங்கள் பண வழங்கல் சேவை வழங்குநரிடம் செல்லுபடியாகும், பணம் பெறும் கணக்கை ("பேமெண்ட் கணக்கு") அமைக்கத் தேவையான அனைத்துத் தேவைகளையும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

  6. உங்கள் Snapchat கணக்கும் பணம் பெறும் கணக்கும் செயல்பாட்டில், நல்ல நிலையில் (எங்களால் தீர்மானிக்கப்பட்ட படி), எல்லா நேரங்களிலும் இந்தப் பணமாக்கல் விதிமுறைகளுடன் இணங்குவதாக இருக்க வேண்டும்.

  7. Snap மற்றும் எங்கள் பேமெண்ட் பண செலுத்தும் வழங்குநரின் இணக்க மீளாய்வில் நீங்கள் (அல்லது உங்கள் பெற்றோர்/பாதுகாவலர்(கள்), பொருந்தினால்) தேர்ச்சி பெற வேண்டும்.

  8. நீங்கள் (i) Snap அல்லது தாய் நிறுவனம், துணை நிறுவனங்கள், சார்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் ஊழியராக, அதிகாரியாக அல்லது இயக்குநராக இருக்கக்கூடாது; அல்லது (ii) அரசாங்க நிறுவனம், அரசாங்க நிறுவனத்தின் துணை நிறுவனம் அல்லது சார்பு நிறுவனமாக அல்லது அரச குடும்பத்தின் உறுப்பினராக இருக்கக்கூடாது. 

நீங்கள் குறைந்தபட்சத் தகுதி வரையறைகளைப் பூர்த்தி செய்கிறீர்கள் என்பதைச் சரிபார்க்கத் தேவையான எந்தத் தகவல்களைக் கோரவும் நாங்கள் உரிமை கொண்டுள்ளோம். குறைந்தபட்சத் தகுதி வரையறைகளைப் பூர்த்தி செய்வது, திட்டத்தில் பங்கேற்பதற்கான உங்கள் அழைப்பு அல்லது உங்கள் தொடர் பங்கேற்புக்கு உத்தரவாதம் அளிக்காது. பணமாக்கல் திட்டத்தில் இருந்து எந்தப் பயனரையும் எப்போது வேண்டுமானாலும் எந்தக் காரணத்திற்காகவும் நீக்க நாங்கள் உரிமை கொண்டுள்ளோம்.

சுருக்கமாக: அழைப்பு மூலம் மட்டுமே திட்டத்தில் பங்கேற்க முடியும். திட்டத்திற்கான அழைப்பைப் பெற நீங்கள் குறைந்தபட்சத் தகுதி வரையறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.  இதில் வயது, இருப்பிடம், பெற்றோர் ஒப்புதல், குறிப்பிட்ட கணக்குத் தேவைகள் போன்றவையும் அடங்கும். இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வது உங்கள் அழைப்புக்கு உத்திரவாதம் அளிக்காது. நீங்கள் உண்மையான மற்றும் சமீபத்திய தகவல்களை எங்களுக்கு வழங்க வேண்டும், எல்லா நேரங்களிலும் இந்தப் பணமாக்கல் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். 

2. தகுதிபெறும் நடவடிக்கை

நீங்கள் குறைந்தபட்சத் தகுதி வரையறைகளைப் பூர்த்தி செய்து திட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டால், இங்கு விவரிக்கப்பட்ட சேவைகளைச் செய்ததற்காக Snap உங்களுக்கு வெகுமதியளிக்கலாம் (தகுதிபெறும் நடவடிக்கை”).  அதுபோன்ற பணம் வழங்கலுக்கு ("பண வழங்கல்") Snap -ஆல் அல்லது சேவைகளுடன் தொடர்புடையதாகப் பகிரப்பட்ட விளம்பரங்களிலிருந்து நாங்கள் பெற்ற வருமானத்தின் ஒரு பகுதியிலிருந்து நிதி அளிக்கப்படும்.

தகுதிபெறும் நடவடிக்கை என்பதில் பின்வருனவும் அடங்கலாம்:

  • நாங்கள் விளம்பரங்களை விநியோகிக்கும் வகையிலான பொது உள்ளடக்கத்தைப் பகிர்தல்; அல்லது

  • நாங்கள் கட்டாயமாக்கும் கூடுதல் விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக் கொள்வதற்கு உட்பட்டு (அவை இந்தப் பணமாக்கல் விதிமுறைகளில் இணைக்கப்படும்) தகுதிபெறும் நடவடிக்கை என நாங்கள் குறிப்பிடும் ஏதேனும் பிற நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.

தகுதிபெறும் நடவடிக்கை என்பது Snapஆல் தனது விருப்பப்படி தீர்மானிக்கப்படும். “பொது உள்ளடக்கம்” என்பது Snap சேவை நிபந்தனைகளில் வரையறுக்கப்பட்ட பொருளைக் கொண்டிருக்கும். அத்துடன், சேவைகளில் நீங்கள் பதிவிடும் உள்ளடக்கம் பரிந்துரை நெறிமுறைக்கு தகுதிபெற, அது எங்கள் பரிந்துரைத்தல் தகுதிக்கான உள்ளடக்க வழிகாட்டுதல்களுடன் இணங்க வேண்டும். எங்கள் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுடன் இணங்குகிறதா என உங்கள் கணக்கு மற்றும் உள்ளடக்கத்தை நாங்கள் மதிப்பாய்வு செய்யலாம். தெளிவுபடுத்துவதற்காக, Snap சேவை நிபந்தனைகள்படி Snapchatஇல் நீங்கள் பதிவிடும் உள்ளடக்கத்தை விநியோகிக்க Snap உரிமை கொண்டுள்ளது ஆனால் அது எங்கள் கடமையல்ல. எப்போது வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் Snapகளை நீக்கலாம். 

சுருக்கமாக: குறிப்பிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக நாங்கள் உங்களுக்கு வெகுமதியளிக்கலாம். நீங்கள் எங்களுக்கு வழங்கும் உரிமைகளும், நீங்கள் பதிவிடும் பொது உள்ளடக்கம் தொடர்பான உங்கள் கடமைகளும் இந்த ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளன:சேவை நிபந்தனைகள் மற்றும் பரிந்துரைத்தல் தகுதிக்கான உள்ளடக்க வழிகாட்டுதல்கள். உங்கள் நடவடிக்கைகள், கணக்கு, நீங்கள் பதிவிடும் உள்ளடக்கம் ஆகியவை எங்கள் விதிமுறைகள், கொள்கைகள் மற்றும் வழிகாட்டுல்களுக்கு எப்போதும் இணங்க வேண்டும். உங்கள் கணக்கும் நீங்கள் பதிவிடும் உள்ளடக்கமும் இணங்குகிறதா என்பதை உறுதிப்படுத்த நாங்கள் அவற்றை மீளாய்வு செய்யலாம்.  Snapchatஇல் நீங்கள் பதிவிடும் உள்ளடக்கத்தை விநியோகிக்க வேண்டும் என்று நாங்கள் எந்தக் கடமையும் கொண்டிருக்கவில்லை, நீங்கள் அந்த உள்ளடக்கத்தை எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம்.

3. பண வழங்கல்கள்

தகுதிபெறும் நடவடிக்கையைக் கண்காணித்தல்.  உங்கள் தகுதிபெறும் நடவடிக்கையைப் “படிகங்களைப்” பயன்படுத்தி நாங்கள் கண்காணிக்கிறோம், இது குறிப்பிட்ட காலப்பகுதியில் படைப்பாளரின் தகுதிபெறும் நடவடிக்கையைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் உள் அளவீட்டு அலகு ஆகும். தகுதிபெறும் நடவடிக்கையை நாங்கள் கண்காணித்து அதற்காகப் பதிவுசெய்யும் படிகங்களின் எண்ணிக்கை எங்கள் உள்ளா்ந்த வரையறைகள் மற்றும் சூத்திரங்களைப் பொறுத்து மாறுபடலாம், எங்கள் தனிப்பட்ட விருப்பப்படி இவற்றை அவ்வப்போது மாற்றியமைக்கிறோம். Snapchat செயலியில் உங்களின் பயனர் தகவல் பக்கத்திற்குச் சென்று உங்களின் தகுதிபெறும் நடவடிக்கைக்காக நாங்கள் பதிவு செய்திருக்கும் படிகங்களின் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையை நீங்கள் பார்க்கலாம். உங்களின் பயனர் தகவல் பக்கத்தில் நீங்கள் பார்க்கக்கூடிய இதுபோன்ற எண்ணிக்கைகள் எங்கள் உள்ளார்ந்த கணக்கீட்டு நோக்கங்களுக்காகக் கணக்கிடப்பட்ட ஆரம்ப மதிப்பீடுகள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். 

தெளிவுபடுத்துவதற்காக, படிகங்கள் என்பது எங்களால் பயன்படுத்தப்படும் உள்ளார்ந்த அளவீட்டுக் கருவி மட்டுமே. படிகங்கள் என்பது ஏதேனும் உரிமைகளை வழங்குவதற்கோ அல்லது ஏதேனும் கடமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கோ உரியதல்ல, இவை சொத்தாகவும் கருதப்படாது, இவற்றை மாற்றவோ அல்லது ஒதுக்கீடு செய்யவோ, வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ, கைமாற்றவோ அல்லது பரிமாற்றம் செய்யவோ முடியாது.

தகுதிபெறும் நடவடிக்கைக்கான பண வழங்கல் தொகை எங்கள் தனியுரிமையான பண வழங்கல் சூத்திரத்தின்படி அந்தத் தகுதிபெறும் நடவடிக்கைக்காக நாங்கள் பதிவு செய்துள்ள படிகங்களின் இறுதி எண்ணிக்கையைப் பொறுத்து எங்களால் தீர்மானிக்கப்படும். எங்கள் பண வழங்கல் சூத்திரம் எங்களால் அவ்வப்போது திருத்தப்படலாம், இது பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டதாகும், இதில் உங்கள் பதிவுகளின் கால இடைவெளி மற்றும் நேரம், நீங்கள் பதிவிடும் உள்ளடக்கம் வழியாக விநியோகிக்கப்படும் விளம்பரங்களின் எண்ணிக்கை, அந்த உள்ளடக்கத்தின் பயனர் ஈடுபாடு போன்றவையும் அடங்கும். Snapchat செயலியில் காட்டப்பட்ட எந்தவொரு பண வழங்கல் தொகைகளும் தோராயமான மதிப்புகளே மேலும் மாற்றத்திற்கு உட்பட்டவை. பேமெண்ட்டின் இறுதித்தொகைகள் உங்கள் பண வழங்கல் கணக்கில் காட்டப்படும்.  

பண வழங்கலை கோருதல்.   $100 USD என்ற பணம் பெறும் வரம்பைப் பூர்த்தி செய்யும் அளவிற்குப் போதுமான படிகங்களை உங்கள் தகுதிபெறும் நடவடிக்கைக்காக நாங்கள் பதிவுசெய்த பிறகு, உங்கள் பயனர் தகவல் பக்கத்தில் உள்ள பொருத்தமான விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து நீங்கள் பணம் வழங்கலை கோரலாம். சட்டத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு, நீங்கள் இந்தப் பணமாக்கல் விதிமுறைகளுக்கு இணங்குவதற்கு உட்பட்டு உங்கள் பணம் பெறும் கணக்கு மூலம் பணம் வழங்கப்படும். 

கவனிக்க: (A) ஓர் ஆண்டு காலத்திற்கு உங்களின் தகுதிபெறும் நடவடிக்கைக்காக எந்தவொரு படிகங்களையும் நாங்கள் பதிவுசெய்யவில்லை எனில், அல்லது (B) முந்தைய பத்தியில் குறிப்பிட்ட வழிமுறையில் பணம் வழங்களுக்கான நீங்கள் செல்லுபடியாகும் கோரிக்கை எதையும் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கவில்லை எனில், — பொருந்தக்கூடிய காலகட்டத்தின் முடிவில் — இந்தப் பணமாக்கல் விதிமுறைகளுக்கு நீங்கள் இணங்குவதற்கு உட்பட்டு, அந்தக் காலகட்டத்தின் முடிவில் உங்கள் தகுதிபெறும் நடவடிக்கைக்காக நாங்கள் பதிவுசெய்த படிகங்களின் அடிப்படையில் உங்கள் பணம் வழங்கல் கணக்கில் நாங்கள் பணத்தை செலுத்துவோம். பொருந்தும் காலகட்டத்தின் முடிவில் , நீங்கள் இந்தப் பணமாக்கல் விதிமுறைகளில் வரையறுக்கப்பட்ட தேவைகளில் திருப்தியடையவில்லை எனில், அந்தத் தகுதிபெறும் நடவடிக்கை தொடர்பான பணம் பெறுதலுக்கு நீங்கள் தகுதிபெறமாட்டீர்கள்.  

Snap, அதன் துணை நிறுவனங்கள் அல்லது இணைப்பு நிறுவனங்கள் அல்லது இந்தப் பணமாக்கல் விதிமுறைகளின் கீழ் பணம் வழங்குபவராகக் கருதப்படும் பணம் வழங்கும் சேவை வழங்குநர்களின் சார்பாக உங்களுக்குப் பேமெண்ட்கள் வழங்கப்படும். Snapஇன் கட்டுப்பாட்டில் இல்லாத ஏதேனும் காரணங்களுக்காக உங்கள் பணம் பெறும் கணக்குக்குப் பணம் பரிமாற்றம் செய்வதில் ஏதேனும் தாமதமோ, தோல்வியோ, செலுத்த முடியாமையோ ஏற்பட்டால் அதற்கு Snap பொறுப்பேற்காது, இந்தப் பணமாக்கல் விதிமுறைகளுக்கு நீங்கள் இணங்காமலிருப்பதும் இதில் அடங்கும். உங்கள் Snapchat கணக்கு மூலம் உங்களைத் தவிர்த்து வேறொருவர் பணம் பெறுதலை கோரினால் அல்லது உங்கள் பணம் பெறும் கணக்குத் தகவல்களைப் பயன்படுத்தி உங்கள் பணத்தை பரிமாற்றம் செய்தால் அதற்கு Snap பொறுப்பல்ல. பணத்திற்கான தொகை அமெரிக்க டாலர்களில் வழங்கப்படும், ஆனால் நீங்கள் உள்ளூர்ப் பணத்தில் பணம் பெறும் கணக்கில் இருந்து பணம் எடுக்கலாம், இது Crystals Payouts வழிகாட்டுதல்களில் விவரிக்கப்பட்டபடி பயன்பாட்டு, நாணய மாற்றம் மற்றும் பரிவர்த்தனைக் கட்டணங்களுக்கும், எங்கள் பணம் வழங்கல் சேவை வழங்குநரின் விதிமுறைகளுக்கும் உட்பட்டதாகும்.  உங்கள் பணம் பெறும் கணக்கில் உள்ள உரிமை கோரப்படாத எந்தவொரு நிதிக்கும் Snap பொறுப்பாகாது.

எங்கள் பிற உரிமைகள் மற்றும் தீர்வுகளுக்கு மேலதிகமாக, சந்தேகத்திற்குரிய தவறான செயல்பாட்டிற்காக (கீழே வரையறுக்கப்பட்ட படி), இந்தப் பணமாக்கல் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதற்காக, தவறுதலாக உங்களுக்குக் கூடுதல் பணம் வழங்கப்பட்டால் அல்லது ஏதேனும் ஒப்பந்தத்தின் கீழ் நீங்கள் எங்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களின் தொகையை ஈடுசெய்வதற்காக எச்சரிக்கை அல்லது முன்னறிவிப்பு இன்றி, சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு, இந்தப் பணமாக்கல் விதிமுறைகளின் கீழ் உங்களுக்கான எந்தவொரு பண வழங்கலை நாங்கள் நிறுத்தி வைக்கலாம், ஈடு செய்யலாம், சரிசெய்யலாம் அல்லது விலக்கி வைக்கலாம். 

சுருக்கமாக: உங்கள் தகுதிபெறும் நடவடிக்கையைக் கண்காணிப்பதற்காகவும், வழங்கப்பட வேண்டிய தொகைகளைக் கணக்கிடுவதற்காகவும் நாங்கள் படிகங்களைப் பயன்படுத்துகிறோம். எங்களின் குறைந்தபட்சப் பணம் வழங்கல் வரம்பு $100 USD ஆகும்.  நீங்கள் இந்த வரம்பை அடைந்ததும், எங்களிடம் பணம் பெறுதலை கோரலாம். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நீங்கள் கோரிக்கை விடுக்கவில்லை என்றால், இந்தப் பணமாக்கல் விதிமுறைகளுக்கு இணங்க பணத்தை வழங்க நாங்கள் முயற்சி எடுப்போம் . நீங்கள் பணத்தை பெற தகுதிபெறவில்லை அல்லது இனி தகுதிபெறமாட்டீர்கள் எனில், பொருந்தும் படிகங்கள் செல்லாததாக ஆக்கப்படும்.  எங்கள் கட்டுப்பாட்டை மீறி ஏற்படும் ஏதேனும் பண வழங்கல்/பெறுதல் சிக்கல்களுக்கு நாங்கள் பொறுப்பாகமாட்டோம்.  இந்தப் பணமாக்கல் விதிமுறைகள் அல்லது எங்களின் பிற ஒப்பந்தங்களை நீங்கள் மீறினால், நாங்கள் உங்கள் பணத்தை நிறுத்தி வைக்கலாம் அல்லது ஈடு செய்யலாம்.

4. வரிகள்

இந்தப் பணமாக்கல் விதிமுறைகளுக்கு இணங்க நீங்கள் பெறும் எந்தவொரு பணம் பெறுதலுக்கு அதனுடன் சம்பந்தப்பட்ட எந்தவொரு அல்லது அனைத்து வரிகள், தீர்வைகள் அல்லது கட்டணங்களுக்கும் நீங்களே முழுப் பொறுப்பும் கடப்பாடும் கொண்டுள்ளீர்கள் என்பதை ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள். உங்களுக்கு வழங்க வேண்டிய பணம்செலுத்துதல்கள், எந்தவொரு பொருந்தக்கூடிய விற்பனை, பயன்பாட்டு, கலால், மதிப்புக் கூட்டப்பட்ட, பொருட்கள் மற்றும் சேவைகள் அல்லது இவை போன்ற வரிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. பொருந்தும் சட்டத்தின் கீழ், உங்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய பணத்தில் இருந்து வரிகள் கழிக்கப்பட வேண்டும் அல்லது பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்றால், Snap, அதன் இணைப்பு நிறுவனங்கள் அல்லது அதன் பண செலுத்தும் சேவை வழங்குநர், உங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையிலிருந்து பொருந்தும் சட்டத்தின்படி அந்த வரிகளைக் கழித்து உரிய வரிவிதிப்பு அதிகாரிகளிடம் செலுத்தலாம். இதுபோன்ற கழித்தல்கள் அல்லது பிடித்தங்களின் காரணமாக குறைக்கப்பட்டு வழங்கப்படும் பணம், இந்தப் பணமாக்கல் விதிமுறைகளின் கீழ் உங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை முழுமையாகச் செலுத்தியதாகக் கருதப்படும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள். செல்லுபடியாகும் பணம் பெறும் கணக்கை அமைப்பதன் ஒரு பகுதியாக, நீங்கள் இந்தப் பணமாக்கல் விதிமுறைகளின் கீழ் தகவல்களை அறிக்கையளித்தல் அல்லது வரிகளைப் பிடித்தம் செய்தல் கடமைகளைப் பூர்த்தி செய்யத் தேவைப்படும் எந்தவொரு படிவங்கள் அல்லது ஆவணங்களையும் Snap, அதன் துணை நிறுவனங்கள், இணைப்பு நிறுவனங்கள் மற்றும் பேமெண்ட் சேவை வழங்குநருக்கு நீங்கள் வழங்க வேண்டும்.

சுருக்கமாக: உங்களுக்கு செலுத்த வேண்டிய பணம் பெறுதல்கள் தொடர்பான வரிகள், தீர்வைகள் அல்லது கட்டணங்கள் அனைத்திற்கும் நீங்களே பொறுப்பாவீர்கள். பொருந்தும் சட்டத்தின்படி நாங்கள் அவற்றைக் கழிக்கலாம். இந்த நோக்கங்களுக்காகத் தேவைப்படும் எந்தவொரு படிவங்கள் அல்லது ஆவணங்களையும் நீங்கள் வழங்க வேண்டும்.

5. விளம்பரப்படுத்துதல்

Snap சேவை நிபந்தனைகளில்குறிப்பிட்டுள்ளபடி, சேவைகளில் விளம்பரங்கள் இருக்கலாம். திட்டத்தில் உங்கள் பங்கேற்பு தொடர்பாக, நீங்கள் பதிவிடும் பொது உள்ளடக்கத்தில் எங்கள் தனிப்பட்ட விருப்பப்படி விளம்பரங்களை விநியோகிக்க நீங்கள் எங்களை, எங்கள் இணைப்பு நிறுவனங்களை, எங்கள் மூன்றாம் நபர் கூட்டாளர்களை ஈடுபடுத்துகிறீர்கள் என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இந்தப் பணமாக்கல் விதிமுறைகளை ஒப்புக்கொண்டு அவற்றைக் கடைப்பிடித்து, இந்தப் பணமாக்கல் விதிமுறைகளுக்கு உட்பட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக நீங்கள் சமர்ப்பிக்கும் பொது உள்ளடக்கத்திற்கான அணுகலைத் தொடர்ந்து Snapக்கு வழங்குவதன் மூலம், அத்தகைய விளம்பரங்களை விநியோகிப்பதற்கு உதவ நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். எங்களின் தனிப்பட்ட விருப்பப்படி, இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக நீங்கள் சமர்பிக்கும் பொது உள்ளடக்கத்துடன் தொடர்புடையதாக விநியோகிக்கப்படும் விளம்பரங்களின் வகை, வடிவம் மற்றும் நிகழ்வெண்ணிக்கை உட்பட, சேவைகளில் பகிரப்படும் விளம்பரங்களின் அனைத்து அம்சங்களையும் நாங்கள் தீர்மானிப்போம். ஏதேனும் காரணத்திற்காக, நீங்கள் பதிவிடும் பொது உள்ளடக்கத்தில் அல்லது அதனுடன் சேர்த்து விளம்பரங்களைக் காட்டாமல் இருப்பதற்கு எங்கள் விருப்பப்படி நாங்கள் உரிமை கொண்டுள்ளோம். நீங்கள் அமெரிக்காவிற்கு வெளியே வசிக்கிறீர்கள் எனில், ஏதேனும் சேவைகளைச் செய்யும்போதும் உங்கள் தகுதிபெறும் நடவடிக்கையுடன் தொடர்புடைய விளம்பரங்களை விநியோகிக்க உதவும்போதும் நீங்கள் (மற்றும் உங்கள் கணக்கில் இருந்து பதிவிடும் கூட்டாளர், பங்களிப்பாளர் அல்லது நிர்வாகி) அமெரிக்காவிற்கு வெளியே தகுதிபெறும் பிராந்தியத்திற்குள் நேரடியாக வசிப்பராக இருக்க வேண்டும்.

சுருக்கமாக: இத்திட்டம் சம்பந்தமாக நீங்கள் Snapchatஇல் பதிவிடும் உள்ளடக்கத்தில் விளம்பரங்களை விநியோகிக்க நீங்கள் எங்களிடம் கேட்கிறீர்கள். உள்ளடக்கத்தில் விளம்பரங்களை விநியோகிப்பதா வேண்டாமா என்பதை நாங்கள் தீர்மானிக்கிறோம். நீங்கள் அமெரிக்காவிற்கு வெளியே வசிக்கிறீர்கள் எனில், தகுதிபெறும் நடவடிக்கையைச் செய்யும்போது நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பது முக்கியமாகும். 

6. ஈட்டுறுதி

சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக, Snapchatஇல் நீங்கள் பதிவிடும் உள்ளடக்கம் (Snap சேவை நிபந்தனைகளில் வரையறுக்கப்பட்டபடி) தொடர்பான ஏதேனும் அல்லது அனைத்துப் புகார்கள், கட்டணங்கள், சேதங்கள், இழப்புகள், விலைகள், பொறுப்புகள், செலவுகள் (வழக்கறிஞர் கட்டணங்கள் உட்பட) சம்பந்தமாக, Snap, எங்கள் இணைப்பு நிறுவனங்கள், இயக்குநர்கள், அதிகாரிகள், பங்குதாரர்கள், ஊழியர்கள், உரிமதாரர்கள் ஆகியோரைச் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு ஏதேனும் அல்லது அனைத்து உரிமைகோரல்களில் இருந்தும் ஈட்டுறுதி வழங்கிப் பாதுகாப்பீர்கள், இழப்பிற்குப் பொறுப்பற்றவராக வைப்பீர்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்கள். இதில், சேவைகளில் நீங்கள் பதிவிடும் உள்ளடக்கம் விநியோகிக்கப்படுவது தொடர்பாக ஏதேனும் சங்கங்கள், மன்றங்கள் (உரிமங்கள், மீதத் தொகைகள், மறுபயன்பாட்டுக் கட்டணங்கள் மட்டுமல்லாது இன்ன பிறவும்), வழங்குநர்கள், இசைக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் (ஒத்திசைவு உரிமக் கட்டணங்கள் மட்டுமல்லாது இன்ன பிறவும்), பொதுக் கலை நிகழ்ச்சி சமூகங்கள் மற்றும் கலை நிகழ்வு உரிம நிறுவனங்கள் (எ.கா., ASCAP, BMI, SACEM, SESAC), நடிகர்கள், ஊழியர்கள், சார்பற்ற ஒப்பந்ததார்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் பிற உரிமதாரர்களுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய தொகைகளைச் செலுத்தத் தவறினீர்கள் என்ற உரிமைகோரல் தொடர்பாக அதன் விளைவாக ஏற்படுபவையும் அடங்கும்.

சுருக்கமாக: நீங்கள் பதிவிடும் உள்ளடக்கம் தொடர்பாக பிறருக்குச் செலுத்த வேண்டிய பணத்திற்கு நீங்களே பொறுப்பாவீர்கள்.  நீங்கள் அதைச் செலுத்தத் தவறிய காரணத்தால் எங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது எனில், நீங்கள் எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

7. தவறான நடவடிக்கை

தகுதிபெறும் நடவடிக்கையா இல்லையா என்பதை அல்லது அதற்கான கட்டண தொகையைத் தீர்மானிக்கும்போது, நீங்கள் பதிவிடும் உள்ளடக்கத்தின் பார்வைகளின் (அல்லது பார்வையாளர் அல்லது ஈடுபாட்டின் பிற அளவீடுகள்) எண்ணிக்கையைச் செயற்கையாக அதிகரிக்கும் நடவடிக்கையை நாங்கள் விலக்கலாம் ("தவறான நடவடிக்கை"). தவறான நடவடிக்கை என்பது Snapஆல் அதன் தனிப்பட்ட விருப்பப்படி தீர்மானிக்கப்படும், இதில் ஸ்பேம், கிளிக்குகள், வினவல்கள், பதில்கள், விருப்பங்கள், பிடித்தவை, பின்தொடர்தல்கள், சந்தாக்கள், பதிவுகள் அல்லது ஈடுபாட்டின் பிற அளவீடுகள் போன்றவையும் அடங்கும்:

  • இவை ஏதேனும் நபர், கிளிக் ஃபார்ம் அல்லது அதுபோன்ற சேவைகள், பாட், தானியக்க நிரல்கள் அல்லது அதுபோன்ற சாதனங்களால் உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம். இதில் உங்கள் மொபைல் சாதனம், உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மொபைல் சாதனங்கள் அல்லது புதிய அல்லது சந்தேகிக்கும் கணக்குகளை உடைய மொபைல் சாதனங்களில் இருந்து வரும் ஏதேனும் கிளிக்குகள், பதிவுகள் அல்லது செயல்பாடுகளும் அடங்கும்; 

  • மூன்றாம் தரப்பினருக்கு பணம் அல்லது பிற தூண்டுதல்களை வழங்கி, பிரதிநிதித்துவம் அல்லது பார்வைகளை வர்த்தகம் செய்தல் போன்றவற்றின் மூலம் உருவாக்கப்படலாம்; 

  • இந்தப் பணமாக்கல் விதிமுறைகளை மீறும் நடவடிக்கையின் மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்; மற்றும் 

  • மேலே பட்டியலிடப்பட்ட ஏதேனும் நடவடிக்கையுடன் இணைக்கப்பட்டதாக இருக்கலாம்.

சுருக்கமாக: நீங்கள் பதிவிடும் உள்ளடக்கத்தின் பார்வைகள் மற்றும் அளவீடுகளை ஏதாவது வகையில் செயற்கையாக அதிகரித்தால், நீங்கள் பணம் பெறுதலுக்கு தகுதிபெற மாட்டீர்கள்.

8. நிறுத்துதல்

திட்டத்தில் பங்கேற்க நீங்கள் இந்தப் பணமாக்கல் விதிமுறைகளுக்கு இணக்கமாக இருக்க வேண்டும். இந்தப் பணமாக்கல் விதிமுறைகளுக்கு நீங்கள் இணங்கவில்லை எனில், நீங்கள் இத்திட்டத்தில் பங்கேற்க முடியாது, நாங்கள் பொருத்தமானதாகக் கருதும் பிற நடவடிக்கைகளுடன் சேவைக்கான உங்கள் அணுகலை இடைநிறுத்தவோ அல்லது நிரந்தரமாக ரத்துசெய்யவோ நாங்கள் உரிமை கொண்டுள்ளோம். இணங்காததற்காக இந்தப் பணமாக்கல் விதிமுறைகளின் கீழ், சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு எந்தவொரு பேமெண்ட்டையும் நிறுத்தி வைக்க (மற்றும் அதைப் பெற நீங்கள் தகுதிபெறமாட்டீர்கள் என ஒப்புக்கொள்கிறீர்கள்) நாங்கள் உரிமைகொண்டுள்ளோம். ஏதேனும் ஒரு கட்டத்தில் இந்தப் பணமாக்கல் விதிமுறைகளின் ஏதேனும் ஒரு பகுதியை நீங்கள் ஒப்புக் கொள்ளவில்லை எனில், பொருந்தும் சேவைகளைப் பயன்படுத்துவதை உடனடியாக நீங்கள் நிறுத்த வேண்டும்.   

பொருந்தும் சட்டங்களால் அனுமதிக்கப்படும் அதிகபட்ச அளவிற்கு, எங்கள் தனிப்பட்ட விருப்பப்படி, முன்னறிவிப்பு இல்லாமல் அல்லது உங்களுக்குக் கடமைப்படாமல், எந்தவொரு காரணத்திற்காகவும், திட்டம் அல்லது ஏதேனும் சேவைகளை எந்த நேரத்திலும் நிறுத்த, மாற்றியமைக்க, வழங்காமல் இருக்க, அல்லது வழங்குவதை அல்லது ஆதரிப்பதை நிறுத்த நாங்கள் உரிமை கொண்டுள்ளோம். மேற்கூறியவை எப்போதும் அல்லது ஏதேனும் குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்கும் என்று அல்லது ஏதேனும் குறிப்பிட்ட கால அளவுக்கு மேற்கூறியவற்றை எங்களால் தொடர்ந்து வழங்கமுடியும் என்று நாங்கள் உத்திரவாதம் அளிக்கவில்லை. எந்தக் காரணத்திற்காகவும் திட்டம் அல்லது ஏதாவது சேவையின் தொடர்ச்சியான கிடைக்கும் தன்மையை நீங்கள் சார்ந்திருக்கக் கூடாது.

சுருக்கமாக: ஏதேனும் காரணத்திற்காக, திட்டத்தில் உங்கள் பங்கேற்பை நாங்கள் கட்டுப்படுத்தலாம் அல்லது நிறுத்தலாம் அல்லது எப்போது வேண்டுமானாலும் திட்டத்தை மாற்றியமைக்கலாம், இடைநிறுத்தலாம் அல்லது நிறுத்தலாம்.

9. ஊழல் தடுப்பு; வர்த்தகக் கட்டுப்பாடு

நீங்களும் Snapஉம் (இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக, "தரப்புகள்") பொருந்தும் ஊழல் தடுப்புச் சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்குமுறைகள் அனைத்திற்கும் இணங்குவதற்கும், அந்தந்தத் தரப்புகளின் சார்பாகச் செயல்படும் அனைவரையும் இணங்க வைப்பதற்கும் ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த இணக்கம் என்பதில் பின்வருவன மட்டுமல்லாது இன்ன பிற விஷயங்களும் அடங்கும்: தரப்புகளும் அவற்றின் சார்பாகச் செயல்படும் எந்தவொரு நபரும் சாதகமாகச் செயல்படத் தூண்டுவதற்காக அல்லது வெகுமதியாக, தவறை மன்னிப்பதற்காக அல்லது செல்வாக்கைக் காட்டுவதற்காக பணம் அல்லது ஏதேனும் மதிப்புமிக்க விஷயத்தை மற்றவர்களுக்கு கொடுத்தல், கொடுப்பதாக உறுதியளித்தல், கொடுக்க ஒப்புக் கொள்ளுதல், நேரடியாக அல்லது மறைமுகமாகக் கொடுப்பதை அங்கீகரித்தல். இந்தப் பணமாக்கல் விதிமுறைகளில் என்ன வழங்கப்பட்டிருந்தாலும், மற்ற தரப்பு இந்த விதிமுறைகளில் வழங்கப்பட்டவற்றை மீறினால், இதனை மீறாத தரப்பு அறிவிப்பு வழங்கி இந்தப் பணமாக்கல் விதிமுறைகள் ஒப்பந்தத்தை நிறுத்திக் கொள்ளலாம்.

இந்தப் பணமாக்கல் விதிமுறைகளின் கீழ் தங்களது செயல்பாடுகள் பொருந்தும் பொருளாதாரத் தடைகள், ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள், புறக்கணிப்பு எதிர்ப்புச் சட்டங்கள் ஆகிய அனைத்திற்கும் இணங்குவதாக அமையும் என தரப்புகள் ஒப்புக்கொள்கின்றனர். தரப்புகள் பின்வருனவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி உத்திரவாதம் அளிக்கிறார்கள் (1) எந்தவொரு தரப்பும் (அல்லது இந்தப் பணமாக்கல் விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ள ஏதேனும் தாய் நிறுவனம், துணை நிறுவனம் அல்லது இணைப்பு நிறுவனங்கள்) சம்பந்தப்பட்ட ஏதேனும் அரசாங்க அமைப்பால் பராமரிக்கப்படும் தடைசெய்யப்பட்ட தரப்புப் பட்டியலில் இல்லை. எடுத்துக்காட்டாக, யூ.எஸ். பிரத்தியேகமாகத் தடைவிதிக்கப்பட்ட நபர்களின் பட்டியல் மற்றும் யூ.எஸ். விதித்த அயல்நாட்டுத் தடைகளை மீறியவர்களின் பட்டியல் (யூ.எஸ். கருவூலத் துறையின் வெளிநாட்டுச் சொத்துக்கள் அலுவலகத்தால் நிர்வகிக்கப்படுவது) மற்றும் மறுக்கப்பட்ட தரப்புகளின் பட்டியல், சரிபார்க்கப்படாத நிறுவனங்கள் பட்டியல் (தொழில் மற்றும் பாதுகாப்பிற்கான அமெரிக்கப் பணியகத்தால் நிர்வகிக்கப்படுவது) போன்றவை இதில் அடங்கும் ("தடைசெய்யப்பட்ட தரப்புப் பட்டியல்"), மற்றும் (2) தடைசெய்யப்பட்ட தரப்புப் பட்டியலில் உள்ளவர்களுக்குச் சொந்தமானவையல்ல அல்லது அவர்களால் கட்டுப்படுத்தப்படுபவையல்ல. இந்தப் பணமாக்கல் விதிமுறைகளைச் செயல்படுத்தும்போது, அந்தத் தரப்புகள் தடைசெய்யப்பட்ட தரப்புப் பட்டியலில் உள்ள எவருடனும் அல்லது பொருந்தும் பிற தடையாணைகளால் வர்த்தகத் தடைவிதிக்கப்பட்ட நாட்டுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ வணிகத்தில் ஈடுபடாது அல்லது அவர்களுக்குச் சரக்கு, சேவைகளை வழங்காது. இந்தப் பணமாக்கல் விதிமுறைகள் தொடர்பான செயல்பாடு அல்லது செயல்படாமை ஏதேனும் பொருந்தும் அதிகார எல்லையின் சட்டங்களை மீறினால் Snap அதனைச் செய்ய அல்லது செயல்படாமல் இருக்கத் தேவையில்லை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

நீங்கள் (அல்லது உங்கள் பெற்றோர்/சட்டப்பூர்வப் பாதுகாவலர்(கள்) அல்லது வணிக நிறுவனம், பொருந்தினால்) எங்கள் அல்லது எங்கள் பேமெண்ட் சேவை வழங்குநரின் இணக்க மீளாய்வில் தேர்ச்சி பெறவில்லை எனில், நீங்கள் பணம் பெறுதலுக்கு தகுதிபெற மாட்டீர்கள். இந்த மீளாய்வில், ஏதேனும் அரசாங்க அதிகார அமைப்பின் தடைசெய்யப்பட்ட தரப்புப் பட்டியலில் நீங்கள் இடம்பெற்றுள்ளீர்களா என்று சரிபார்ப்பது மட்டுமல்லாமல் இன்ன பிறவும் அடங்கும். இந்தப் பணமாக்கல் விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ள பிற பயன்பாடுகளுடன் கூடுதலாக, உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், எங்களின் இணக்க மீளாய்வுக்காகவும், பணம் பெறும் செயல்முறையை நிறைவுசெய்வதற்காகவும், நீங்கள் எங்களுக்கு வழங்கிய தகவல்களை மூன்றாம் தரப்பினருடன் பகிரலாம்.  

சுருக்கமாக: மேலே விரிக்கப்பட்ட படி பொருந்தும் ஊழல் தடுப்புச் சட்டங்கள், பொருளாதாரத் தடைகள், ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள், புறக்கணிப்பு எதிர்ப்புச் சட்டங்கள் போன்றவற்றிற்கு நீங்களும் Snapஉம் இணங்க வேண்டும். பணம் பெறுதலுக்கு தகுதிபெற நீங்கள் இணக்க மீளாய்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

10. மற்றவை

உங்கள் Snapchat பயனர் கணக்கில் உள்ளடக்கத்தைப் பதிவிட அல்லது உங்கள் Snapchat பயனர் கணக்கின் கீழ் துணைக் கணக்குகளை உருவாக்க சேவையின் பிற பயனர்களுக்கு நீங்கள் அணுகல் வழங்கினால், உங்கள் கணக்கிற்கான அணுகல் நிலைகளை அமைப்பதும் ரத்துசெய்வதும் முற்றிலும் உங்களின் பொறுப்பாகும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் கணக்கின் உள்ளடக்கம் மற்றும் நடவடிக்கைகள் அனைத்திற்கும் நீங்களே பொறுப்பாவீர்கள், இதில் நிர்வாகிகள், கூட்டாளர்கள், பங்களிப்பார்களின் செயல்பாடும் அடங்கும். நாங்கள் இந்தப் பணமாக்கல் விதிமுறைகளை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டியிருக்கலாம். இந்தப் பணமாக்கல் விதிமுறைகளில் செய்யப்படும் மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை எனில், உங்களுக்கு நியாயமான கால இடைவெளியில் முன்னதாக அறிவிப்பு வழங்குவோம் (மாற்றங்கள் விரைவாகத் தேவைப்பட்டால் தவிர, எடுத்துக்காட்டாக, சட்டத் தேவைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அல்லது நாங்கள் புதிய சேவைகள் மற்றும் அம்சங்களை அறிமுகம் செய்யும் போது). மாற்றங்கள் செயல்பாட்டிற்கு வந்த பிறகும் நீங்கள் இத்திட்டத்தில் தொடர்ந்து பங்கேற்றால், அதை உங்கள் ஒப்புதலாக நாங்கள் கருதுவோம். எந்த நேரத்திலும் இந்தப் பணமாக்கல் விதிமுறைகளில் செய்யப்படும் ஏதேனும் மாற்றங்களை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை எனில், திட்டத்தில் பங்கேற்பதை நீங்கள் நிறுத்த வேண்டும். இந்தப் பணமாக்கல் விதிமுறைகள் எந்தவொரு மூன்றாம் தரப்புப் பயனாளி உரிமைகளையும் உருவாக்கவோ வழங்கவோ இல்லை. இந்தப் பணமாக்கல் விதிமுறைகளில் உள்ள எதையும், உங்களுக்கும் Snap அல்லது Snapஇன் இணைப்பு நிறுவனங்களுக்கும் இடையிலான ஓர் இணைப்பு முயற்சி, முதன்மையாளர்-முகவர் அல்லது பணி உறவைக் குறிப்பதாகப் புரிந்துகொள்ளக்கூடாது. இந்தப் பணமாக்கல் விதிமுறைகளில் உள்ள ஒரு விதியை நாங்கள் அமல்படுத்தவில்லை என்றால், அது ஒரு விலக்காகக் கருதப்படாது. உங்களுக்கு வெளிப்படையாக வழங்கப்படாத பிற உரிமைகள் அனைத்தையும் நாங்கள் கொண்டுள்ளோம். இந்தப் பணமாக்கல் விதிமுறைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவையாகும், இந்தப் பணமாக்கல் விதிமுறைகளின் ஏதேனும் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பு ஆங்கிலப் பதிப்புடன் முரண்படும் இடங்களில், ஆங்கிலப் பதிப்பே கட்டுப்படுத்துவதாக அமையும். இந்தப் பணமாக்கல் விதிமுறைகளின் ஏதேனும் ஒரு விதியானது செயல்படுத்த முடியாததாகக் கண்டறியப்பட்டால், அந்த விதி இந்தப் பணமாக்கல் விதிமுறைகளில் இருந்து துண்டிக்கப்படும், அது மீதமுள்ள எந்தவொரு விதிகளின் செல்லுபடியாகும் தன்மை மற்றும் செயல்படுத்தக்கூடிய தன்மையையும் பாதிக்காது. இந்தப் பணமாக்கல் விதிமுறைகளின் பிரிவு 6, 9, 10 ஆகியவை மற்றும் ஏதேனும் விதிகள் இயல்பிலேயே நிரந்தரமாக நீடிப்பதற்கானவை, இந்தப் பணமாக்கல் விதிமுறைகள் காலாவதியானாலும் அல்லது நிறுத்தப்பட்டாலும்கூட அவை தொடர்ந்திருக்கும்.

சுருக்கமாக: உங்கள் கணக்கில் நடக்கும் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் நீங்களே பொறுப்பாவீர்கள். நீங்கள் இந்தப் பணமாக்கல் விதிமுறைகளை அவ்வப்போது மீளாய்வு செய்ய வேண்டும் ஏனெனில் நாங்கள் இவற்றைப் புதுப்பிக்கலாம். இந்தப் பணமாக்கல் விதிமுறைகள் உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஏதேனும் வேலைவாய்ப்பு உறவை உருவாக்காது. இந்தப் பணமாக்கல் விதிமுறைகளின் ஆங்கிலப் பதிப்பே கட்டுப்படுத்துவதாக அமையும், இந்த ஆவணம் காலாவதியானாலும் அல்லது ரத்துசெய்யப்பட்டாலும்கூட சில விதிகள் செயல்பாட்டில் இருக்கும்.